வாழ்க ஜனநாயகம்... வளர்க அரசியல் மாண்பும், நீதித்துறையும்!

அரசின் விளக்கத்தை கேட்டு, நீதிமன்றமும் அதற்கு செவி சாய்த்தது, தமிழக அரசியல் மற்றும் நீதித்துறையின் உயரிய மாண்பை விளக்கியுள்ளது.
 | 

வாழ்க ஜனநாயகம்... வளர்க அரசியல் மாண்பும், நீதித்துறையும்!

உலகில், இடதுசாரிகள், சர்வாதிகள் ஆட்சி செய்யும் நாடுகளில், அரசு முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டே ஆக வேண்டியது கட்டாயம். அவற்றை நீதிமன்றங்கள் எதிர்த்தால் கூட, அவ்வளவு எளிதில் மாற்றத்தை காண முடியாது. 

பெரும்பாலும், எதிர்ப்பாளர்கள் உயிரோடு இருப்பதே கேள்விக்குறி. இந்த சூழ்நிலையில் தான், ஜனநாயகத்தின் பெருமையை உணர முடியும். அப்படிப்பட்ட ஜனநாயகத்தின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும் நாடாக, இந்தியா திகழ்வதில் அனைவரும் பெருமைப் பட வேண்டும். 

அப்படிப்பட்ட நிகழ்வு தான் இங்கு நிகழ்ந்துள்ளது. 

நித்ய கண்டம்; பூர்ண ஆயுசாக உள்ள தமிழக அரசு, மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையிலும், சமீபகால இயற்கை பேரிடர்களால் பாதிப்புக்குள்ளானோர், மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகையை கொண்டாடவும், அனைத்து வகை ரேஷன் கார்டுகளுக்கும், தலா, 1,000 ரூபாய் வழங்குவதற்கான ஆணை பிறப்பித்தது. 

 இதற்காக எவ்விதமான நிபந்தனையும் இல்லாமல், 2 கோடியே ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 54 ரேஷன் கார்டுகளுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பும் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. கடந்த, 7ம் தேதி முதல்வர் பழனிசாமி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். 

துணை முதல்வர் பழனிசாமி திட்டத்தை தொடங்கிய போது, இஸ்லாமிய பெண்ணுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கினார். இந்த பரிசு பொருட்களை, கிறிஸ்த்துவ மதத்தை சேர்ந்த ரேஷன் கார்டு தாரர்களும் பெற்றனர். 

இதன் மூலம், பொங்கல் பண்டிகை என்பது, ஜாதி, மதம் கடந்த, தமிழர் திருவிழா என்பது மீண்டும் நிரூபணம் ஆனது. 

மதம் கடந்த மாண்புடன் தமிழர் திருவிழாவுக்காக, தமிழக அரசு வழங்கிய பரிசுத் தொகைக்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியது. 

வாழ்க ஜனநாயகம்... வளர்க அரசியல் மாண்பும், நீதித்துறையும்!
இந்த நிலையில் தான், சமூக ஆர்வலர் என்ற பெயரில் கோவையைச் சேரந்த திமுக தொண்டரான  டேனியல் ஜேசுதாஸ் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் பொங்கல் சிறப்பு பொருட்கள் வழங்குவது குறித்து வழக்கு தொடர்ந்தார். இதற்காகவே காத்திருந்தது போல, நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோரை கொண்ட பெஞ்ச், வசதி படைத்தவர்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்க தடைவிதித்தது. 

இதன் மூலம், அரசின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக, நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இதனால், சர்க்கரை கார்டு தாரர்களும், பரிசுப் பொருள் பெற முடியாமல் தவித்தனர் இத்தனைக்கும், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு ஒன்றும் புதிதாக, பொங்கல் பரிசு திட்டத்தை அறிமுகம் செய்யவில்லை.

ஏற்கனவே, முதல்வராக இருந்த, மறைந்த கருணாநிதி ஆட்சி காலத்தில், பாெங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.  மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்திலும், இது போன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும், தலா 100 ரூபாய் வழங்கப்பட்டது. 

ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை அமலான பின், மாநிலத்தின் வரி வருவாய் அதிகரித்துள்ளதாக, ஏற்கனவே ஒரு பேட்டியில் தமிழக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். எனவே, அரசின் வரி வருவாய் அதிகரித்துள்ளதால், பரிசு தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. 

தவிர அரசின் கொள்கை முடிவுகளில், எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது; அது அவ்வளவு சரியாகவும் இருக்காது. அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய பின்பும், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, அதை நாசூக்காக கையாண்டது. சர்க்கரை கார்டுதாரர்களிலும் பலர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களே என்பதை, நீதிமன்றத்தில் எடுத்துரைத்தது. 

அரசின் இந்த மென்மையான போக்கால், நீதிமன்றமும், அதற்கு ஒப்புதல் வழங்கியது. இதனால், அரிசி மற்றும் சர்க்கரை கார்டு தாரர்களுக்கு, பொங்கள் பரிசு மற்றும் 1000 ரூபாய் பணம் வழங்க நீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ளது. 

அரசுப் பணம் வீணாகக் கூடாது என நீதிமன்றம் நினைத்து, அரசின் திட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்ததும், மக்கள்  நலனுக்காகவே திட்டம் அறிவித்ததாக அரசு தரப்பில் எடுத்துரைத்ததும், ஜனநாயகத்தின் உச்சம். 

இதையடுத்து, அரசின் விளக்கத்தை கேட்டு, நீதிமன்றமும் அதற்கு செவி சாய்த்தது, தமிழக அரசியல் மற்றும் நீதித்துறையின் உயரிய மாண்பை விளக்கியுள்ளது. 

இது போன்ற நிகழ்வுகள், இந்தியாவில் தான் நடக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தியன், தமிழன் என்பதில் நமக்கும் பெருமை. 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP