கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவத் தீவிரவாதி? - பகுதி -  9 

.........இஸ்லாமிய அமைப்புகளுக்கு கமல்ஹாசன் ஓர் அதிதீவிர ஹிந்துத்துவவாதி என்று தெளிவாகப் புரிந்திருக்கிறது. அதனால், தான் விஸ்வரூபம் படம் வரும் முன்னரேயே தடை கோரி அத்தனை பெரிய போராட்டம் நடத்தினர்.
 | 

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவத் தீவிரவாதி? - பகுதி -  9 

கராச்சியில் இருக்கும் ஒரு முஸ்லிம், நான் என் சுடுகாட்டை விட்டு வெளியேற விரும்பலனு சொன்னா என்ன அர்த்தம்?

பாகிஸ்தான் ஒரு சுடுகாடு என்று தானே அர்த்தம். அதை ஒரு முஸ்லிம் பாத்திரத்தை வைத்துச் சொல்ல வைத்திருப்பார். சற்று நேரம் கழித்து ஒரு பார்ட்டியில், மார்டிமர் வீலர் சாகேட் ராமிடம் கேட்பார். உன் எண்ணம் என்ன?
பார்டிசன் சார். I WANT A SINGLE COUNTRY. அதாவது, ஹிந்துக்களுக்கென்று தனி நாடு.

ஆனால், அம்ஜத் பாகிஸ்தான் கேட்கிறானே? அதுவும் பெரிய பகுதியாகப் பிரித்து?

அம்ஜத் : ஐயோ சாமி வாய்ப்பே இல்ல. நான் பாகிஸ்தான் போகல. அவனுக ஷரியத் சட்டத்தை நிறுவிடுவானுக. THANK YOU ! NO LARGE PAKISTAN.

இந்த சம்பாஷனையில் சொல்ல வரும் விசயம். ரத்தவெறி பிடிக்காத இஸ்லாமியர்கள் ஷரியத் சட்டத்தையும் விரும்பவில்லை, பாகிஸ்தானையும் விரும்பவில்லை.

ஆனால், புல்வாமாவில் நிகழ்ந்த பேடித்தனமான தற்கொலைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, பாகிஸ்தானிலுள்ள பாலகோட் பகுதியில் இருந்த, பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம் மற்றும் ஆயுதக் கிடங்குகளை அழித்த இந்திய விமானப்படையினரை விட, பாகிஸ்தான் பிரதமர் இம்ரன்கான் நல்லவர் என்று கோஷம் போடும் நிலை எப்படி இருக்கிறது? ஹேராம் படத்தில் ஓர் அற்புதமான காட்சி மிகவும் சரியாகப் பொருந்துகிறது.

கலவரத்திற்குக் காரணமான முன்னாள் ப்ரீமியர் ஹுசைன் சாஹீத் ஸுராவார்தி என்பவருடன், காந்திஜி ரகசியமாகப் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பார். ஸுராவார்தி அங்கிருப்பதை அறிந்து கொண்டு, மக்கள் கோபமாக காந்திஜி இருக்கும் இடத்திற்கு கீழே வந்து கோஷம் போட்டு, ஸுராவார்தி எங்கே என்று ஆக்ரோஷமாகக் கேட்பார்கள்.

அமைதியாக இருங்கள். அவர் இங்கே தான் இருக்கிறார் என்று ஸுராவார்தியை அழைத்துப் பேசச் சொல்வார். சாகேத் ராம் உரக்க கேட்பார், ஸூராவார்தி போன வருடம் நடந்த கலவரத்துக்கு யார் பொறுப்பு?

ஸூராவார்தி : நாம எல்லாரும் தான் காரணம்.

நேரடியாக பதில் சொல்லுங்கள் என்று மக்கள் அழுத்தம் கொடுத்ததும்.

நான் காரணம் ….என்று சொல்லி விட்டு காந்திஜியைத் திரும்பிப் பார்ப்பார். பார்த்து விட்டு நானே தான் காரணம் என்பார். மக்கள் எல்லாரும் ஹேய்ய்ய்னு கை தட்டி மகாத்மா காந்தி வாழ்க என்று கோஷம் போடத் தொடங்குவார்கள்.

அதைப் பார்த்து, சாகேத் ராம் என்ற கமல்ஹாசன் ஒரு முகபாவனையைக் கொடுப்பார் பாருங்கள்…. அடடா அத்தனை அற்புதமாகக் குற்றவாளி யார்? பாராட்டுப் பெறுவது யார்? மக்களின் மனோபாவம் அத்தனையையும் விளக்கி விடும்.

இன்றைய சூழலில் இந்திய விமானி அபிநந்தன், பாகிஸ்தானில் சிக்கி பின் சர்வதேச நிர்பந்தத்தால் விடுவிக்கப்பட்ட போதும், இம்ரர்கார் பாய் ஜிந்தாபாத் போடுவதும், இம்ரன்கானை அமைதிப் புறா என்று காட்டியதும் ஏனோ வெகு வெகுப் பொருத்தமாக அமைந்திருக்கு.

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவத் தீவிரவாதி? - பகுதி -  9 

வரலாறு என்பது வெவ்வேறு வேடத்தில் நிகழும் ஒரே சுழற்சி என்று சொல்வார்கள். எத்தனை உண்மை!

யாரை அமைதித் தூதுவர்னு சொல்லணும்? யாரை பயங்கரவாதியாகச் சொல்லணும்? எந்த நாடு வாழத் தகுந்தது? எந்தத் தலைவர் எப்படிப்பட்டவர் என்று இன்றைய ஹிந்துத்துவவாதிகள் சொல்கிறார்களோ? அவை அனைத்ததும் கமல்ஹாசன் அவர்கள் இந்தப் படத்தில், 19 வருடங்களுக்கு முன்பே சொல்லியிருக்கிறார். இன்னுமா சந்தேகம்... பழைய கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவத் தீவிரவாதி என்று?

நமக்கு வேண்டுமானால் புரியாமல் போயிருக்கலாம். ஆனால், இஸ்லாமிய அமைப்புகளுக்கு கமல்ஹாசன் ஓர் அதிதீவிர ஹிந்துத்துவவாதி என்று தெளிவாகப் புரிந்திருக்கிறது. அதனால், தான் விஸ்வரூபம் படம் வரும் முன்னரேயே தடை கோரி அத்தனை பெரிய போராட்டம் நடத்தினர். வேறு வழியில்லாமல் பல காட்சிகளை வெட்டி விட்டு தான் விஸ்வரூபம் வெளிவந்தது.

வெட்டி எடுத்த பின் வெளி வந்த படத்திலேயே இஸ்லாமிய பயங்கரவாதத்தை எவ்வளவு அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம். …

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP