அரசு வேலைக்கு வேட்டு வைக்கும் ஜாக்டோ ஜியோ...!

ஜாக்டோ ஜியோவினர் உங்களுக்குள் மீண்டும் அமர்ந்து பேசி போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி விட்டு, பின்னொரு சந்தர்ப்பத்தில் தெளிவாகத் திட்டமிட்டு மீண்டும் தொடங்கலாம். அரசாங்க உத்தியோகம் பார்க்கும் உங்களுக்கே தெரியும்…
 | 

அரசு வேலைக்கு வேட்டு வைக்கும் ஜாக்டோ ஜியோ...!

முன்னெல்லாம் ஜாக்டோ ஜியோ ஸ்ட்ரைக் பண்ணப் போகுதுனு சொன்னாலே அரசாங்கம் கூப்பிட்டு உட்கார வச்சு விருந்து போட்டு பேச்சு வார்த்தை செய்யும். இப்ப உங்க கோரிக்கைகளைப் பத்தியே அரசு யோசிக்கல. உங்களை எச்சரிச்சுக்கிட்டே, அப்பப்ப சஸ்பெண்ட் என்று கொட்டிக்கிட்டே இருந்தது. நீங்களும் உங்களைத் தூண்டி விட்ட பிற்போக்குவாதிகளின் பேச்சைக் கேட்டு முதலில் விரைப்பாகத் தான் சுத்துனீங்க… போகப் போக வீரியம் சுருங்கிப் போச்சே காரணம் புரியுதா? 

கடைசியில் உங்கள் கோரிக்கை, “ஐயா சாமி, எடப்பாடி பழனிச்சாமி… எங்களை ஒரு தடவையாவது பேச்சு வார்த்தைக்குக் கூப்பிடுங்க” என்றளவில் வந்து நின்று விட்டது. முன்னெல்லாம் அரெஸ்ட்னா நான் முந்தி நீ முந்தினு முன்னாடி போவீங்க. இப்ப? பின்னங்கால் பிடரில அடிபட தெறிச்சு ஓடுறீங்களே? 

அரசு வேலைக்கு வேட்டு வைக்கும் ஜாக்டோ ஜியோ...!

இந்த முறை, உங்கள் கோரிக்கைகளில் உங்களுக்கே ஒரு நியாயம் இருப்பதாக உங்களுக்குப் படவில்லை. உங்கள் பின்னாலிருந்து தூண்டி விடும் தேச விரோத சக்திகளுக்கு விலை போய் அவர்கள் தூண்டுதலில் பெயரால் போராடுவதால், போராட்டத்தின் மீது உங்களுக்கே ஒரு பிடிப்பில்லை. எது உணர்வுப்பூர்வமான போராட்டம்? எது தூண்டுதலின் பெயரால் ஏற்படும் போராட்டம் என்று அறியாத குழந்தை அல்ல அரசாங்கம் என்பது. உளவுத்துறை நீங்க என்ன கலரில் ஒன்னுக்குப் போகிறீர்கள் என்பது வரை புள்ளி விபரம் வைத்திருக்கும். 

தேர்தல் காலத்தில் நாட்டில் குழப்பத்தை உருவாக்கத் தூண்டி விட்டதற்கு நீங்கள் விலை போனதன் விளைவு. உங்களுக்கென்று இருந்த அந்த மரியாதை / தரம் / கெத்து என்பது உங்களிடமிருந்து போய் விட்டது. இனி உங்கள் போராட்டத்தை வைத்து எந்த காரியமும் சாதிக்க முடியாது என்று உங்கள் உறுப்பினர்களுக்கு அவநம்பிக்கையை விதைத்து விட்டீர்கள். 

அரசு வேலைக்கு வேட்டு வைக்கும் ஜாக்டோ ஜியோ...!

இப்பொழுதும் ஒன்றும் மோசம் போகவில்லை. உங்கள் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள, உங்கள் இயக்கத்தின் கட்டுக்கோப்பினைக் காப்பாற்றிக் கொள்ள போராட்டத்தை விலக்கிக் கொள்ளுங்கள். இது ஈகோ பார்க்கும் காலம் அல்ல! நீங்கள் நினைப்பது போல இது கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி போல அரசியல் ஆதாயத்திற்காக நிர்வாகம் வளைந்து செல்வதாக இல்லை. உங்கள் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் வேலைக்கே உத்தரவாதம் இல்லாத நிலை உருவாகியாச்சு… மிச்சம் இருக்கும் உறுப்பினர்களின் வேலைக்கும் வேட்டு வச்சுடாதீங்க… 

ஜாக்டோ ஜியோவினர் உங்களுக்குள் மீண்டும் அமர்ந்து பேசி போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி விட்டு, பின்னொரு சந்தர்ப்பத்தில் தெளிவாகத் திட்டமிட்டு மீண்டும் தொடங்கலாம். அரசாங்க உத்தியோகம் பார்க்கும் உங்களுக்கே தெரியும்… காரியம் பெருசா வீரியம் பெருசான்னு? முடிவு பண்ணிக்குங்க.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP