உற்சாகக் குளியலுக்கு கொடிவேரி அணை...!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது கொடிவேரி அணை. இந்த அணை இயற்கை எழில் மிகுந்த கொடிவேரியில் அமைந்துள்ளதால், கொடிவேரி என்று அழைக்கப்படுகிறது. கொடிவரி என்ற பெயர் மருவி கொடிவேரியாக மாறியது.
 | 

உற்சாகக் குளியலுக்கு கொடிவேரி அணை...!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது கொடிவேரி அணை. இந்த அணை இயற்கை எழில் மிகுந்த கொடிவேரியில் அமைந்துள்ளதால்,  கொடிவேரி என்று அழைக்கப்படுகிறது. கொடிவரி என்ற பெயர் மருவி கொடிவேரியாக மாறியது. கொடிவரி என்றால் வரிப்புலி என்று பொருள்படும். 

உற்சாகக் குளியலுக்கு கொடிவேரி அணை...!

இந்த அணை அமைந்த காட்டுப்பகுதியைச் சுற்றி புலிகள் பல வாழ்ந்ததால் இந்தப்பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த அணை மைசூர் மகாராஜாவால் 17-வது நூற்றாண்டில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. நான்கு நூற்றாண்டுகள் கடந்த நிலையிலும் கட்டட நுட்பத்திற்கு சவால்விடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணை கருங்கல்லின் நடுவில் துளையிட்டு, கற்கள் நகராவண்ணம் இரும்பு கம்பிகளால் இணைக்கப்பட்டு முற்றிலும் இயற்கையான முறையில் கட்டப்பட்டுள்ளது. 

உற்சாகக் குளியலுக்கு கொடிவேரி அணை...!

இந்தப் பகுதியின் நீர்ப் பாசனத்திற்கு கொடிவேரி அணை மிகப் பெரிய அளவில் பங்கினை ஆற்றி வருகிறது. பவானி ஆற்றின் மூலம் திறந்துவிடப்படும் தண்ணீரை கொடிவேரி அணையில் தடப்பள்ளி கால்வாயும், அரசன் கோட்டை கால்வாயும், ஆற்றை ஒட்டியே இருபுறமும் செல்கிறது. இதனால் ஆற்றின் நீரோட்டம் திசை திருப்பப்படுவதில்லை. மேலும், ஆற்றில் இருந்து கால்வாய்களுக்குச் செல்லும் தண்ணீர் வயல்களுக்குச் சென்று, அதன் கசிவு நீர் மீண்டும் வாய்க்கால் வழியாக ஆற்றுக்கு வந்துவிடும். அதாவது ஒரு பாசன நிலம் தனக்குத் தேவையானதுபோக மீதமிருக்கும் தண்ணீரை மீண்டும் ஆற்றுக்கு அனுப்பிவிடுகிறது. இதற்காகப் பாசன நிலங்களின் மட்டத்துக்கு ஏற்ப கால்வாய்கள் அமைக் கப்பட்டன. 

உற்சாகக் குளியலுக்கு கொடிவேரி அணை...!

அன்றைய தமிழ் முன்னோர்கள் கொடிவேரி அணைக்கட்டுகளை பாசனத்தில் நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள். வார விடுமுறை நாட்களிலும் பண்டிகை தினங்களிலும் களைகட்டுகிறது கொடிவேரி அணை. அணையின் நுழை வாயிலில் குளிர்ச்சியான இளநீர், நுங்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், அணையில் பிடிக்கப்பட்டு அப்போதே சுத்தம் செய்து காரமான மசாலாவுடன் பொறித்த மீன்கள், சுடச்சுட வறுவலாக கிடைக்கிறது. 

உற்சாகக் குளியலுக்கு கொடிவேரி அணை...!

அணையில் ஆண், பெண் என இருபாலரும் எவ்வித அச்சமுமின்றி குளித்து மகிழ தனித்தனியாக பாதுகாப்பான இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளுக்காக 10க்கும் மேற்பட்ட பரிசல்கள் இங்கு இயங்கி வருகின்றன. இங்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு இருபுறமும் மரங்கள் சூழ்ந்த ஆற்றில் பயணம் செய்வது அற்புதமான அனுபவமாக இருக்கும். சுற்றுலா பயணிகளுக்கு புத்துணர்வை அளித்து, உடல் சூட்டைப் போக்க மசாஜ் செய்பவர்களும் இப்பகுதியில் இருக்கிறார்கள்.

உற்சாகக் குளியலுக்கு கொடிவேரி அணை...!

ஆயில் மசாஜ் செய்ய ஒரு நபருக்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பெரிய நகரங்களில் மசாஜுக்கு என வசூலிக்கப்படும் கட்டணத்தை விட இங்கு மசாஜ் கட்டணம் மிகக் குறைவு என்பதால் பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. சுமார் ஒரு மணி நேர எண்ணெய் மசாஜுக்குப் பிறகு அருவி போல் கொட்டும் அணை நீரில் குளிப்பது, உடலில் குடி கொண்ட சோர்வும், வலியும் நீக்கி ஒருவித புத்துணர்வு ஏற்ப்படுத்துகிறது. 

உற்சாகக் குளியலுக்கு கொடிவேரி அணை...!

இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கபடுவதால் பெண்கள் உற்சாக குளியல் போடுகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP