கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவ தீவிரவாதி -7

கமலின் நாத்திகப் பேச்சினைக் கவனிக்கும் நாம், அவரின் பக்தி பற்றி கவனிக்காமல் கடந்துவிட்டோம். கமல்ஹாசன் பற்றிய ஒரு குற்றச்சாட்டில், அவர் மீது வைக்கும் மற்றொரு குற்றச்சாட்டு அடிபட்டு விடுகிறது என்பதை ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறோம்?
 | 

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவ தீவிரவாதி -7

சிறு குறிப்புகள்:
1. இந்தக் கட்டுரை தொடங்கி ஆறு பகுதிகள் தான் கடந்திருக்கிறோம். முதல் இரண்டு பகுதிகள் கட்டுரையைப் பற்றிய முன்னோட்டமாகவும், அடுத்த இரண்டு பகுதிகளும் கமல்ஹாசன் அவர்களின் வடவிந்திய தென்னிந்தியப் பார்வையுமாகக் கடந்து விட்டது. நாம் எடுத்துக் கொண்ட தலைப்பினை ஒரே கட்டுரையில் நிரூவ முடியாது. ஒரே கட்டுரையில் சொல்வதை ஒரே வரியில் சொல்லிவிட்டோமே தலைப்பாக? ஒப்புக் கொண்டு வழி மொழியவா போகிறோம்? ஆதாரம் இல்லா குற்றச்சாட்டு எங்கே நிரூபி பார்ப்போம் என்று மல்லுக்கட்டுவோம். எனவே கட்டுரைத் தொடர் முடியும் வரை சற்றே பொறுமையாக இருக்கவும்.

2. அதென்ன ஒரே படத்தை வைத்து முடிவு செய்வது? என்று கேட்பவர்களுக்காக, இப்பதான் ஆரம்பித்திருக்கிறோம். ஒவ்வொரு படமாக அலசப்படும். "ஹேராமை" முதலில் எடுத்துக் கொண்டதற்குக் காரணம், அவர் இயக்கிய முதல் படம். வெற்றிகளையும் புகழையும் நிறையவே கடந்து வந்த கமல்ஹாசன் அவர்களுக்கு, தன் சிந்தனையை நுணுக்கமாக ஆழமாகச் சொல்ல உருவாக்கப்பட்ட படம். ஆகவே, இதனுள் கமலின் ஹிந்துத்துவ /  இஸ்லாமியர் மீதான / காந்தியின் மீதான / தேசத்தின் மீதான பார்வை போன்றவற்றை நிறைய கிடக்கின்றன. மேலும் கதைக் களமும் அத்தகையது. எனவே ஹேராம் முடித்துவிட்டு அடுத்த படங்களுக்குப் போவோம்.

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவ தீவிரவாதி -7

3. இத்தனை நுணுக்கமாக ஒரு சாதாரண ரசிகன் கவனிப்பானா? இதை எல்லாம் ஏன் தோண்டி எடுக்கணும்? 
நம் எல்லாருக்கும் தெரிந்த விசயம், கமல் மீதான ஓர் அன்பான, பெருமையான குற்றச்சாட்டினை அவரது  ரசிகர்களே வைப்பதுண்டு. அது, “கமல் எடுக்கும் படங்கள் பத்து வருடங்கள் கழித்து தான் மக்களுக்குப் புரியும்” அல்லது, “ பத்து வருடங்கள் கழித்து எடுக்க வேண்டிய படத்தை கமல் இப்பவே எடுத்துத் தொலைச்சுடுவார்” என்பாதாக இருக்கும்.

மேலும் கமல் எனும் டைரக்டர், தன் கருத்துகளை இலைமறைக் காய்மறையாகத் தான் படத்தில் வைப்பார். ஒன்று பொருளாதார வெற்றி அவரது சினிமாவுக்கு அவசியம். இரண்டு, வெளிப்படையாகச் சொன்னால் அது பிரசாரப்படமாகி விடும். நாம் எழுதுவதன் நோக்கமே, இப்படி சாதாரண ரசிகர்கள் கவனிக்கத் தவறிய கமல்ஹாசனின் ரசனையை, திறமையை சுட்டிக்காட்டி, அவரது சித்தாந்தத்தை விளக்குவது தான் நோக்கம்.

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்வோம்…
இந்தப் பகுதி கட்டுரையை கொஞ்சம் சாந்தமாகக் கொண்டு செல்வோம். அவரின் நாத்திகப் பேச்சினைக் கவனிக்கும் நாம், அவரின் பக்தி பற்றி கவனிக்காமல் கடந்துவிட்டோம். கமல்ஹாசன் பற்றிய ஒரு குற்றச்சாட்டில், அவர் மீது வைக்கும் மற்றொரு குற்றச்சாட்டு அடிபட்டு விடுகிறது என்பதை ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறோம்?

அந்த ஒரு குற்றச்சாட்டு என்னவெனில், கமல்ஹாசன் வைணவத்தைத் தூக்கிப் பிடித்து, சைவ சமயத்தை உதாசீனப்படுத்துகிறார் அல்லது கேலி பண்ணுகிறார் என்பதாகும்.இந்தக் குற்றச்சாட்டின்படி அவர் மீது வைக்கப்படும் மற்றொரு குற்றச்சாட்டான அவர் நாத்திகவாதி என்பது தானாக அடிபட்டுப் போகிறது இல்லையா? ஏனெனில் ஒரு தீவிர வைணவன் எப்படி நாத்திவாதியாக இருக்க முடியும்? சரி, அப்ப அவர் சைவத்தை உதாசீனப்படுத்துகிறாரா?

உதாரணத்துக்கு சில படங்களை பார்க்கலாம்... "குணா" படத்தில், நாயகி, நான்முகி, நாராயணி... என்று "அபிராமி அந்தாதி" வைத்துப் பாடவில்லையா?
அதே படத்தில், "சிவனைக்கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா, புத்திகெட்ட மூடர்கென்றும் ஞானப் பார்வை ஏதடா" என்று பாடல் யாரைப் பற்றியது?

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவ தீவிரவாதி -7

தேவர் மகன் படத்தில், “மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக

சதிலீலாவதி – ஒரு தாரம் தலையில் வைத்து மறுதாரம் பக்கம் வைத்த சிவனே சிவனே சிவனே... ஒருபோதும் மறவாதுன்னை தெருவோரம் பாடும் இந்த மகனே மகனே மகனே...

காதலா காதலா படத்தில் - சரவணபவ என்ற பாடலில், “ ஊரார் தொழுதிடும் சிவலிங்கம். நீ அவன் பெற்ற இளம் சிங்கம்… பாடலை நெற்றி நிறைய பட்டையை பூசிக் கொண்டு நடனம் ஆடியிருப்பார்.

தெனாலி படத்தில், எல்லாம் சிவமயம் என்பார்கள் எனக்கு எல்லாம் பயமயம். படம் முழுக்க கண்டி கதிர்காமர் மயம் தான்.

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவ தீவிரவாதி -7

விருமாண்டி படத்தில் ஜெயிலில் இருக்கும்போதும் நெற்றி நிறைய பட்டை போட்டு சிவ தொண்டனா பளபளக்கிறாரே?

அதெல்லாம் இருக்கட்டும்ங்க.. அன்பே சிவம் படம் பார்த்தீங்களா? அதில் வில்லன் எப்ப பார்த்தாலும் தென்னாடுடைய சிவனே போற்றினு சொல்லிட்டு கெட்டதா செய்வாரு. அப்ப அது சிவ நிந்தனை தானே?

இந்தக் கேள்வி கேட்பவர்கள், அந்தப் படத்தில் கமல்ஹாசன் கேரக்டரின் முழுப் பெயர் என்னனு சொல்லுங்க பார்ப்போம்? 
 
“ நல்ல சிவம்” 

வில்லன் கெட்ட சைவன் என்றால், படத்தோட ஹீரோ நல்ல சிவன்!
இப்ப சொல்லுங்க பார்ப்போம் சிவ நிந்தனைனு.

அடுத்த கட்டுரையில் வைணவத் தொண்டுகளுடன் மேலும் சில குறிப்புகளுடன்…

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP