மன்னனை தண்டிக்க உருவெடுத்த மாசாணியம்மன்...!

கோவை மாவட்டம், ஆனைமலைப் பகுதியில் உள்ளது மாசாணியம்மன் கோவில். தவறு செய்யாத பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை என மன்னனை தண்டிக்கும் பொருட்டு, அந்த இடத்திலே மாசாணியம்மனாக உருவெடுத்ததாக சொல்லப்படுகிறது.
 | 

மன்னனை தண்டிக்க உருவெடுத்த மாசாணியம்மன்...!

கோவை  மாவட்டத்தில் பொள்ளாச்சியை அடுத்த சேத்துமடை செல்லும் பாதையில் ஆனைமலைப் பகுதியில் அமைந்துள்ளது மாசாணியம்மன் கோவில். அம்மன் கோயில்களில் பலராலும் அறியப்பட்ட கோயிலாக மாசாணியம்மன் கோயில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த திருக்கோயிலானது மயான மண்ணில் அமைந்திருப்பதாலும், மூலவரான அருள்மிகு அம்மனும் மயான மண்ணில் குடிகொண்டு விளங்குவதாலும் மாசாணியம்மன் எனும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இது ஆதிபராசக்தியின் கோயில் தான் என்று பரவலாகவே மக்களால் நம்பப்டுகிறது.

மன்னனை தண்டிக்க உருவெடுத்த மாசாணியம்மன்...!

பதினேழு அடி நீளமுள்ள பெரிய உருவமாக மேற்கில் தலை வைத்து கிழக்கு நோக்கி கால்களை நீட்டிப் படுத்த நிலையில் காட்சி தருகின்றாள் மாசாணி அம்மன்.  அம்மனின் கால்மாட்டில் அசுரன் ஒருவனின் உருவம் உள்ளது. இதனையடுத்து அருகிலேயே  கிழக்கு நோக்கி இரண்டடி உயரமுள்ள மாசனியம்மனின் திருவுருவம் ஒன்றும் நின்ற நிலையில் காட்சியளிக்கிறது. இந்த திருக்கோயில்  வரலாற்றுச்  சிறப்புமிக்கதாகும். இலங்கையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சூழலில் ராமபிரான் ஆனைமலைக்கு வந்து சென்றதாக  வழிவழியாகக்  கூறப்பட்டு வரும் வாய்மொழிக் கதையும்  கவனத்தில்  கொள்ளத்தக்கதாக அமைகின்றது.

மன்னனை தண்டிக்க உருவெடுத்த மாசாணியம்மன்...!

உப்பாற்றின் வடகரையில் இருந்த  மயானத்தில்  மண்ணையெடுத்து அதைக்கொண்டு  சக்தியுருவம்  ஒன்றை மகுடாசுரன் என்ற அரக்கனை, அம்மன் தனது பாதங்களால் அழுத்திய  நிலையில்  அருள் பாலித்து சக்தி  வழிபாடு செய்துள்ளார்.  ஆதிபராசக்தி  அவர் முன்னிலையில் மயான ருத்திரியாகத் தோன்றி ஸ்ரீராம அவதாரத்தின் நோக்கம் நிறைவேறுவதற்குரிய  வரமளித்து மறைந்துள்ளாள்.  

மன்னனை தண்டிக்க உருவெடுத்த மாசாணியம்மன்...!

குறுநில மன்னனுக்கு சொந்தமான மாந்தோப்பில் ஒரு மாங்கனியானது ஆற்றில் விழுந்ததாகவும், அந்த மாங்கனியை ஒரு பெண் எடுத்து திண்ண முற்ப்பட்ட போது மன்னன்  அந்த பெண்ணை வாளால் அடித்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் தவறு செய்யாத பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை என மன்னனை தண்டிக்கும் பொருட்டு, அந்த இடத்திலே மாசாணியம்மனாக உருவெடுத்ததாக சொல்லப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP