ஜெ., இல்லாத தேர்தலில் ஜொலிக்குமா அ.தி.மு.க.,? 

தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலும், சட்டசபை இடைத்தேர்தலும், தற்போதைய அதிமுக அரசுக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை நிரூபிக்கும் தேர்தலாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.
 | 

ஜெ., இல்லாத தேர்தலில் ஜொலிக்குமா அ.தி.மு.க.,? 

தமிழகத்தின் அசைக்க முடியாத அரசியல் ஆளுமையாக திகழ்ந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், தமிழகம் சந்திக்கும் முதல் பொதுத் தேர்தல். அதாவது, புதுச்சேரி சேர்த்து, 40 மக்களவை தொகுதிகளிலும் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்.

கடந்த, 2014ல் நாடு முழுவதும் வீசிய மோடி அலையையே, துவம்சம் செய்து, 37 தொகுதிகளில் வெற்றிக் கொடி நாட்டியவர் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா. ஆனால், அவரின் மறைவுக்கப் பின், கட்சியிலும், ஆட்சியிலும் எத்தனை மாற்றங்கள்? 

ஓ.பி.எஸ்., தலைமையில் ஓர் அணி, இ.பி.எஸ்., தலைமையில் ஓர் அணி, பின் இருவரும் சேர்ந்து ஓரணி. 
டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணி. அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஓர் அணி, தற்போது, மக்களவை தேர்தலில் சீட்டு கிடைக்காததால் குமுறும் தலைவர்கள் தலைமையில் ஓர் அணி. 

ஜெ., இல்லாத தேர்தலில் ஜொலிக்குமா அ.தி.மு.க.,? 

ஜெ., என்ற ஒற்றை ஆளுமை இல்லாததால், கட்சியில் மட்டுமின்றி ஆட்சியிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், மாநில நலன் கருதி பல்வேறு நிதியை கேட்டுப் பெறுவதில் வல்லவர் ஜெ., 

அதே போல், அவரை எதிர்த்து எந்த திட்டத்தையும், மத்தியில் ஆளும் அரசு தமிழகத்தில் அதை அமல்படுத்த முடியாது. 37 எம்.பி.,க்கள் வைத்துக்கொண்டு, மத்திய அரசில் அங்கம் வகிக்காமல் இருந்த போது கூட, அவரின் ஆளுமை சற்றும் குறையவில்லை. 

தமிழகத்திற்கு வரும் தேசிய தலைவர்கள், ஜெயலலிதாவை சந்திக்காமல் செல்வதில்லை. அப்படிப்பட்டவர் கட்டி காத்த கட்சி, இன்று, மாநில, தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. அவர் வெறுத்து ஒதுக்கிய கட்சிகளை கூட, இவர்கள் வலிய சென்று கூட்டணியில் இடம் தருகின்றனர். 

 

ஜெ., இல்லாத தேர்தலில் ஜொலிக்குமா அ.தி.மு.க.,? 
50 சதவீத இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு, விட்டுக் கொடுத்தது மட்டுமின்றி, அவர்களை தங்கள் சொந்த சின்னங்களில் போட்டியிடவும் அனுமதி அளித்துள்ளது அ.தி.மு.க., 

இதுவே, ஜெ., உயிருடன் இருந்த காலத்தில், கூட்டணி கட்சிகளையும், இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்கச் சொல்வார். அதை ஏற்பவர்களுக்கு மட்டுமே, தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும். 

ஆனால், இப்போது ஜெ., செய்ததற்கு தலைகீழாக அனைத்தும் நடைபெறுவதாக, அந்த கட்சி விசுவாசிகள் சிலர் புலம்ப துவங்கியுள்ளனர். 

அது மட்டுமின்றி, அதிமுகவிலிருந்து பிரிந்து அமமுக என்ற பெயரில், அனைத்து தொகுதிகளிலும், டிடிவி தினகரன் தரப்பினர் களம் இறங்குகின்றனர். இவர்கள் அதிமுக ஓட்டுகளை பிரிக்க வாய்ப்புள்ளது.

அது தவிர, சீட் கிடைக்காத வருத்தத்தில், உட்கட்சி பூசல் காரணமாகவும் உள்ளடி வேலைகள் நடக்கலாம். அது தவிர, ஜெ., உண்மை விசுவாசிகள், தற்போதுள்ள தலைமையை ஏற்பரா என்பதும் ஒரு கேள்வி. 

அதே சமயம், ஜெ., மரணத்திற்குப் பின், அதிமுக என்ற கட்சியே இல்லாத நிலை ஏற்படும் என ஆரூடம் கூறிய பலரின் கருத்துக்கள் இன்று பொய்த்துள்ளன.

 

ஜெ., இல்லாத தேர்தலில் ஜொலிக்குமா அ.தி.மு.க.,? 

ஜெ., இறந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில்,கட்சியில் ஏற்பட்ட சிக்கல்கள், ஆட்சிக்கு ஏற்பட்ட ஆபத்து என பலவற்றையும் கடந்து, இன்றும் இந்த ஆட்சி நீடிக்கவே செய்கிறது. மத்திய அரசின் தயவால் ஆட்சி தப்பியதாக கூறினாலம், அதை சமாளித்து நடத்துவதில், ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இதுவரை திறம்படவே செயல்பட்டு வந்துள்ளனர். 

ஆனால், மக்களின் மனநிலை எவ்வாறாக உள்ளது என்பதை, வரும் மக்களவை தேர்தல் முடிவுகளே தெரியப்படுத்தும். மக்களவை தேர்தலுடன், 18 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலும் நடைபெறவுள்ளதால், தற்போதைய அதிமுக அரசை, தமிழக மக்களும், அதிமுக விசுவாசிகளும் ஆதரிப்பரா என்பது விரைவில் தெரிய வரும்.

தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலும், சட்டசபை இடைத்தேர்தலும், தற்போதைய அதிமுக அரசுக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை நிரூபிக்கும் தேர்தலாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. 


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP