Logo

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவ தீவிரவாதி ? பகுதி - 1 

தன்னை, ‛பெரியாரிஸ்ட்’ என்று மேடை தோறும் அடையாளப்படுத்திக் கொள்ளும் கமல்ஹாசன், தன் சொந்த முயற்சியில் எடுத்த ஏதேனும் ஓர் படத்திலாவது; ஒரே ஒரு வரியாவது; ஈ.வெ.ராமசாமியைக் குறிப்பிட்டு, அவர் கொள்கையை பரப்பியிருக்கிறாரா?
 | 

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவ தீவிரவாதி ? பகுதி - 1 

தமிழ் சினிமாவிலேயே, இல்லை… இல்லை… இந்திய சினிமா துறையிலேயே,  தொழில் முறையில், இப்போதைக்கு மிகவும் சீனியர் இவர் தான் எனலாம். கிட்டத்தட்ட, 60 வருடங்களாக, சினிமா துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் ஆழம் பார்த்தவர்.

சினிமா வாழ்வில், உச்சபட்ச வெற்றியையும், படு மோசமான தோல்விகளையும், அநாயசமாகக் கடந்து வந்தவர். ‛எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்களைக் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்ற தமிழ்த்தாயின் ஆணையை, யார் செயல்படுத்தினார்களோ இல்லையோ, கமல்ஹாசன் தன் துறையில் செய்தார்; அல்லது செய்வதற்காக முழுமையாக முனைந்தார்.

அவர், உலகின் பன்மொழிப் படங்களிலிருந்து, பல நல்ல விசயங்களை, ரசனையுடன், தமிழ்த் திரையுலகிற்குக் கொண்டு வந்தார். அந்த வகையில், மகாகவி பாரதியும், தமிழ்த்தாயும், கமல்ஹாசனை வாழ்த்திக் கொண்டேயிருப்பர்.

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவ தீவிரவாதி ? பகுதி - 1 

அவர், ‛தன் குருநாதர், கே.பாலச்சந்தர்’ என, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பெருமையுடன் சொல்லிக் கொண்டாலும், அவருக்குச் சமமான குருநாதர்களாக, கே.விஸ்வநாத் மற்றும் சிங்கீதம் சீனிவாசராவ் என்ற இரண்டு மகாபுருஷர்களை கமலுக்குக் கொடுத்தது தெலுங்கு சினிமா.

பாலச்சந்தரிடம் கற்றது பால பாடம். சி.சீ.ராவும், கே.விஸ்வநாத்தும், கமலுக்குப் பேராசிரியர்கள். கமலஹாசனை புதிய சிந்தனைக்கு, புதிய தொழில்நுட்பத்திற்கு  இழுத்து வந்து, கமலின் பல பரிமானங்களை வெளிக் கொண்டு வரச் செய்தனர்.

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவ தீவிரவாதி ? பகுதி - 1 

இவர்களை இங்கே குறிப்பிட வேண்டிய அவசியம், கமல்ஹாசன் வெறும் நடிகனாக மட்டும் முடங்கிவிடாமல், சமூகப் பார்வையுடன் சினிமாத்துறையை அணுகக் காரணமாக இருந்தவர்கள் இவர்கள் தான்.

ஆம், 90களுக்குப் பிறகு, கமல்ஹாசன் மெல்ல விஸ்வரூபம் எடுத்தார். 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தன்னை முழுமையாக வெளிப்படுத்தினார். “ஹே ராம்!”

விஸ்வரூபம் என்பது, எடுத்தவருக்கு தான் முழுமையாகத் தெரியுமே தவிர, கண்டவர்களுக்கு, காண்பவர்களுக்கு முழுமையாகத் தெரியாது. நல்ல பக்தனுக்கு, கொஞ்சம் கூடுதலாக, பிறரை விட அதிகமாகக் காட்சி கிடைக்கும்.

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவ தீவிரவாதி ? பகுதி - 1 

அப்படியொரு நல்ல ரசிகனாக, சமூகத்தின் மீது, எதார்த்த பார்வை கொண்ட ஒரு சாமானியனாக, என் பார்வையை, உங்களுடன் ஒரு தொடராகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இது ஏதோ, ஒரு சினிமா ஆளைப் பற்றிய விமர்சனமாகவோ, தனிப்பட்ட நபரை துதிபாடி எழுதப்படும் கட்டுரையாகவோ இருக்கப் போவதில்லை.

எளிய ரசிகர்கள், ஆழ்ந்து பார்க்காமல் மறந்த, கமல்ஹாசன் எனும் ஒரு தேசியவாதியை, தீவிர ஹிந்துத்துவவாதியை, திரை விலக்கிக் காட்டப் போகும் கட்டுரை. விஸ்வரூபம் எடுத்த கமல், இன்று திரையுலகில் வாமனனைப் போல சுருங்கிப் போன காரணத்தையும் அலசும் கட்டுரை.

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவ தீவிரவாதி ? பகுதி - 1 

அரசியலில் அசிங்கப்பட்டு நிற்கும் கமல்ஹாசனையும், அதற்கான நிர்பந்தத்தையும், அதன் பின்புலத்தையும், படிப்படியாக பிரித்துப் பார்க்கப் போகும் கட்டுரை இது.  இதில், அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஏதும் இடம் பெறப்போவதில்லை.

‛என்ன வித்தியாசம் இருந்து விடப் போகிறது இந்தக் கட்டுரையில்?’ என்று அலட்சியம் காட்டுபவர்களுக்காக, ஒரு கேள்வியுடன் நிறுத்துகிறேன். பதிலையும், அதற்கான விளக்கத்தையும், அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

கேள்வி இது தான் :

என் சிந்தனை வளர்ந்த வீடு இது” என்று, ஈ.வெ.ராமசாமியின் இல்லத்தில் எழுதி வைத்துவிட்டு வந்த கமல்ஹாசன், தன்னை, ‛பெரியாரிஸ்ட்’ என்று மேடை தோறும் அடையாளப்படுத்திக் கொள்ளும் கமல்ஹாசன், தன் ஆதிக்கம் நிறைந்த எந்த ஓர் படத்திலாவது; ஒரே ஒரு வரியாவது; ஈ.வெ.ராமசாமியைக் குறிப்பிட்டு, அவர் கொள்கையை பரப்பியிருக்கிறாரா?"

தேடி வைங்க… விரைவில் வருகிறேன்...

 

இந்த தொடரில் இடம் பெறும், அனைத்து கருத்துக்களும், கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.
 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP