உள்ளாட்சி தேர்தல்: தனித்துப் போட்டியிடுவது தவறு அல்லவே

உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தனித்து போட்டியிட்டு தங்கள் பலத்திற்கு ஏற்ப வெற்றி பெறுவதது தான் எதிர்காலத்தில் சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் அக்கட்சிகள் தனித்து போட்டியிட தன்னம்பிக்கையை கொடுக்கும். இதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவது தவறு அல்ல. கட்சியின் கட்டாயம்.
 | 

உள்ளாட்சி தேர்தல்: தனித்துப் போட்டியிடுவது தவறு அல்லவே

‛தேன் நிலவு முடிந்தது இனி குடும்பம் நடத்த வேண்டும்’ என்று கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்ட போது, அண்ணாதுரை கூறினார். அதற்கு இணையாக லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட திமுக கூட்டணி முடிவுக்கு வரும் நிலை உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு தேர்தலின் போது திமுக காங்கிரஸ் கூட்டணி முறிவுக்கு இலங்கை தமிழர் பிரச்னையை தேடி கண்டு பிடித்து காரணமாக கூறப்பட்டது. 

அந்த முறிவு இருகட்சிகளுக்கும் தோல்வியை தந்தது. அந்த காரணத்தால் இந்த முறை திமுக காங்கிரஸ் லோக்சபா தேர்தலுக்கு ஒரு சில ஆண்டுகள் முன்பாகவே சேர்ந்து குடும்பம் நடத்திவிட்டு, தேர்தலை சந்தித்தது. இன்னொருபக்கம், அதிமுகவின் இரட்டை தலைமை, மோடி எதிர்ப்பு, தேமுதிக நடத்திய அரசியல் வியாபாரம், தொடக்கத்தில் இருந்தே திட்டிவிட்டு கடைசி நேரத்தில் பாஜக கூட்டணி என்று வெற்றி பெறுவதற்கான எந்த நிலைப்பாடும் இல்லாத அதிமுக கூட்டணி. இதன் காரணமாக திமுக கூட்டணி புதுச்சேரியை சேர்த்து 38 இடங்களில் வெற்றி பெற்றது.

அதிமுக கூட்டணியினர் வழக்கமாக வெற்றி பெறும் இடங்கள் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டதாக தான் இருக்கும். இந்த முறை அந்த இடங்களிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்று இருக்கும். ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் ஐயோ பாவம். அவர் ஓபிஎஸ் மகன் போட்டியிடாவிட்டால் வெற்றி பெற்று இருப்பார்.

இனி சட்டசபைத் தேர்தலில் தான் கூட்டணி தேவை. அதற்கு முன்பாகவே உள்ளாட்சித் தேர்தல் வரும். இந்த தேர்தல் ஒவ்வொரு கட்சித் தொண்டர்களுக்கும் அதிகாரம் அளிக்கும் தேர்தல். தொண்டர்கள் அனைத்து விதத்திலும் வலுவாக இருக்கும் போது தான் கட்சியும் வலிமையாக இருக்கும். உள்ளூரில் இருக்கும் மரியாதை தான் இந்த தேர்தல் வெற்றிக்கு கட்சிகளைத் தாண்டி காரணமாக அமையும். 

உள்ளாட்சி தேர்தல்: தனித்துப் போட்டியிடுவது தவறு அல்லவே

அனைத்து கட்சிகளிலும் வார்டுகள் தோறும் செல்வாக்கு பெற்ற தொண்டர்கள் இருப்பார்கள். இதனால் இந்த தேர்தலில் கூட்டணி என்பது சம்பந்தப்பட்ட கட்சிக்கு இழப்பாக தான் இருக்குமே தவிர்த்து பலமாக இருக்காது.

இது போன்ற பல நிலைப்பாடுகள் தான் உதயநிதி ஸ்டாலினை திமுக தனித்து போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவைத்தது. இது திமுக காங்கிரஸ் கூட்டணியின் கலகக் குரலாக ஒலித்தாலும் தொண்டர்கள் விருப்பமாக பார்க்கப்பட்டது. இந்த குரலுக்கு ஆதரவு குரலும் திருச்சியில் இருந்தே ஒலித்தது. 

முன்னாள் அமைச்சர் நேரு கூட உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும், தமிழகம் முழுவதும் கூட்டணி அமைந்தாலும், தனது எல்லையான திருச்சி மாவட்டத்தில் தனித்து போட்டியிட வேண்டும் என்று குரல் எழுப்பினார். மனதில் பட்டதை பேசும் நேரு, திமுககாரன் குச்சி ஐஸ்சை பிடித்துக் கொண்டு தெருவில் நிற்பானா என்று ஆசையை மட்டும் அல்ல தொண்டனின் எண்ணத்தை தலைமைக்கு ஆவேசமாக வெளிப்படுத்தினார். அவர் குரலுக்கு கிடைத்த ஆதரவே தொண்டர்கள் எந்த எண்ணத்தில் இருக்கிறார்கள் என்று வெளிப்படுத்தியது.

திருநாவுக்கரசர், உட்பட ஒரு சில காங்கிரஸ் பிரமுகர்களும் லோக்சபா தேர்தலுக்கு பின்னர் நீயா, நானா என்ற ரீதியில் பேசி வருகின்றனர். அவர்கள் ஆதரவாளர்களை தக்க வைக்க வேண்டும் என்ற நிலையில் தான் இப்படிப்பட்ட கருத்துக்கள் வெளிப்பட்டன. உதயநிதி, நேரு ஆகியோரின் கருத்து காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்புகளை அடக்கி இருக்கலாம். ஆனால் அது எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வெளியே கிளம்பலாம்.  

அப்படி கிளம்பும் போது காங்கிரஸ் கட்சியிலும் அதிகமான தொண்டர்கள் வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கும். திமுக கூட்டணி மட்டும் அல்ல அதிமுக கூட்டணியிலும் தனித்துப் போட்டியிடுவது தான் நல்லது. அதிகபட்சம் ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை ஓட்டுகள் கொண்ட பகுதியிலேயே தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியாதவர்கள் கட்சி நடத்தி என்ன பலன்.

உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தனித்து போட்டியிட்டு  தங்கள் பலத்திற்கு ஏற்ப வெற்றி பெறுவதது தான் எதிர்காலத்தில் சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் அக்கட்சிகள் தனித்து போட்டியிட தன்னம்பிக்கையை கொடுக்கும். இதன் காரணமாக  உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவது தவறு அல்ல. கட்சியின் கட்டாயம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP