குழந்தை பாக்கியம் அருளும் காரைக்கால் அம்மையார்  !

நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் அனைத்து பருவ நிலைகளுக்கும் ஏற்ற முக்கிய உயர் தொழில்நுட்ப வசதி கொண்ட காரைக்காலில் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், அவர்களில் மூத்தவருமானவரே காரைக்கால் அம்மையார்.
 | 

குழந்தை பாக்கியம் அருளும் காரைக்கால் அம்மையார்  !

நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் அனைத்து பருவ நிலைகளுக்கும் ஏற்ற முக்கிய உயர் தொழில்நுட்ப வசதி கொண்ட காரைக்காலில் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், அவர்களில் மூத்தவருமானவரே காரைக்கால் அம்மையார். 

குழந்தை பாக்கியம் அருளும் காரைக்கால் அம்மையார்  !

கைலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை சிவபெருமான் அம்மையே என்று அழைத்ததாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் காரைவனம் எனப்பட்ட மாநகர், தற்போது காரைக்கால் என்று அழைக்கப்படுகிறது. இந்நகரில் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கும் மகளாகப் பிறந்தார் காரைக்கல் அம்மையார். சிவ வழிப்பாட்டில் இவரது இயற்பெயர் புனிதவதி.  அழகும் தெய்வீக அம்சமும் கொண்ட அம்மையார் சிறுவயதிலேயே சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவராக இருந்தார்.   

காரைக்கால் அம்மையாரின் மாங்கனி வரலாறு :

குழந்தை பாக்கியம் அருளும் காரைக்கால் அம்மையார்  !
காரக்காலை அடுத்த நாகப்பட்டினத்தில் உள்ள நீதிபதி ஒருவரின் மகனான பரமதத்தன் என்ற வணிகரை மணம் முடிந்தார் காரைக்கால் அம்மையார். தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு ஒரே மகள் என்பதால் காரைக்காலிலேயே வணிகம் செய்ய வழிவகை செய்துகொடுத்தார்.

குழந்தை பாக்கியம் அருளும் காரைக்கால் அம்மையார்  !

ஒருநாள் பரமதத்தனை வாணிபம் செய்யுமிடத்தில் காண வந்த சிலர் இரண்டு சுவையான மாங்கனிகளை அவனிடம் அளித்து உரையாடிச் சென்றனர். பரமதத்தன் அவர்களை வழியனுப்பியபின் அவர்கள் தந்து சென்ற மாங்கனிகள் இரண்டையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தான். அம்மையார் அக்கனிகளை வாங்கித் தன் கணவன் உணவுண்ண வரும்போது படைக்கலாம் என அறையில் பத்திரமாக வைத்திருந்தார். அப்போது சிவபெருமான் சிவனடியார் வேடத்தில் உணவு வேண்டி பசியால் மிக இளைத்தவராயப் அம்மையார் இல்லத்திற்கு வந்தார். அம்மையார் சோறு மட்டும் சமைத்திருந்த நிலையில் மற்ற பொருட்கள் எதுவும் அவரிடம் இல்லை. ஆனால் சிவனடியாரோ மிக்க பசியோடு இருத்ததைக் கண்டு,  தன் கணவன் அனுப்பிய மாங்கனிகளுள் ஒன்றை இலையில் படைத்து அடியவர்க்குத் உபசரித்தார்.  அதனை உண்ட சிவனடியார் அம்மையாரை வாழ்த்தி சென்றார்.
சிறிது நேரங்கழித்துப் பரமதத்தன் வழக்கம்போல் நண்பகல் உணவு அருந்தத் தன் இல்லம் வந்தான்.  அம்மையார் மகிழ்ச்சியோடு தன் கணவனுக்குத் பல வகை பதார்த்தங்கள்ளுடன் அவன் அனுப்பியிருந்த மாங்கனிகளுள் ஒன்றை இலையில் வைத்து உண்ணச் செய்தார்.  

குழந்தை பாக்கியம் அருளும் காரைக்கால் அம்மையார்  !

மாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, தான் கொடுத்தனுப்பிய மற்றொரு மாங்கனியையும் தனக்கு வைக்கும்படி கேட்டார் பரமதத்தன். அம்மையார் செய்வதறியாது திகைத்து மற்றொரு அறைக்குள் சென்று சிவபெருமானிடம் வேண்டினார். அப்போது, மேலிருந்து அம்மையார் கையில் ஒரு மாங்கனி வந்து தங்கியது. அப்போது மகிழ்ச்சி அடைந்த அம்மையார் அந்த மாங்கனியை தன்  கணவருக்கு படைத்தார்.

முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கனி அதிக சுவையுடன் இருக்கவே சந்தேகமடைந்த பரமதத்தன் இது முன்பிருந்த கனியை விட சுவையாக இருக்கிறதே என வினவினார்.  பிறகு அம்மையார் நடந்ததை முழுமையாக கூறினார். அக்காரணத்தைப் பரமதத்தர் நம்பவில்லை. சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படி கூறினார். அம்மையார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி மேலிருந்து அம்மையார் கையில் வந்து தங்கி, பிறகு மறைந்தது. இதைக்கண்டு வியந்த பரமதத்தன், நீ மனிதப்பிறவி இல்லை. தெய்வப்பெண், ஆகையால் உன்னுடன் இனி நான் வாழ்தல் சரியாகாது என்று கூறி,  அம்மையாரை விட்டு பிரிந்து, வணிகம் செய்ய பாண்டிய நாடு சென்றார். அறுபத்து நாயன்மார்களில் அம்மையார் மட்டும் அமர்ந்த கோலத்திலும், மற்ற நாயன்மார்கள் நின்றபடியே பிரகாரத்தில் இருப்பர்.

குழந்தை பாக்கியம் அருளும் காரைக்கால் அம்மையார்  !

காரைக்கால் சிவன் கோவிலில் அம்மையாரை மூலவராக் கொண்ட தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் காரைக்கால் அம்மையார் கோவில் என்று மக்களால் அழைக்கப்படுகிறது. இங்கே அம்மையார் புனிதவதியின் தோற்றத்துடன் இளமையோடு உள்ளார். அவருடைய சன்னதியின் சுற்றுப் புற பிரகாரத்தின் ஓவியங்களிலும் காரைக்கால் அம்மையின் வாழ்க்கை வரலாறு சொல்லப்பட்டுள்ளது. காரைக்கால் அம்மையாரின் சிறப்புகளை மக்களுக்குத் தெரிவிக்க காரைக்கால் சோமநாதர் கோவில் சார்பாக மாங்கனித் திருவிழா நடைபெறுகிறது. 

அமுது படையலில் தயிர் சாதம்:

குழந்தை பாக்கியம் அருளும் காரைக்கால் அம்மையார்  !

உலகிலேயே சிவபெருமான் அமுது உண்ட ஒரே இடம் காரைக்கால் அம்மையார் எனும் புனிதவதியார் இல்லத்தில் மட்டுமே. சிறந்த சிவபக்தையாக விளங்கிய காரைக்கால் அம்மையாரின் பக்தியை சோதிக்கும் பொருட்டு, சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் அம்மையாரின் இல்லத்திற்கு உணவு வேண்டி செல்வார். சிவபெருமானின் பசித்த நிலையைக் கண்ட புனிதவதியார், கணவர் கொடுத்தனுப்பிய 2 மாங்கனிகளில் ஒன்றை, தயிர் சாதத்துடன், சிவபெருமானுக்கு பறிமாறுவார். எனவேதான் மாங்கனித் திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியில், பிச்சாண்டவர் வீதிஉலா முடிந்து, அமுதுபடையல் நிகழ்ச்சி நடைபெறும்போது, பிச்சாண்டவருக்கு, மாங்கனியுடன் தயிர்சாதத்தை அம்மையார் படைக்கும் நிகழ்வு நடைபெறும். பக்தர்கள் பலர் சாமி ஊர்வலத்தின் போது, மோர், தயிர்சாதத்தை அன்னதானமாக வழங்கி வருகின்றனர். காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பெளர்ணமி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

திருவிழாவின் போது சுவாமி தேர் வீதி உலா வருகையில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக வீட்டு மாடிகளில் நின்று கொண்டு இறைவன் மீது மாங்கனிகளை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இறைக்கப்படும் மாங்கனியை குழந்தைபேறு இல்லாத கணவனும், மனைவியும் உண்டால் அவர்களுக்கு அடுத்த ஆண்டே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP