கமல்ஹாசன் ஓர் ஹிந்துவத் தீவிரவாதி - பகுதி - 17

இப்பொழுது என்னால் ஒரு நூறு பேரைக் கூட்ட முடியும் என்று நிரூபித்தால் உங்களுக்குத் தேவையான நிதியுதவி எங்கிருந்தோ உங்களுக்கு வந்து சேரும். அதன் பின் நீங்கள் அவர்கள் கொடுக்கும் வேலையை மானம், வெட்கம், அசிங்கம் பார்க்காமல் செய்ய வேண்டும்.
 | 

கமல்ஹாசன் ஓர் ஹிந்துவத் தீவிரவாதி - பகுதி - 17

நல்லா வாழ்ந்துட்டு ஒரு படி கீழே இறங்குற மாதிரி ஒரு வலியும் அவமானமும், பசியால் கையேந்தும் வலியை விட அதிகம். சினிமாத் துறையினர் மற்ற துறையை விட அதிகம் புகழை அனுபவித்தவர்கள். வெற்றி பெருகிறார்களோ இல்லையோ வெற்றியில் இருப்பதாகவும், இன்னும் புகழுடன் தான் இருப்பதாகவும் காட்டிக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பார்கள்.

ஒரு பக்கம் கடன் தொல்லை. மறுபக்கம் புகழ் மங்கி சக போட்டியாளர்கள் முகம் பார்க்க முடியாத சூழல், அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகளும் வருமானமும் தேய்ந்து கொண்டே போகும் தருணத்தில் தற்கொலையைத் தவிர வேறேதும் இல்லை என்ற சூழலுக்குத் தள்ளப் படுகிறார்கள். இப்படியான கடும் சூழலில், ஒருவர் வந்து, உன் கடனை எல்லாம் அடைத்து விடுகிறேன். அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகளுக்கு ஏற்பாடு செய்கிறேன். கைமாறாக என்ன செய்ய முடியும் என்று கேட்டால் பாதிப்பின் உச்சத்தில் இருப்பவர் என்ன பதில் சொல்லுவார்?

கமல்ஹாசன் ஓர் ஹிந்துவத் தீவிரவாதி - பகுதி - 17

தன்னுடைய மானம் வெளியே அசிங்கப்படாத வகையில் என்ன சொன்னாலும் செய்கிறேன் என்பார் இல்லையா? அந்தப் புள்ளியில் அது தான் இன்றைய பல சினிமாக்காரர்கள் சிக்கியிருக்கிறார்கள். கடனிலிருந்து தப்பிக்க ஒரு கூட்டம், என்ன செய்தாவது காசு பார்த்தால் போதும் என்றொரு கூட்டம், அவன் செய்கிறானே இவன் செய்கிறானே அதனால் நானும் செய்கிறேன் என்றொரு கூட்டம் என்று கிட்டத்தட்ட 90 சதவீத சினிமாக்காரர்கள் இந்த வலைக்குள் கிடக்கின்றனர். இவர்களை இயக்குபவர்கள், நாட்டில் குழப்பத்தை உண்டு பண்ண விழையும் அந்நிய சக்தியின் கைக்கூலிகள். கருப்புப் பணம் கணக்கில்லாமல் வைத்திருப்பவர்கள்.

இதில் கமல்ஹாசன் போன்றோர் எப்படி பணம் பெறுவார்கள் என்றால், மூன்று வகையில் பலன் பெறுவார்கள். 
ஒன்று, பட்ட கடனை அடைப்பது. நடிகருக்கு 20 கோடிகள் கடன் இருப்பதாகக் கொள்வோம். அதில் 10 கோடி ரூபாய் கணக்கில் வராத கடன் என்றும் 
இரண்டு, 10 கோடி பேங்க் அல்லது வேறு நிதி நிறுவனங்கள் மூலம் வாங்கியதாக இருப்பின், அந்த கணக்கில் வராத கடனை வேறு யார் மூலமாகவோ அடைக்கப்படும். கணக்குப் படி நடிகரின் கடன் அடைக்கப் பட்டிருக்கும்.

மீதமிருக்கும் 10 கோடி கடனை அடைக்க, சம்பந்தப்பட்ட நடிகருக்கு புதிதாக ஒரு வாய்ப்பு ஏற்படுத்தப்படும். கமல்ஹாசனுக்கு பிக் பாஸ், போத்தீஸ் விளம்பரம் போல. அந்த வாய்ப்பிற்கு அதீத சம்பளம் அந்தந்த நிறுவனத்தால் கொடுக்கப்படும். பணம் கொடுத்த நிறுவனம் கருப்பை வெள்ளையாக்கிக் கொள்ளும். அந்த நிறுவனத்திற்கு பணம் வேறு வகையில் கொடுக்கப்படும்..

மூன்றாவதாக, சம்பந்தப்பட்ட நடிகருக்கு சினிமா எடுக்க ஃபைனான்ஸ் செய்யப்படும்.

இப்பொழுது கமல்ஹாசன் கடந்து வந்த பாதையை கவனியுங்கள். விஸ்வரூபம் 1 எடுத்ததில் ஏற்பட்ட மிகப் பெரிய கடன். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் தொடர் நஷ்டங்கள் விஸ்வரூபத்திற்குப் பிறகு ஐந்து படங்கள் தயாரித்துள்ளார். இப்பொழுது இரண்டு படங்கள் தயாரிப்பில் உள்ளன. இத்தனையும் தாண்டி கட்சி ஆரம்பித்து பாராளுமன்றத் தேர்தலில் முப்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் அளவிற்கு பணம் வைத்திருக்கிறார். அப்படியென்றால் எவ்வள்வு பணம் ஒரே ஒரு மனிதருக்கு மட்டும் செலவு செய்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.. எதற்கு இத்தனை செலவு செய்கிறார்கள்?

கமல்ஹாசன் ஓர் ஹிந்துவத் தீவிரவாதி - பகுதி - 17

நாட்டில் குழப்பம் உருவாக்க! மக்களிடையே எதிர்மறை சிந்தனைகளை உருவாக்க, இந்த நாடு எனக்கு ஏதும் செய்யவில்லை. இந்த நாடு வாழத்தகுந்ததில்லை. இந்த அரசாங்கம் மனிதகுலத்திற்கு எதிரானது என்ற சிந்தனையை விளக்க. இதையெல்லாம் நேரிடையாக பொதுக்கூட்டம் போட்டும். புத்தகங்களில் எழுதியும் முன்பு மக்களிடையே பரப்பியது கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் பரிவாரங்களும் ( DYFI, SFI, தமுஎச போன்ற அமைப்புகள்) இன்றைய காலகட்டத்தில் அத்தகைய அமைப்புகள் மக்களிடையே எடுபடாமல் போனதும், அடுத்த ஆயுதம் எடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். 

அதாவது, ஏதாவதொரு வகையில் இங்கே ஒருமைப்பாட்டினை உருவாகி விடாமல் தடுப்பது. அல்லது இருக்கும் ஒருமைப்பாட்டினை சீர்குலைப்பது. அது மொழிவாரியாகவோ ( இந்த ஆயுதம் தமிழகத்தில் கொஞ்சம் அதிகமாக பலன் கொடுத்துக் கொண்டிருக்கிறது)) மதரீதியாகவோ ஜாதிப் பிரிவினையாலோ, இயற்கை, விவசாயம் போன்ற பல்வேறு வகையில், பல்வேறு பிரிவினரிடம் மீண்டும் மீண்டும் கொண்டு சென்று நம்ப வைப்பது.

நம்பியவர்களை போராட்டக் களத்தில் இறக்கி விடுவது. அதற்காக யாரெல்லாம் முன் வருகிறார்களோ, அவர்களின் தேவை / அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து கொடுத்து விட்டு தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வார்கள். இதற்கு கமல்ஹாசன் போன்று உச்சபட்ச பிரபலம் தான் வேண்டும் என்பதல்ல, நம்ம தெரு முனையில் டீக்கடை வைத்திருக்கும் சுப்பிரமணியாக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்வர்.

இது நம் நாட்டின் மீது மட்டும் வெளிநாட்டினர் நடத்தும் மறைமுகத் தாக்குதல் என்று நினைத்து விட வேண்டாம். நம் நாடும் அண்டை நாடுகளில் இது போன்ற குழப்பும் வன்முறை, பிரிவினைவாதத்தைத் தூண்டி விடும். எடுத்துக்காட்டுக்கு, இலங்கையில் விடுதலைப்புலிகளின் மூலங்களான பல பிரிவினைவாதக் குழுக்களை உருவாக்கியது இந்தியா தான்.

கமல்ஹாசன் ஓர் ஹிந்துவத் தீவிரவாதி - பகுதி - 17

பலூசிஸ்தானில் பிரிவினைவாத அமைப்புகளை ஊக்குவிக்க இந்தியா நிறைய வழிகளில் வேலை செய்கிறது. இலங்கையில், ஆரம்பகாலத்தில் குறைந்தது பத்து பேர் கொண்ட குழுவாக அமைத்துக் கொண்டால் போதும் அவர்களுக்குத் தேவையான ஆயுதங்களை சப்ளை செய்தது போலவே, இப்பொழுது என்னால் ஒரு நூறு பேரைக் கூட்ட முடியும்.

நூறு பேர் கவனத்தை ஈர்க்கும்படி பேச முடியும் என்று நிரூபித்தால் உங்களுக்குத் தேவையான நிதியுதவி எங்கிருந்தோ உங்களுக்கு வந்து சேரும். அதன் பின் நீங்கள் அவர்கள் கொடுக்கும் வேலையை மானம் வெட்கம் அசிங்கம் பார்க்காமல் செய்ய வேண்டும். ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உங்களுக்கு உதவ சில அமைப்புகள் பல ஆட்கள் பின்னணியில் வேலை செய்து கொண்டிருப்பார்கள்.

அடுத்த மாத வருமானமே உறுதி இல்லாத ஒரு ஆளின் மீது போடப்பட்ட வழக்குக்கு, ராம் ஜெத்மலானிக்குச் சமமான வக்கீல்கள் வந்து வாதிடுவார்கள். யார் அனுப்பினார்கள்? யார் பணம் கொடுத்தார்கள் என்றெல்லாம் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியாது.

இது போன்ற செய்திகளெல்லாம் அரசாங்கத்திற்குத் தெரியாதா? தெரிந்திருந்தாலும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அடுத்த கட்டுரையில் காண்போம்….
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP