சின்னக்குற்றாலம் தான் கும்பக்கரை அருவி...!

தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு அருகில் உள்ளது கும்பக்கரை அருவி. கும்பக்கரை அருவியை தான் சின்னக்குற்றாலம் என அழைத்து வருகிறோம். கும்பக்கரை அருவி மேற்குமலைத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு இயற்கையான அருவியாகும்.
 | 

சின்னக்குற்றாலம் தான் கும்பக்கரை அருவி...!

தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு அருகில் உள்ளது கும்பக்கரை அருவி. கும்பக்கரை அருவியை தான் சின்னக்குற்றாலம் என அழைத்து வருகிறோம். கும்பக்கரை அருவி மேற்குமலைத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு இயற்கையான அருவியாகும். இயற்கைச் சூழலில் உள்ள இந்தியாவில் சுற்றுலாத்துறைகளில் ஒன்றாக இப்பகுதி திகழ்கிறது.  

சின்னக்குற்றாலம் தான் கும்பக்கரை அருவி...!

கொடைக்கானல் மலையில் இருந்து உருவாகும் நீரூற்று மலையடிவாரத்தை அடையும் இப்பகுதியை கும்பக்கரை என அழைக்கப்படுகிறது.  இயற்கையாகவே உருவாகியுள்ள இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றிலும் எழும் பறவைகளின்  குரல்கள் சுற்றூலாப் பயணிகளை வரவேற்க்கும் விதமாக உள்ளது. இந்த கும்பக்கரை நீர்வீழ்ச்சி இரண்டு அடுக்குகளையுடையது. 400 மீ உயரத்திலிருந்து விழும் இந்த அருவியின் நீர், அதனைச் சுற்றியுள்ள பாறைகளில் விழுகிறது. இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஒரு முருகப் பெருமான் சிலையும் உள்ளது. 

இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்கு ஒரு உள்ளூர் வழிகாட்டியை அமர்த்திக் கொள்ளும் பட்சத்தில், பாறைகளில் வழுக்குதல் மற்றும் பிற ஆபத்துகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். வருடத்தில் அனைத்து  நாட்களிலும் சென்று வர தகுந்த சுற்றுலாத் தலமான கும்பக்கரை நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு கோடைகாலங்களில் நீர்வரத்து அதிகமாக இருக்கும். கொடைக்கானல் பகுதியில் தோன்றி பல இடங்களைக் கடந்து கும்பக்கரை அருவியாக வருகிறது. இந்த அருவியில் பாண்டிய மன்னர்களின் தலவிருட்சமான மருதமரங்கள் அதிகமாக உள்ளது என கூறப்படுகிறது.  மருதமரங்களின் வேர்களை தாண்டி  இந்த அருவி வருவதால் மூலிகை குணம்முடையது. இதனால்அருவியில் குளித்தால் வாதநோய் உண்டாகாது என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. 

சின்னக்குற்றாலம் தான் கும்பக்கரை அருவி...!

இந்த அருவியின் அருகே வனதெய்வக் கோயில்கள் உள்ளன. பூம்பறையாண்டி வைரன், கிண்டன், கிடாயன் உள்ளிட்ட வனதெய்வங்கள் இந்த கும்பகரை அருவியில் இருப்பதாக மக்களால் நம்பப்படுகிறது. இந்த அருவியில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு கஜம் என அழைக்கப்படும் இடங்கள் அதிக உள்ளன. அந்த கஜங்கள் அதனுடைய வடிவமைப்பிற்கு ஏற்றவாறு உள்ளது. அண்டா கஜம், யானை கஜம், குதிரை கஜம் என பல கஜங்கள் உள்ளன. இதில் யானை கஜம் பகுதி மிகவும் ஆபத்தான பகுதி என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். 

சின்னக்குற்றாலம் தான் கும்பக்கரை அருவி...!

ஆண்டுதோறும் நீர் வற்றாமல் இந்த அருவியில் தண்ணீர் வருவது சிறப்பான ஒன்றாகும். இந்த அருவி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு உள்ள நீர்வீழ்ச்சிகளுக்கு பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கும்பக்கரை நீர்வீழ்ச்சியை தவிர தண்ணீர் செல்லும் தடங்களிலுள்ள வழுக்குப் பாறை, யானைக் கெஜம், உரல் கெஜம், பாம்பு கெஜம் என்று அழைக்கப்படும் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நீராடி மகிழ்கின்றனர். இங்கு ஒரு சில இடங்களில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்க்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். 

சின்னக்குற்றாலம் தான் கும்பக்கரை அருவி...!

இந்த கும்பக்கரை அருவியில் தங்கும் விடுதிகளோ, உணவகங்களோ இல்லை. இப்பகுதியிலுள்ள மாட்சிநாயக்கன், வீரபுத்திரன், வைரவன், பூதநாட்சி, செழும்புநாட்சி, சோத்துமாயன், சின்ன அண்ணன், கருப்பணசாமி ஆகிய வன தெய்வங்கள் இங்குள்ள கரையில் கும்பலாகக் கூடுமாம். அதனால் இது கும்பல்கரை என்று  அழைக்கப்பட்டடாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த கும்பகரையே பின்னர் கும்பக்கரை என்று மருவியதாக கூறப்படுகிறது. 

சின்னக்குற்றாலம் தான் கும்பக்கரை அருவி...!

வனப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பாலிதீன் பயன்படுத்தக் கூடாது. சோப்பு, ஷாம்பு, எண்ணெய் வகைகளை உபயோகப்படுத்தக் கூடாது. மது பானங்களை கொண்டு செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்துள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் போதிய பாதுகாப்பு வழங்கினால் சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP