கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவத் தீவிரவாதி பகுதி 14

யார் சொன்னால் செய்வீர்கள்? உங்களைக் கவரும் ஒரு ஊடகம் மூலம், உங்களைக் கவர்ந்த ஒரு நாயகன் / நாயகி மூலம் அது தான் நாகரீகம் , ஸ்டைல், என்று சொல்லாமல் சொல்ல வைத்தால், அதை அப்படியே பின் தொடர மாட்டீர்கள்? என்ன மாட்டீர்கள் அதைத் தானே செய்து வருகிறோம்….
 | 

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவத் தீவிரவாதி பகுதி 14

கமல்ஹாசன் ஏன் பயிற்றுவிக்கப்படவேண்டும்? அவர் ஏன் நிஜ வாழ்விலும் நடிக்க வேண்டும்? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் முன், நம்மில் பலருக்கும் தெரிந்த சில விசயங்களை, இளம் தலைமுறைகளுக்கும் சுட்டிக் காட்ட பழைய சம்பவங்களை புரட்டிப் பார்ப்போம்.

1994 – 2000 வரையிலான ஏழு வருடங்களில், இந்தியாவிலிருந்து மட்டும் உலக மற்றும் பிரபஞ்ச அழகிகளாக ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏன் அதற்கு முன்பு நம்ம நாட்டில் அழகான பெண்களே இல்லையா? இல்லை, 2000க்குப் பின் தான் அழகிகளே இல்லையா?

இவர்கள் நோக்கம், அழகுசாதனப் பொருட்களை பெரும் மக்கட்தொகை கொண்ட நாடுகளில் பயன்படுத்தச் செய்வது தான். அதுவொரு பெரியளவு மார்கெட்டிங் டெக்னிக். நம்மைப் போல குறுகிய காலப் பலனுக்காகத் திட்டமிடுவது கிடையாது. நீண்டகால மற்றும் நிரந்தரமாக இடத்தைப் பிடிப்பது தான் நோக்கம். 

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவத் தீவிரவாதி பகுதி 14

உங்களுக்கொரு சந்தேகம் எழலாம். அதெப்படிங்க அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும் பல்வேறு கம்பெனிகள் பல்வேறு பொருட்களைத் தயாரித்து பல்வேறு முறைகளில் விற்கின்றனர். அதற்கும் அழகி போட்டிகளுக்கும் என்ன சம்பந்தம்? எளிமையான ஓர் உதாரணம் சொன்னால் விளங்கிவிடும்.

டிவியில், தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால், கால்சியம் கூடும் புரதம் கூடும் எலும்புகளுக்கு நல்லதுனு ஒரு விளம்பரம் வருமே அது யார் கொடுக்கும் விளம்பரம்? அனைத்திந்திய முட்டை உற்பத்தியாளர்கள் கௌன்ஸில் கொடுக்கும் விளம்பரம்.

இதன் மூலம், முட்டை உற்பத்தியாளர் முதல், நம்ம வீட்டுச் சந்து முனை அண்ணாச்சி வரை பயன்பெறுவர் இல்லையா? அப்ப நம்ம அண்ணாச்சியும் விளம்பரத்திற்கு காசு கொடுத்தாரா? அதே போல் தான். ஷாம்பு, சோப், பவுடர், தொடங்கி ஹேர் ரிமூவர் வரை எல்லாருக்குமான ஓர் ஒருங்கிணைந்த மார்கெட்டிங் தளம் உள்ளது. அதன் மூலம் இப்படி காய் நகர்த்துவார்கள்.

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவத் தீவிரவாதி பகுதி 14

அழகு சாதன நுகர்பொருட்களின் வியாபாரத்திற்காக என்னெவெல்லாம் செய்தார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு பார்ப்போம்…

# உள்நாட்டில் குங்குமம் / மஞ்சள் தூள் கம்பெனிகள் சிலவற்றை விலைக்கு வாங்குவார்கள். ப்ராண்ட் பெயரை மாற்றாமல் தொழிலை நடத்தி வருவார்கள். குங்குமம் மஞ்சள் தயாரிப்பில் அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்களைக் கொஞ்சம் கலப்படம் செய்து விற்பார்கள்.

 பயன்படுத்தும் பெண்களுக்கு தோல் பிரச்சினை வரும். இந்த மஞ்சள் / குங்குமம் தான் அலர்ஜிக்குக் காரணம் என்று தெரிந்ததும் கொஞ்சம் நாள் மஞ்சள் / குங்குமம் தவிர்ப்பீர்கள். நாளிடைவில் மஞ்சள் பூசும் வழக்கம் ஒழிந்தும், குங்குமத்திற்கு பதில் ஸ்டிக்கர் பொட்டு வைக்கும் வழக்கமும் ஏற்படும்.

# அதே கால கட்டத்தில், அழகிப் போட்டிகளால், பெண்களின் தன்னம்பிக்கை வளர்கிறது என்று பல மேடைகளில், டிவி ஷோக்களில் உங்களுக்கு பாடம் எடுக்கப்படும்.
# விளம்பரத்தில் ஒரு பெண்மணி, மிகவும் கவலையாக, தன் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பாக இருக்கிறது.

அதனால், என்னை ஆண்கள் கவனிக்க மாட்டேங்குறாங்க என்று வருத்தப்படுவார். அதற்கு கண்ட கண்டதையும் தேய்க்காமல், இந்தக் க்ரீமை தேய்  என்று ஒரு கருமத்தை உங்களுக்கு நல்லது என்று புகுத்தி விடுவார்கள். 

( தலையில் எண்ணெய் தேய்ப்பதால், மயிர்க்கால்களுக்கு புரதம் கிடைத்து  கூந்தல் ஆரோக்கியமாக இருந்து வந்தது. அத்துடன் அந்த எண்ணெய் உங்கள் முகத்திலும் பரவுவதால் உங்கள் முகமும் பூஞ்சைகள், மற்றும் வெயிலில் இருந்து பாதுகாக்கப்பட்டு வந்தது. பல நூறு சந்ததிகளாகப் பழகி வந்த ஒரு விசயத்தை ஒரு சில விளம்பரங்களின் மூலம் அதை உடைத்து விடுவார்கள்.)

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவத் தீவிரவாதி பகுதி 14

4, மாதவிடாய் காலங்களில், ஒரு பெண்ணிற்கு நிச்சயம் உடல் மற்றும் மனதளவில் ஓய்வு தேவை. அதைத் தான் காலகாலமாக நம் சமுதாயம் கொடுத்து வந்தது. ஆனால், ஒரு விளம்பரத்தில் ஒரு சிறுமி நீளம் தாண்டுதல் போட்டியில் வெல்வதற்கு இந்த நாப்கின் தான் உதவுகிறது என்பதாகவும், மாதவிடாய் காலங்களில் வீட்டில் ஓய்வெடுப்பதும் பெண்ணடிமைத்தனம் என்றும் உங்களுக்கு போதிக்கப்பட்டது.

இதை எல்லாம் யார் சொன்னால் செய்வீர்கள்? உங்களைக் கவரும் ஒரு ஊடகம் மூலம், உங்களைக் கவர்ந்த ஒரு நாயகன் / நாயகி மூலம் அது தான் நாகரீகம் , ஸ்டைல், என்று சொல்லாமல் சொல்ல வைத்தால், அதை அப்படியே பின் தொடர மாட்டீர்கள்? என்ன மாட்டீர்கள் அதைத் தானே செய்து வருகிறோம்…. 

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவத் தீவிரவாதி பகுதி 14

1960-70களில், வடக்கே சத்ருஹன் சின்ஹா, தெற்கே சிவாஜிகணேசன் போன்றவர்களின் படங்கள் தயாரிக்க பின்னணியிலிருந்து நிறைய உதவிகள் வருமாம். உதவிகளுக்குக் கைமாறாக, அந்தத் திரைப்படங்களில் நாயகர்கள் ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் காட்சிகள் வைக்கணும் அவ்வளவு தான்.

அந்த நடிகர்கள் உங்களைச் சிகரெட் பிடியுங்கள் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால், நீங்கள் தூண்டப்படுவீர்கள். எ.கா : நீராடும் வைகையிலே நின்றாடும் மீனே… என்ற பாடலைக் கவனியுங்கள். சிவாஜி, ஒரு கைக் குழந்தை இருக்கும் இடத்தில் கூட ரொம்ப ஸ்டைலாக சிகரெட் பிடித்துக் கொண்டே பாடுவார். 

கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவத் தீவிரவாதி பகுதி 14

இவ்வளவும் கமல் பற்றிய இந்தக் கட்டுரைக்கு எந்த வகையில் பொருந்தி வருகிறது என்பதை ஓரளவு புரிந்திருப்பீர்கள். புரியாதவர்கள் அடுத்த கட்டுரை வரை பொறுத்தருளவும்… கமல் இங்கே எந்த மாதிரியான கருவியாக்கப் பட்டிருக்கிறார் என்று விளக்குவோம்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP