கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவ தீவிரவாதி - 3 

நீ சௌத் இந்தியன்னு சொல்றப்ப லால்வானியின் முகம் எத்தனை ஏளனமாக, நீ எங்கள் வலி புரியாதவன் என்று விரக்தியும் கலந்து சொல்கிறார் என்று. இப்ப ராம்…. “இல்ல, லால்வானி எனக்கும் புரியும்” என்று சொல்லும் போது அங்கே ராமாக இல்லாமல் கமல்ஹாசனாகத் தெரிவார்.
 | 

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவ தீவிரவாதி - 3 

“உனக்குப் புரியாது. நீ சௌத் இந்தியன்” இந்த ஒற்றை வரியை கமல்ஹாசனாக இருந்து பார்க்கத் தெரிந்தவர்களுக்கு, கமல்ஹாசன் என்ற ஹிந்துத்துவ தீவிரவாதியை தரிசிக்க வைக்க, இந்தக் காட்சியை விவரித்துச் சொல்ல அவசியம் இருக்காது.

கமல் அவர்களை வெறும் திரைப்படக் கலைஞனாக மட்டும் ரசிக்கும் ரசிகர்களுக்கு, அவருக்குள் இருந்த நுண்ணிய சமூகப் பார்வையும், சிந்தனையும் புரிந்திருக்க நியாயமில்லை.

ஆம்! கமல் சொன்னது உண்மை!  “உனக்குப் புரியாது. நீ சௌத் இந்தியன். அதாவது திராவிடம் பேசும் பதரே! உனக்கு பாதிக்கப்பட்ட ஹிந்துக்களின் வலி தெரியாது. அம்மாவையும், மனைவியையும், மகளையும் முஸ்லிம் பயங்கரவாதிகளின் காமத்திற்கும், வன்முறைக்கும் காவு கொடுத்து விட்டு, அநாதையாக அலையும் ஹிந்துக்களின் உணர்வுகள் திராவிடத்திற்குள் மயங்கிக் கிடக்கும் உனக்கு புரியப் போவதில்லை”.

இந்த வீடியோ காட்சியைப் பாருங்கள். (காட்சிகள் 1.29.30-ல் இருந்து 1.32.40 வரை) https://www.youtube.com/watch?v=d1vVpbw6FPI&t=5341s (லிங்க்-ஐ சொடுக்கவும்) பார்த்த பின் தொடர்ந்து படியுங்கள்.

இந்த மூன்று நிமிடக் காட்சியில்,  ஒரு பெரும் சரித்திரச் சங்கடத்தையும், வலி நிறைந்த வாழ்க்கையையும், அதை அப்பட்டமாகச் சகித்துக் கடந்து  போகும் சராசரி ஹிந்துக்களின் அவலத்தையும், அன்றைய அரசியல் சூழலில், சர்தார் பட்டேல் அவர்கள், மன்னர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளையும், ஒரு சேரக் காட்டியிருப்பார்.  சத்யஜித்ரே போன்றவர்கள் கூட, இத்தனை வலிமையாகச் சொல்லியிருக்க மாட்டார்கள்.

குறிப்பாக, லால்வானியுடன் பேசும் வசனங்கள். ‛யுவர் ஹைனஸ், இது என் ஃப்ரெண்ட் லால்வானி, இண்டஸ்ட்ரியலிஸ்ட்’ என்று ராம் (கமல்) அறிமுகம் செய்து வைக்கும் போது, லால்வானி ஒரு விரக்தி கலந்த வலியுடன் சிரித்துக் கொண்டு, ‛அடப் போடா கிறுக்கா’ என்பதாக ராம்-ஐ விலக்கிக் கூட்டிட்டுப் போகும் அந்த ஒற்றைக் காட்சியை கவனித்துப் பாருங்கள்.

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவ தீவிரவாதி - 3 

ஒரு பெரும் தொழிலதிபர், கூடையில் பப்பட் விற்றுக் கொண்டிருக்கிறானே என்று நமக்கு எழும் அதிர்ச்சி, லால்வானிக்குச் விரக்தி கலந்த சிரிப்பாக இருக்கு. ஏன்? அவ்வளவு பெரிய சொத்து போனதை விட, அவன் உயிர், உணர்வுகளால் பாதிக்கப்பட்ட வலி, நூறு மடங்கு அதிகம்.  பாதிக்கப்பட்ட அந்த ஹிந்துக்களின் மனநிலையை அல்லது வலியை உணராமல், யாராலும் இதைக் காட்சிபடுத்தி விட முடியாது. லால்வானிக்கு நடந்தவற்றை ஒவ்வொன்றாகச் சொன்னதைப் பாருங்கள்

முதலில் சொத்துகள் பூராம் எரிஞ்சு போச்சு..…எரிச்சுட்டாங்க எனும் போது, லால்வானி அந்தக் கொடுமையை ஏன் கேட்கிற என்று விரக்தியுடன் சிரித்துக் கொண்டே சொல்லுவார்.

அடுத்ததாக வீணா பாபி…?னு கேட்கும் போது,  “மானம் போச்சு உயிர் போச்சு” என்று தன் மனைவியைக் கற்பழிச்சு கொன்னுட்டாங்க என்று சொல்லும் போது, ஹிந்துப் பெண்களை பாகிஸ்தானில், முஸ்லிம் வெறியர்கள் என்ன செய்தார்கள் என்றும்...

பெரிய பொண்ணு கேம்ப்ல காலராவுல செத்துப் போச்சு. அதாவது, பாகிஸ்தானிலிருந்து தப்பி அடைக்கலமான கேம்ப்பில், எத்தனை பேர் அடைக்கலமாகி எவ்வளவு மட்டமான சுகாதாரத்தில், ஆடுமாடுகளை விட இழிவாக நடத்தியிருக்கிறார்கள் என்றும்,

சின்ன பொண்ணு ரொமிலா தானே…? என்று கேட்கும் ராமிடம்,  “கை விட்டுப் போயிடுச்சு” என்று வெடித்து அழும்போது, தனக்கென்று இருந்த ஒரே உறவு, அதுவும் சின்னக் குழந்தை, எந்தப் பெண்ணையும் விட்டு வைக்காத காமுகர்கள் இருக்குமிடத்தில் தொலைத்து விட்ட, ஒரு அப்பன்காரனின் கையறு நிலையையும், உயிரைக் காப்பாத்திக்க ஓடி தப்பிக்கும் அவசரமும் எத்தனை கொடுமை என்று உணர்வுப்பூர்வமாகச் சொல்லியதும்,

அம்மா, அப்பா ரயிலில் தப்பி வரும்போது இறந்து விட்டார்கள். எப்படி? ''ரயிலுக்குள் பிணங்களுடன் பயணிக்கணும். சிலர் வேறு வழியில்லாமல் பிணங்கள் மீது அமர்ந்து கொண்டு பயணித்திருக்கின்றனர். பிணத்தின் மீது பயணம்… அந்தக் கொடுமை எல்லாம் உனக்குப் புரியாது ராம்…

நீ சௌத் இந்தியன்'' என்பார்.

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவ தீவிரவாதி - 3 

முன்னூறு பக்கங்களில், “பாகிஸ்தான் போகும் ரயில்” புத்தகத்தில் குஷ்வந்த் சிங் சொன்ன வலிகளை மூன்றே நிமிடத்தில் அற்புதமாகச் சொல்லியிருப்பார் கமல். அவர் மனதிற்குள் எத்தனை கோபமும் வலியும் இருந்திருந்தால், இத்தனை கச்சிதமாகக் காட்சிபடுத்தியிருக்க முடியும்?

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவ தீவிரவாதி - 3 

வீடியோவை மறுபடி பாருங்கள். நீ சௌத் இந்தியன்னு சொல்றப்ப லால்வானியின் முகம் எத்தனை ஏளனமாக, நீ எங்கள் வலி புரியாதவன் என்று விரக்தியும் கலந்து சொல்கிறார் என்று. இப்ப ராம்…. “இல்ல, லால்வானி எனக்கும் புரியும்” என்று சொல்லும்  போது அங்கே ராமாக இல்லாமல் கமல்ஹாசனாகத் தெரிவார்.

அட இதென்ன சார் கொடுமை?. ராம் என்ற கதாபாத்திரம் பேசுவது மட்டும் கமலாகிடுவாரா? சௌத் இந்தியன்னு சொன்னதுக்கு இப்படியெல்லாம் காரணம் திரிக்கக் கூடாதுனு யாராவது நினைச்சீங்கன்னா இதே சௌத் இந்தியன் விசயத்தில் டைரக்டர் கமல் நேரடியா எப்படி காட்சி வச்சிருக்கார்னு அடுத்த கட்டுரையில் சொல்லிட்டு, அப்புறம் மெயின் விசயத்திற்கு போகலாம்.

அதுவரை காத்திருங்கள்…

இந்த கட்டுரையில் இடம் பெறும் அனைத்து கருத்துக்களும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP