கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி பகுதி - 19

சரி, விசயத்திற்கு வருவோம். இந்த சினிமா பிரபலங்களுக்கு, அவர்களை இயக்கும் பிரிவினைவாத சக்திகள் கொடுத்த வேலை என்ன தெரியுமா? நாட்டின் மீது வெறுப்பினை உமிழ்வது. நாட்டு மக்களை, இந்த தேசத்தின் மீது கோபம், எரிச்சல், விரக்தியை ஏற்படுத்துவது தான்.
 | 

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி பகுதி - 19

ஒரு துறை முழுவதும், புற்று நோயால் பாதிக்கப்பட்டு அழிவின் விளிம்பில் இருப்பதை, எப்படி சுருக்கமாகத் தொகுத்து, வாசகர்களுக்குப் புரிய வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த தருணத்தில், முன்னாள் இயக்குநர் கரு.பழனியப்பன் ஒரு தொலைக்காட்சிக்குக் கொடுத்த ஒரு பேட்டியை காண நேர்ந்தது. 

அந்த நிமிடத்தில் தான், எனக்கு இந்தக் கட்டுரையின் நிறைவுப் பகுதி கண்ணில் தெரிந்தது. இந்த ஒரு வீடியோ போதும், கமல்ஹாசன் உட்பட ஒட்டு மொத்த சினிமா தொழிலாளர்களின் நிலைமையை உணர்த்த.

கரு பழனியப்பன் எடுத்த படங்களைப் பார்த்தவர்களுக்கு, ஒரு விசயம் நன்றாகத் தெரியும். குடும்பப் பிணைப்பு, உறவுகளின் உன்னதம், படத்தில் இடம் பெறுகிறதோ இல்லையோ, நிச்சியம் ஒரு ஆன்மிகத் தத்துவப் பாடல் என, சராசரி இந்திய உணர்வுகளை நேர்மறையாகச் சொல்லி வந்தவர். 

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி பகுதி - 19

பல மேடைகளில் இந்தியக் கலாச்சாரம், எதார்த்த ஆத்திகம் பற்றி நிறைய நேர்மறையாகவும், பகுத்தறிவு என்ற பெயரில், இடதுசாரிகளின் அபத்தங்களையும் கண்டித்து வந்தவர். அப்படியான ஒரு மனிதர், இன்று தேசத்தைத் துண்டாட நினைப்பவர்களின் கைக்கூலியாகிக் கிடக்கிறார். 

சரி, விசயத்திற்கு வருவோம். இந்த சினிமா பிரபலங்களுக்கு, அவர்களை இயக்கும் பிரிவினைவாத சக்திகள் கொடுத்த வேலை என்ன தெரியுமா? நாட்டின் மீது வெறுப்பினை உமிழ்வது. நாட்டு மக்களை, இந்த தேசத்தின் மீது கோபம், எரிச்சல், விரக்தியை ஏற்படுத்துவது தான். 

இந்த அரசு, உன் பணத்தை பிடுங்குகிறது. இந்த அரசு ஏழைகளுக்கு எதிரானது, இந்த அரசு உனக்கானது அல்ல என்பதான சிந்தனைகளை முதலில் விதைப்பது தான். இந்த வீடியோவினைப் பாருங்கள்.

1.  நானும் இவரைத் தான் தேர்ந்தெடுத்தேன். ஆனால், ஏமாற்றி விட்டார்.
2.  நான் எந்தக் கட்சியும் கிடையாது; ஆனால், இந்த அரசுக்கு எதிரானவன். ( பாஜக ஆட்சியில் இல்லாவிட்டாலும் இவர்களின் கருத்து இதே தான். அதாவது, இவர்கள் அரசுக்கு எதிராக இல்லை அரசாங்கத்திற்கு எதிரானவர்கள்) 
3.  என்னை எந்தக் கட்சியும் பிரசாரத்திற்குக் கூப்பிடவில்லை. ( கூலி கொடுத்த எஜமானரின் ஆணைக்கிணங்க அரசுக்கு எதிராக நானாக வந்து வண்டியில் ஏறிக் கொண்டேன்)
4.  நான் அரசியலுக்கு வரவில்லை. ஆனால், வலதுசாரி சிந்தனை கொண்ட ஆட்சிகள் வந்துவிடக் கூடாது. (அதாவது, நாடு அமைதியாக இருக்கக் கூடாது. புரட்சி புண்ணாக்குனு போராடிக் கொண்டே இருக்கணும்)
5.  இந்த அரசுக்கு மாற்றாக இருக்க வேண்டிய கட்சியாக ஏன் தினகரன் கட்சியையோ, சீமான் கட்சியையோ சொல்ல மாட்டேங்குறீங்க?. பதில் : சொல்ல மாட்டேன். (ஏனென்றால், எனக்கு அதற்கு மேல் சொல்லித் தரவில்லை)

இவ்வளவு தான் இந்த சினிமாத் துறையின் ரிடயர்ட் ஊழியர்களின் நிலைப்பாடு. மக்கள் ஒரேயொரு விசயத்தைக் கவனித்துக் கேள்வி கேட்டால் போதும். ஒரு நாட்டின் தலைமையை எதிர்த்துக் கேள்வி கேட்கும் அளவிற்கு விபரமான ஆளான கரு பழனியப்பா, கமல்ஹாசா, பிரகாஷ்ராஜா, பாரதிராஜாக்களே… 

இத்தனை வருடங்களாக ஊறிக் கிடக்கும் உங்கள் தொழிலில் உங்களால் ஏன் நிலைத்து நிற்க முடியவில்லை? முதலில் ஒரு கோவனத்தைக் கட்டுங்கள். பிறகு அடுத்தவர் கட்டியிருக்கும் வேட்டியில் இருக்கும் அழுக்கினைப் பற்றி பேசலாம். 

உங்கள் தொழிலிலேயே உங்களால் உறுப்படியாக ஏதும் செய்ய முடியாமல் தெருவில் திரியிறீங்களே... உங்கள் பேச்சை நம்பி நாட்டை நிர்வகிக்கும் ஆளை எப்படி தேர்ந்தெடுப்பது?

சரி, இந்த நிலைமை எப்பொழுது முடிவுக்கு வரும்? இந்தத் தேர்தல் முடிந்ததும், ஆட்சி மாற்றம் நடக்காமல் போனால் மிக விரைவில் முடிவுக்கு வந்து விடும். காரணம், இதுவரை கொடுத்து வந்த பணம் இனி கொடுக்க மாட்டார்கள். 

திடீரென்று பண வரவு நின்ற எரிச்சலில், ஒருத்தர் இல்லாட்டி ஒருத்தர் நடந்த சம்பவங்களை பொதுவெளியில் போட்டு உடைப்பார். அல்லது நடக்கும் / நடந்த கொடுமைகளை, தேசத்துரோகங்களை எழுதி வைத்து விட்டு யாரேனும் தற்கொலை செய்து கொள்ள நேரிடலாம்...

அப்பொழுது,  பொதுஜனங்களுக்கு இந்த விசயங்கள் எல்லாம் தெரியவரும். இன்று சவுண்டு விட்டவர்கள் எல்லாம், அன்றைக்கு சவக்கலையுடன் ஒளிந்து கொண்டிருப்பார்கள். 

சரி, இதையெல்லாம் ஏன் இன்னும் அரசாங்கம் ஒடுக்காமல் இருக்கிறது என்று கேட்பீர்களானால், இந்த அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியதால் தான், இந்த அரசாங்கத்திற்கு எதிராக அதீதமாக எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருக்கின்றன. 

சினிமாக்காரர்களின் ஸ்டைலிலேயே பதில் சொல்ல வேண்டுமானால், இந்த சில்லறைப் போராளிகள் எல்லாம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இல்லை. இவர்களுக்கு பணம் கொடுக்கும் உள்ளூர் பெருச்சாலிகளையும், அரசுக்கு நன்கு தெரியும். அவர்களை கூலிக்கு வைத்திருக்கும் வெளிநாட்டு அமைப்புகளையும் நன்கு தெரியும். 

ஆனால், அந்த வெளிநாட்டு சக்திகளுக்கும் உள்ளூர் பெருச்சாலிகளுக்குமான தொடர்பை ஆதாரத்துடன் உலகநாடுகளிடம் நாம் எடுத்து வைக்க வேண்டிய கடமை இருக்கிறது. அந்த ஆதாரங்கள் கிடைக்கும் வரை, இவர்களை  விளையாட விட்டு வேடிக்கை பார்க்கிறது உளவுத்துறை மற்றும் உள்ளாட்சித் துறை! 

சரி, இந்தக் கட்டுரைக்கும் கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவ தீவிரவாதி என்ற தலைப்புக்கும் என்ன சம்பந்தம்? கட்டுரையின் நோக்கம் என்ன? என்ற விளக்கங்களுடன் அடுத்த பகுதியில் … அடுத்தப் பகுதியுடன் இந்தத் தொடர் நிறைவு பெறுகிறது.
 
அடுத்த தொடர் வரும் வரை ஆவலுடன் காத்திருங்கள்...

newstm.in

இந்த கட்டுரையில் வரும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP