கற்பனையில் மிதக்கும் கமல், தமிழகத்தின் அடுத்த சீமான் ஆகிறார்? 

யதார்த்தம், பல தொகுதிகளில் வெறும் 3 இலக்க ஓட்டுகள் தான் கிடைக்கும். அது கிடைத்தாலே பெரிது. இந்த உண்மை வெளிப்பட்டதும், ஊடகங்கள், கமலை கைவிட்டு விடும். இதே போக்கில் போனால், மக்கள் நீதி மய்யத்தின், 3 வது பிறந்த நாள், ஆழ்வார்பேட்டையில் தான் கொண்டாட வேண்டி இருக்கும். இதை அவர் புரிந்து கொண்டால் சரி.
 | 

கற்பனையில் மிதக்கும் கமல், தமிழகத்தின் அடுத்த சீமான் ஆகிறார்? 

தமிழகத்தில், அரை நுாற்றாண்டுகளுக்கு மேல், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆட்சி செய்துள்ளன. தேர்தல் சமயத்தில், அரசியல் கட்சிகள் வாக்குறுதிகள் அளிப்பதும், தேர்தல் முடிந்ததும், அவற்றை காற்றில் பறக்க விடுவதும் தொடர்கதையாக உள்ளது. 

இதனால் விரக்தி அடைந்துள்ள தமிழக வாக்காளர்கள், மாற்று அரசியலை விரும்பும் நிலை உருவாகியுள்ளது. அதன் எதிரொலியாகத்தான், விஜயகாந்த், எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்த்து பெற்றது, நடிகர் சீமானின் பொதுக் கூட்டத்திற்கு, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரள்வது உள்ளிட்டவை.

ஆனாலும், குறிப்பிட்ட ஒரு நிலைக்கு மேல் இவர்களால் வளர முடியலவில்லை. இவர்கள் நடத்தும் கட்சிகளின் வாக்கு வங்கியும் அதிகரிக்கவில்லை. இந்த பட்டியலில், தற்போது, நடிகர்கள் ரஜினி, கமல் இணைந்துள்ளனர். 

இவர்கள், மக்கள் மத்தியில் நன்கு அறிமுகம் ஆனவர்களாக இருந்தாலும், அவர்கள் நடத்தும் கட்சிகளில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் யாருமே, மக்களுக்கு அறிமுகம் ஆனவர்களாக இருப்பதில்லை. 

இவர்களின் முக்கிய பிரச்னையே, இவர்களின் கட்சிகளில், இவர்கள் மட்டுமே பிரபலமானவர்களாக இருப்பது தான். ஊடகங்கள் எவ்வளவு தான் பிரசாரம் செய்தாலம், அவர்களை தாங்கிப் பிடித்தாலும், அவர்களால் வெற்றி பெற முடியுமா என்பதும் பெரிய சந்தேகமே. 

கற்பனையில் மிதக்கும் கமல், தமிழகத்தின் அடுத்த சீமான் ஆகிறார்? 

தமிழகத்தில் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான திராவிடர் கழகத்திலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் உருவான போது கூட, மிகப் பெரிய தடைகளைத் தாண்டி தான் அந்த இயக்கம் தேர்தல் அரசியலில் வெற்றி பெற முடிந்தது. 

அந்த கட்சியிலிருந்து பரிந்து, எம்.ஜி.ஆர்., புதுக் கட்சி ஆரம்பித்த போது, அரசியல் அனுபவம் வாய்ந்த எத்தனையோ பேர் இரண்டாம் கட்ட தலைவர்களாக இருந்தனர். அவர்களின் அனுபவமும், வியூகமும் கூட, கட்சியின் வளர்ச்சிக்கு துணை நின்றன. 
 தி.மு.க.,விலிருந்து வெளியேறி, வைகோ புதுக்கட்சி துவங்கிய போது, அரசியல் அனுபவம் வாய்ந்த, மக்கள் மத்தியில் பரிச்சயமான, மாவட்ட செயலர்கள் அவர் பக்கம் இருந்தனர். 

ஆனால், சீமான், ரஜினி, கமல் உள்ளிட்டோரின் கட்சிகளில், அது போன்ற தலைவர்கள் இல்லை என்பதே மிகப் பெரிய குறையாக உள்ளது. ஆனால், இதை புரிந்து கொள்ளாமல், அவர்கள் செயல்படுவது தான் நகைச்சுவையின் உச்சம். அவர்களின் கட்சிகளில் சுற்றித் திரியும் இரண்டாம் கட்ட தலைவர்கள், ஓரிரவில் மந்திரி பதவியை அடைந்து விடலாம் என்ற கனவோடு வாழ்வதாகவே தெரிகிறது.


நாம் தமிழர் கட்சியை, சீமான், 2010ம் ஆண்டில் தொடங்கியதற்கு பின்னால், பல பொதுக் கூட்டங்களில் இன்றவும் பேசி வருகிறார். இலங்கை தமிழர்கள் மீது மரியாதை கொண்ட தமிழ் இளைஞர்கள், அவர்கள் ஆதரவாளர்களாக மாறி உழைத்து வருகிறார்கள். 

கற்பனையில் மிதக்கும் கமல், தமிழகத்தின் அடுத்த சீமான் ஆகிறார்? 

கட்சி தொடங்கிய பின்னர், 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல், 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தல் ஆகியவற்றில் பார்வையாளராக இருந்த நாம் தமிழர் கட்சி 2016ம் ஆண்டு 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. மாநிலம் முழுவதும் அது 4,58,104 ஓட்டுகள் பெற்று 1.07 சதவீதம் பெற்று 9ம் இடத்தை பிடித்தது. இது தான் தமிழர்கள் சீமான் கட்சிக்கு கொடுக்கும் மரியாதை. 

இந்த தேர்தலில் சீமானைப் போலவே,  நடிகர் கமலும் களம் இறங்கி விட்டாரார். காத்திருந்த ஊடங்கள் அவரை தமிழகத்தின் வெற்றிடத்தை நிரப்ப வந்த வெற்றியாளராகவே மாற்றிவிட்டன.  

அதை நம்பி கமல் புரியாதது போலவே பொதுக்கூட்டம் நடத்தி, தமிழர்களுக்கு அரசியலை விளங்க வைக்கிறார். இதுவரையில் தமிழகத்தை ஆண்ட கட்சிகள் அனைத்தும் தவறானவை. இதோ மக்கள் நீதி மய்யம் தமிழகத்தை மீட்க வந்துவிட்டது என்று கூட்டத்திற்கு கூட்டம் கருத்துமழை பொழிகிறார். 

கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் கடந்து விட்டதால், குழந்தை பேச தொடங்கி உள்ளது. 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போகிறாராம். 

தேசிய கட்சி அந்தஸ்த்து, மத்தியில் ஆட்சி, 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆளும் கட்சி இத்தனையும் உடைய, பா.ஜ.,வுக்கு, அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை வெறும் ஐந்து மட்டுமே. 

ஏன் அப்படி, பா.ஜ., நினைத்திருந்தால், அ.தி.மு.க.,வை மிரட்டி, சீட்களை பெற்றிருக்க முடியாதா? ஆனால், அவர்கள் அதை செய்யவில்லை. அதே போல், அ.தி.மு.க.,வும், பா.ஜ., சொல்வதற்கெல்லாம் தலை ஆட்டவில்லை. 

பா.ஜ., தரப்பில், தமிழகத்தில், 10 தொகுதிகள் கேட்கப்பட்டதாக ஒரு தகவல். கூட்டணியை இறுதி செய்வதில் முனைப்புடன் செயல்பட்ட, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, வெற்றி வாய்ப்புள்ள, வேட்பாளர்கள் 10 பேர் பட்டியலை தரும்படி, பா.ஜ., தலைமையிடம் கேட்டாராம்.

வேட்பாளர்கள் பட்டியலை அளிக்க, அந்த கட்சித் தலைமை சற்று யோசிக்க வேண்டியிருந்ததாம். நிதர்சனமும் அது தான். மத்தியிலும், பிற மாநிலங்களிலும் ஆளும் கட்சியாக இருந்தாலும், தமிழகத்தில், மக்களிடம் அறிமுகமான பா.ஜ., தலைவர்கள் மிகவும் குறைவு.

தமிழகம் முழுவதும் பாஜகவின் ஓட்டுகளில் எண்ணிக்கை, அந்த கட்சியில் உள்ள வெற்றி பெறும் வேட்பாளர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை கேட்டறிந்து, அந்த கட்சிக்கு, 5 தொகுதியை ஒதுக்கினார் பழனிசாமி. 

அதாவது, அந்த கட்சியை சேர்ந்த எந்த தலைவர்கள் வெற்றி பெறுவர், அவர்களுக்கு சாதகமான தொகுதிகள் எவை என்ற முழு சர்வேயும் நடத்தப்பட்ட பின்னரே, தொகுதி ஒதுக்கீடு நடந்துள்ளது.

மாநிலத்தில் ஆளும் கட்சி, மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சிகளே, இத்தனை சர்வேக்களுக்கு உள்ளாக வேண்டிருக்கின்ற நிலையில், திடீரென கட்சி ஆரம்பித்து விட்டு, வரும் தேர்தலில், தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளிலும், தனித்து போட்டியிடுகிறாராம் கமல். 

பல்வேறு நிதர்சனங்களை எண்ணிப் பார்த்து தான், பா.ம.க.,வும், 7 இடங்களுக்கு ஒப்புக்கொண்டது. 
தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் கூட கிளை உள்ள இடதுசாரிகள், 30நாட்களில் 31 போராட்டம் நடத்தும் அந்த கட்சியினர், ஒரே ஒரு தொகுதியாவது கிடைக்காத என்ற ஏக்கத்தில், கூட்டணி கட்சியுடன் பேச்சு நடத்தி வருகின்றன.  இது தான் யதார்த்த அரசியல். 

ஆனால் இது சீமானுக்கும், கமலுக்கும் மட்டும் இது புரியவில்லை. 40  தொகுதிகளிலும் தனித்து போயிடப் போகிறார்களாம். சீமான், ‛நாங்கள் எங்கள் கொள்கையை கூறுகிறோம் அதை நம்பி ஓட்டு போட்டுவிட்டு போகட்டும், இல்லாவிட்டால் துடைத்து விட்டு அடுத்த வேலைக்கு போய்விடுவோம்’ என்று கூறினார். 

ஆனால் கமல், இதை அறிந்ததாகவே தெரியவில்லை. 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போகிறாராம். அதில் அவர் வெற்றி பெற்று, மத்தியில் அமையவுள்ள புது அரசில் பங்கு வகிக்கப் போகிறாராம். கற்பனை என்னவோ நல்லாத்தான் இருக்கு. 

யதார்த்தம், பல தொகுதிகளில் வெறும் 3 இலக்க ஓட்டுகள் தான் கிடைக்கும். அது கிடைத்தாலே பெரிது. இந்த உண்மை வெளிப்பட்டதும், ஊடகங்கள், கமலை கைவிட்டு விடும். இதே போக்கில் போனால், மக்கள் நீதி மய்யத்தின், 3 வது பிறந்த நாள், ஆழ்வார்பேட்டையில் தான் கொண்டாட வேண்டி இருக்கும். இதை அவர் புரிந்து கொண்டால் சரி. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP