கிருஷ்ணகிரி சாதிக்கலவரம்: தேர்தல் ஆதாயத்துக்காக தூண்டப்படுகிறதா?

தமிழகத்தின் வட மாவட்டங்களில் கொஞ்ச நாட்களாக ஜாதி தகராறுகள் ஓய்ந்திருந்த நிலையில் , சில தினங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜாதிக்கலவரம் மூண்டு – அந்த பிராந்தியத்தை பதற்றம் அடையச்செய்துள்ளது. நடந்தது என்ன?
 | 

கிருஷ்ணகிரி சாதிக்கலவரம்: தேர்தல் ஆதாயத்துக்காக  தூண்டப்படுகிறதா?

தமிழகத்தின் வட மாவட்டங்களில் கொஞ்சம் நாட்களாக ஜாதி தகராறுகள் ஓய்ந்திருந்த நிலையில் , சில தினங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜாதிக்கலவரம் மூண்டு – அந்த பிராந்தியத்தை பதற்றம் அடையச்செய்துள்ளது. நடந்தது என்ன?

அங்குள்ள பாகலூர் அருகே உள்ள சனமங்கலம் தான் பிரச்னையில் சிக்கி இருக்கும் கிராமம். அந்த ஊரில் உயர் சாதி என்று சொல்லிக்கொள்ளும் குடும்பங்கள் 250ம், தாழ்த்தப்பட்ட சாதி என கூறப்படும் 30 குடும்பங்களும் வசித்து வருகின்றனர். கிராமத்து பிரதான  தெரு வழியாக இரு தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் வேலை நிமித்தம் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்கள் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.  இதுவே கலவரத்துக்கான மையப்புள்ளி.

இருவரையும் வழி மறித்த மற்றொரு தரப்பினர் "மோட்டார் சைக்கிளை ஏன் வேகமாக  ஓட்டி செல்கிறாய்?" என   கேட்க,  இரு தரப்புக்கும் இடையே ஏழரை ஆரம்பித்தது. இருவரது ஆட்களும் திரண்டு மோதிக்கொள்ள பதற்றத்தில் இருக்கிறது, சனமங்கலம் கிராமம். போலீசார் பெரும் அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அந்த கிராமத்தில் தாழ்த்தபட்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு, கடைக்காரர்கள், பால், மளிகை, மருந்து என எந்த பொருளையும் இப்போது கொடுப்பதில்லை. மருந்து உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு 5 கி.மீ தூரமுள்ள பாகலூருக்குத்தான் செல்ல வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். எனினும் இரு தரப்பு மக்களும் அச்சத்தின் பிடியில் இருந்து அகலவில்லை.

ஏன் இந்த திடீர் மோதல்?

இது குறித்து அந்தப் பகுதியில் உள்ள முக்கிய பிரமுகரிடம் விசாரித்தபோது,  “தேர்தல் வரப்போகுதில்ல... அதான். தேர்தல் நேரத்தில் இரு தரப்பையும் மோத விட்டு சில  அரசியல்வாதிகள் குளிர் காயறது எல்லா ஊர்லேயும் சகஜம் தானே. எங்க ஊர் மட்டும் விதி விலக்கா என்ன?’’என்று சலித்துக்கொண்டு நடையை கட்டினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP