ஜெயலலிதாவுக்கு பலனளிக்காத சிகிச்சையும், பதறிப்போன நெஞ்சங்களும்...

டெல்லியிலிருந்து எய்ம்ஸ் டாக்டர்கள் குழு சென்னைக்கு விரைந்தனர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, தனியார் மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். இறுதியில், எவ்வளவோ முயன்றும் ஜெயலலிதா டிச.,5ம் தேதி மரணம் அடைந்ததாக அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
 | 

ஜெயலலிதாவுக்கு பலனளிக்காத சிகிச்சையும், பதறிப்போன நெஞ்சங்களும்...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 50 நாட்கள் கடந்த நிலையில், ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் அங்குள்ள நர்சுகளிடம் பேசுவதாகவும் தகவல் வெளியானது. அதை உறுதிபடுத்தும் வகையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெ., தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையே, தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல், வேட்பாளர்களின் படிவத்தில் ஜெ., கையொப்பம் அல்லது கைநாட்டு இடுதல், காவிரி விவகாரகம் குறித்து, தமிழக அரசு வழக்கறிஞருக்கு ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடந்ததாக கூறப்பட்டன. 

ஜெயலலிதாவுக்கு பலனளிக்காத சிகிச்சையும், பதறிப்போன நெஞ்சங்களும்...

ஜெயலலிதா உடல் நிலை குறித்து தொடர்ந்து நேர்மறையான அறிக்கைகள் வெளியானதால், அவரது தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். அவர் விரைவில் உடல் நலம் தேறி, வழக்கமான பணிகளுக்கு திரும்புவார் என ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தனர். எனினும், மருத்துவமனை வாசலில் தொண்டர்கள் கூட்டம் மட்டும் குறையவில்லை. 

இவ்வளவுக்கும் இடையே, டிச., 4ல் ஜெயலலிதாவின் உடல் நிலை திடீரென பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியானது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், உயிர் காக்கும் கருவிகளுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவமனை ததரப்பில் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. 

இதையடுத்து, தமிழகம் முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அவரது தொண்டர்கள் சென்னையில் குவிய துவங்கினர். ஆனாலும், தமிழகம் முழுவதும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

ஜெயலலிதாவுக்கு பலனளிக்காத சிகிச்சையும், பதறிப்போன நெஞ்சங்களும்...

டெல்லியிலிருந்து எய்ம்ஸ் டாக்டர்கள் குழு சென்னைக்கு விரைந்தனர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, தனியார் மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். இறுதியில், எவ்வளவோ முயன்றும் ஜெயலலிதா டிச.,5ம் தேதி மரணம் அடைந்ததாக அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

இது ஜெயலலிதாவின் அபிமானிகள், அதிமுக உண்மை விசுவாசிகளை சாேகக்கடலில் மூழ்கடித்தது....

தொடரும்...

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP