காங்கிரஸ் கச்சேரியில் ஜால்ட்ரா கலைஞர் வாசித்த தப்பு தாளங்கள்!

சிதம்பரத்தை போலவே வேறு சிலரும் காங்கிரஸ் கட்சியில் திறமையான மொழி பெயர்ப்பார்கள் இருக்கிறார்கள். ஆனால், புலியை பார்த்து சூடு போட்ட கதையாக, நாகர்கோவில் தொகுதியில் நடந்த காங்கிரஸ் பிரச்சார கூட்டத்தில், தங்கபாலு மொழிபெயர்பாளராக களம் இறங்கிவிட்டார்.
 | 

காங்கிரஸ் கச்சேரியில் ஜால்ட்ரா கலைஞர் வாசித்த தப்பு தாளங்கள்!

படம் முழுவதும் எத்தனை கொடூரமான காட்சிகளை காட்டினாலும், முடிவில் சிறிது நேரம் ஹீரோ அகிம்சையை போற்றிவிட்டால் போதும், படம் அமைதியை வலியுறுத்துவதாக மாறிவிடும் என்பது தமிழ் சினிமாவின் இலக்கணம். 

அதே போல தான், வட இந்திய தலைவர்கள், தமிழகத்தில் பேச வரும் போது, சகோதர, சகோதரிகளே வணக்கம். நான் தமிழில் பேச இயலாதத்தற்கு வருந்துகிறேன் என்று கூறிவிட்டால், போதும் அதன் பின்னர் அவர் ஆங்கிலத்தில், அல்லது இந்தியில் பேசினாலும், நம்மவர்கள் முதல் 4 வரி கொடுத்த மயக்கத்திலேயே கைதட்டி விட்டு வந்துவிடுவார்கள். 

இருந்தாலும், பா.ஜ.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகள், தங்களுக்கு என்று ஆஸ்தான மொழிபெயர்பாளர்களை வைத்திருக்கும். பா.ஜ.க.,வில் எச்.ராஜா, இல.கணேசன், காங்கிரஸ் கட்சிக்கு முன்னாள் அமைச்சர் சிதம்பரம் ஆகியோர் தான் அந்த கடமையை சரியாக செய்வார்கள். 

காங்கிரஸ் கச்சேரியில் ஜால்ட்ரா கலைஞர் வாசித்த தப்பு தாளங்கள்!

இவர்களி்ல ராஜா, இலகணேசன் ஆகியோரின் மொழிபெயர்ப்பு, பெரும்பாலும் தேவையற்ற விஷயங்கள் இல்லாது இருக்கும். சிதம்பரமோ, ஆங்கில உரையில் இல்லாத, அதற்கு தொடர்புடைய பல விஷயங்களை, தன் சொந்த சரக்கில் இருந்து எடுத்து மணக்க மணக்க கொடுப்பார். ஆங்கிலம் தெரியாத தொண்டனுக்கு, அடடே தலைவர் இவ்வளவு விஷயம் தெரிந்தவரா என்ற எண்ணம் ஏற்படும். 

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், ராஜீவ் காலத்தில் இருந்தே சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்வார். ராஜீவ், சகோதர சகோதரிகளே என்று தமிழில் கூறுவதை கூட, இவர் தமிழில் மொழி பெயர்ப்பு செய்வார். தடுமாற்றம், வரி மாற்றம், இல்லாத மொழிமாற்றமாக சிதம்பரத்தின் மொழி மாற்றம் இருக்கும். 

அதனால், காங்கிரஸ் கட்சியின் தேசிய நிர்வாகிகள் சொல்ல வரும் கருத்து, எழுதப்படிக்கத் தெரியாத தொண்டனுக்கு கூட தெளிவாக போய் சேரும். அதைக் கொண்டு அவன் வசிக்கும் கிராமங்களில், தன் தலைவன் இப்படி சொன்னான் என ஓங்கி சொல்லி தன்னை அறிவு ஜீவியாக காட்டிக் கொள்வான். 

காங்கிரஸ் கச்சேரியில் ஜால்ட்ரா கலைஞர் வாசித்த தப்பு தாளங்கள்!

சிதம்பரத்தை போலவே வேறு சிலரும் காங்கிரஸ் கட்சியில் திறமையான மொழி பெயர்ப்பார்கள் இருக்கிறார்கள். ஆனால், புலியை பார்த்து சூடு போட்ட கதையாக, நாகர்கோவில் தொகுதியில் நடந்த காங்கிரஸ் பிரச்சார கூட்டத்தில், தங்கபாலு மொழிபெயர்பாளராக களம் இறங்கிவிட்டார். 

அவர், ராகுல் பேசியதற்கு இணையாக வேறு விஷயத்தை கூறினாரே தவிர்த்து, ராகுல் கூற வில்லை. ‛‛திமுக, அதிமுக இடையே போட்டியிருந்தது. அந்த இருகட்சிகளிலும் பெரிய தலைவர்கள் இருந்தார்கள். ஆனால் எப்போதும் டெல்லியில் இருந்து தமிழக அரசை கட்டுப்படுத்தியதில்லை’’ என்று ராகுல் கூறுகிறார். 

ஆனால் தங்கபாலுவோ, ‛‛இப்போதுள்ள மத்திய அரசை பின்புறம் இருந்து ஆட்சி செய்கிறது’’ என்றார். ‛‛காப்பீடு தொகை முழுவதையும் பிரதமர் மாேடி, தொழில் அதிபர் அம்பானியிடம் ஒப்படைத்து விட்டார்’’ என்று ராகுல் குற்றம்சாட்டுகிறார். ஆனால் தங்கபாலுவோ, ‛‛அவர் தன் தொழில் நண்பர்களுக்காக ஆட்சி செய்கிறார்’’ என்றார். 

‛‛கடந்த 45 ஆண்டுகளில் இந்தியாவில் வேலை வாய்ப்பு இல்லாத நிலை எட்டப்பட்டுள்ளது’’ என்ற ராகுலின் கருத்து ‛‛உலகிலேயே வேலைவாய்பு இல்லாத பிரச்னை இந்தியாவில் தான் அதிகம்’’ என்று மொழிமாற்றுகிறார். 

காங்கிரஸ் கச்சேரியில் ஜால்ட்ரா கலைஞர் வாசித்த தப்பு தாளங்கள்!

இப்படி ராகுல் பேச்சு முழுவதும் மொழிமாற்றம் என்ற வகையில் கருத்துக் கொலை செய்யப்படுகிறது. அகில இந்திய கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வது, அவர்களை தொண்டர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல. அதையும் தாண்டி ,அவரின் கருத்துக்களை தொண்டர்கள் நேரில் அறிந்து கொள்ள வேண்டும் என்பதுதான். 

அதுவும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில், அவரின் கருத்துகளை ஓட்டாக மாற்ற வேண்டியது கட்டாயம். இந்த சூழ்நிலையில், நிலைய வித்வான்களை விடுத்து, தங்கபாலு போன்ற பக்க வாத்திய ஜால்ட்ரா கலைஞர்களை களம் இறக்கியது, கூட்டத்தின் நோக்கத்தை தோல்வி அடைய செய்துள்ளது. பிரச்சாரத்தின் முதல் கூட்டமே இப்படி. இனி வரும் கூட்டங்களிலாவது காங்கிரஸ் திருந்துமா?

newstm.in

இந்த கட்டுரையில் இடம் பெறும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே!
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP