'மெட்ராஸ் டே' கொண்டாட்டங்கள் ஆரம்பம்

சென்னை விவேகானந்தர் இல்லத்தில் மெட்ராஸ் வாரம் கொண்டாட்டங்கள் துவங்கின. விவேகனந்தர் இல்லத்தில் இருந்து மெரினா வரை செல்ல டப்பில் டக்கர் பஸ் அமைத்துள்ளனர். ஆகஸ்ட் 26 வரை இந்த டப்பில் டக்கர் பஸ்ஸில் மக்கள் இலசவமாக பயணிக்கலாம்.
 | 

'மெட்ராஸ் டே' கொண்டாட்டங்கள் ஆரம்பம்

சென்னை விவேகானந்தர் இல்லத்தில் மெட்ராஸ் வாரம் கொண்டாட்டங்கள் நேற்று துவங்கின. விவேகனந்தர் இல்லத்தில் இருந்து மெரினா வரை செல்ல டப்பில் டக்கர் பஸ் ஒன்றை அமைத்துள்ளனர்.சென்னையின் பாரம்பரியம் இந்த டப்பில் டக்கர் பஸ் என்றும் சொல்லலாம்.

'மெட்ராஸ் டே' கொண்டாட்டங்கள் ஆரம்பம்

நேற்று காலை 8 மணி அளவில் இந்த டப்பில் டக்கர் பேருந்திற்கு கொடி  அசைத்து 'மெட்ராஸ் டே' கொண்டாட்டங்களை தமிழ் கலாச்சார அமைச்சர் கா. பாண்டியராஜன் ஆரம்பித்து வைத்தார். ஆகஸ்ட் 26 வரை இந்த டப்பில் டக்கர் பஸ்ஸில் மக்கள் இலசவமாக பயணிக்கலாம்.  இந்த பஸ் மெரினாவை சுற்றியுள்ள பகுதிகளில்  காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றி திரியும்.    இந்தியன் எக்ஸ்பிரஸ் உடன் இணைந்து  ஏ.எம்.என் க்ளோபல் குரூப் முக்கிய பிரமுகர் டாக்டர் ஆர்ஜெ ராம்நாராயணாவும் இந்த விழாவில் முக்கிய பங்கு அளித்துள்ளார். வருங்கால இளைஞர்களின் படிப்பிற்காக ஒரு திரைப்படமும் இயக்கியுள்ளார் இவர். 'ஸ்கூல் கேம்பஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் விளம்பர வேலைகளை இந்த விழாவில் செய்ய அந்த படத்தின் நடிகர்களும் "மெட்ராஸ் டே" கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். மேலும் இந்த வருடம் 379ம் மெட்ராஸ் டே என்பதால் 379 கிலோ கேக்கை வெட்டி கொண்டாட்டங்கள்  தொடங்கியது.  பல ஆர்வமுள்ள இளைஞர்களும், என்.ஜி.யோ குழுக்களும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

'மெட்ராஸ் டே' கொண்டாட்டங்கள் ஆரம்பம்

'மெட்ராஸ் டே' கொண்டாட்டங்கள் ஆரம்பம்

புனித ஜார்ஜ் கோட்டை, நேப்பியர் பாலம், எல்ஐசி கட்டிடம், ஸ்பென்சர் பிளாசா,எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஃபீனிக்ஸ் மால் எனச் சென்னையின் அடையாளங்கள் மாறிக்கொண்டேவரும் நிலையில் மெட்ராஸ் என்ற பெயரை யாராலும் மறந்துவிட முடியாது. கடந்த 2004ம் வருடம் முதல் ஆகஸ்ட் 22 'மெட்ராஸ் டே' என்று சென்னை மக்களால் கோலாகலமாகவும் உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP