கமல்ஹாசன் எனும் ஹிந்துத்துவத் தீவிரவாதி பகுதி 15

திடீரென்று மம்தாவின் போராட்டத்திற்கு ஆதரவு குரல் கொடுக்கிறார். ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப் போனவர்களைத் தடுத்த மம்தாவுக்கு , ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்த கமல் ஆதரவு அறிக்கை. கேட்கவே அசிங்கமாக இல்லை?
 | 

கமல்ஹாசன் எனும் ஹிந்துத்துவத் தீவிரவாதி பகுதி 15

கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்ததற்கும் சர்வதேச சதிக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? எதற்காக அதையும் இதையும் முடிச்சுப் போடுறீங்க?

காரணம் இருக்கு. அதையும் விளக்கமா சொல்லணும்னா வேறொரு விசயம் விளக்கிச் சொல்ல வேண்டும். ஆனால், உங்களுக்கு கமல் பெயரைச் சொல்லி அவரைச் சுற்றியே கட்டுரை போக வேண்டும் என்ற ஆவல் மேலோங்கி இருக்கிறது. சரி கமலைச் சுற்றியே செல்வோம்.

மார்ச் மாதம் 2018ல் உச்ச நீதிமன்றம் ஆறு வாரங்கள் அவகாசம் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவு இட்டது. ஆறு வார முடிவில் மத்திய அரசு மேலும் நான்கு வாரங்கள் அவகாச நீட்டிப்பு கேட்டது. அந்த நேரத்தில் கமல்ஹாசன் மிகவும் நாடகத்தனத்துடன்,  “பிரதமர் நினைத்தால் இதனை உடனே செய்துவிட முடியும். நீங்கள் உடனே செய்ய வேண்டும் ப்ளீஸ்ஸ் சார்” என்று அறிக்கை விட்டார். நாற்பது ஆண்டுகாலம் காத்திருந்த தமிழனுக்கு இன்னும் நான்கு வாரங்கள் பொறுக்க முடியாத நிலையிலா இருக்கிறான்?  சரி அதைக் கூட தமிழகத்தின் மீதுள்ள பாசத்திலும், புதிதாகக் கட்சி தொடங்கிய உத்வேகத்துடனும் தானும் களத்தில் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்ள அப்படி பேசினார் என்று எடுத்துக் கொள்வோம்.

கமல்ஹாசன் எனும் ஹிந்துத்துவத் தீவிரவாதி பகுதி 15

அடுத்ததாக 2018 ஜூன் ஒன்றாம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்ததாக அறிவிப்பு வந்து விட்டது. நல்ல மனுஷன் என்ன செஞ்சிருக்கணும்? மேலாண்மை வாரியம் அமைத்த பிரதமருக்கு நன்றி என்று அறிக்கை விட்டிருக்க வேண்டும் இல்லையா? நாகரிகமும் நன்றியும் நன்கறிந்த தமிழர் மரபில் வந்த கமல்ஹாசனுக்கு அந்த நாகரிகமும் நன்றியும் மறந்து விட்டதா இல்லை விருப்பம் இல்லையா என்று அவரிடம் தான் கேட்கணும். சரி அதை விட்டுத் தள்ளுவோம்.

கமல் என்ன கேட்டார்? - பிரதமரிடம் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் கேட்டார். 
அது கிடைத்ததா இல்லையா? - கிடைத்தது. 
காவிரி மேலாண்மை வாரியத்தின் வேலை என்ன? - காவிரி நதி சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களின் பிரச்சினைக்குத் தீர்வாக சுய முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தது. 
அதன்படி இனி சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்த முடியுமா? – முடியாது. 
அப்புறம் என்ன ஜடாமுடிக்கு ஜூன் மாதம் நான்காம் தேதி கர்னாடகா முதல்வர் குமாரசாமியைச் சந்தித்து வாருங்கள் காவிரி நதிநீர்ப் பிரச்சினையை நாம் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்று பிரச்சினையை முதலில் இருந்து ஆரம்பித்தார்?

கமல்ஹாசன் எனும் ஹிந்துத்துவத் தீவிரவாதி பகுதி 15

அதாவது,  காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு காவிரி மேலாண்மை வாரியம் தான் தீர்வு என்று பத்து நாட்களுக்கு முன்பு பிரதமருக்கு கோரிக்கை வைத்த கமல்ஹாசன், ஒன்றாம் தேதி கா.மே.வா அமைந்த பின்பு கர்னாடக முதல்வரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார் என்றால், இவரின் நோக்கம் என்ன? காவிரியை வைத்து தமிழகத்தில் குழப்பமும், அதன் மூலம் மத்திய அரசின் மீது வெறுப்பும், அதன் வெளிப்பாடாக தனிநாட்டுக் கோஷத்திற்கு ஆதரவு வலுப்பெறவும் கருவியாகச் செயல்படுகிறார். உண்மையா இல்லையா? 

அதன் பிறகு, காவிரி பிரச்சினை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது தெரிந்ததும் இதுவரை அந்தக் காவிரிப் பிரச்சினையைப் பற்றி ஒரு அறிக்கையையும் காணோம். இப்ப மட்டும் தமிழகத்தில் காவிரி கரையை உடைத்துக் கொண்டு ஓடுகிறதோ?  கமல்ஹாசனைப் பொருத்தவரை காவிரிப் பிரச்சினையைப் பற்றியும் தெரியாது, தூத்துக்குடி பிரச்சினையும் தெரியாது. ஊழலை ஒழிக்கவும் வழிவகை தெரியாது. மிஸ்டர் கமல், இந்தாங்க இன்னிக்கு இது தான் ப்ராஜெக்ட் இதைச் செய்துடுங்க என்று மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தால், கேள்வி கேட்காமல்  “ எஸ்ஸ் சார்ர்” என்று செய்யும் இடத்தில் இருக்கிறார். 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவியுங்கள் சொல்லியிருக்கிறார்கள். அதை அப்படியே சொன்னார். ஏனய்யா ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்பு? அங்கே பின்னாளிருந்து இயக்கிய மிஷனரிகள் பற்றி தெரியுமா என்று அர்னாப் கேட்ட கேள்விக்கு பொய் சொன்ன மக்கு பையன் வாத்தியாரிடம் முழிப்பது போல் பரிதாபமாக முழித்து அசிங்கப்பட்டார். 

கமல் கிளம்பிப் போய் பினராயி விஜயனைப் பாருங்கள் என்று சொன்னால், அடுத்த ஃப்ளைட்டைப் பிடித்து போய் பார்த்து வருவார். டெல்லி போனால், கேஜ்ரிவாலையும் பிரகாஷ் காரத்தையும் மட்டும் சந்தித்து வருகிறார். திடீரென்று மம்தாவின் போராட்டத்திற்கு ஆதரவு குரல் கொடுக்கிறார். ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப் போனவர்களைத் தடுத்த மம்தாவுக்கு , ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்த கமல் ஆதரவு அறிக்கை. கேட்கவே அசிங்கமாக இல்லை?

மேலே சொன்ன எதுவும் கமல்ஹாசனின் சுயபுத்தியில் சொன்னது இல்லை. சொல்லிக் கொடுத்ததைச் சொல்கிறார். அடுத்தவன் கட்டுப்பாட்டில் இயங்கும் இவருக்கு பகுத்தறிவாளிப் பட்டம் வேறு. 

எப்படியெல்லாம் பயிற்றுவிக்கப்படுகிறார் என்பதை அடுத்தப் பகுதியில் பார்ப்போம்.

 

newstm.in

இந்தக் கட்டுரையில் இடம்பெறும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP