ஜெ., மரண விசாரணை: அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்துமா?

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முழு விசாரணையும் இன்னும் முடியாத போது, அது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகாத வரையில், இந்த தேர்தலில் அதிமுகவின் வெற்றியை அது பாதிக்குமா என்ற கேள்விக்கே இடம் இல்லை என்று சொல்லலாம்.
 | 

ஜெ., மரண விசாரணை: அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்துமா?

தமிழக அரசியலில் அசைக்க முடியாத ஆளுமையாக திகழ்ந்தவர் ஜெயலலிதா. அ.தி.மு.க.,வின் பொது செயலராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த அவர், உடல் நலக்குறைவால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட இரண்டரை மாதங்ககளுக்குப் பின், உயிரிழந்தார். 
டிச., 5, 2016ம் ஆண்டு ஜெயலலிதா காலமானார். அவரது உடல், சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையால், உடல் நலம் தேறியதாக கூறப்பட்ட ஜெயலலிதாவுக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் உயிர் இழந்ததாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. 

ஜெ., மரண விசாரணை: அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்துமா?

அவரின் மறைவுக்குப் பின், தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. ஆனாலும், அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சிலர் எழுப்பிய குற்றச்சாட்டை அடுத்து, அது குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. 

முதலில் ஆறு மாதங்களில் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜெ., மறைந்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அவரது மரணம் குறித்த விசாரணை இன்னும் தொடர்கிறது. 

ஜெ., முதல்வராக இருந்த போது, அவரது அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களாக இருந்த பலரும், விசாரணை ஆணையத்தில் ஆஜராகி தங்கள் வாக்குமூலத்தை அளித்துள்ளனர். 

அதே போல் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், அரசு அதிகாரிகள், அவருக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்டோரும், விசாரணை ஆணையத்தில் ஆஜராகினர். 

ஜெ., மரண விசாரணை: அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்துமா?

இந்த ஆணையத்தில் பதிவு செய்யப்படும் வாக்குமூலம் குறித்து, அதில் ஆஜராவோர், ஊடகங்களில் வெளியே கூறக்கூடாது என்ற நிபந்தனை இருப்பதால், எந்த சாட்சியும் இதுவரை மீடியாக்களிடம் வாய்திறக்கவில்லை. 

அதே சமயம், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை, அவருக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதே என்றும் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள சூழலில், ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு பெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் தான், தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இது தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில், மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் தேர்தல். 

அதே போல், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், மக்களவை தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுவதால், அது, மக்கள் மத்தியில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படவில்லை. அப்படியே இருந்தாலும், இந்த தேர்தலில், திமுக - அதிமுக இருகட்சிகளிடையே தான் போட்டி என்றில்லாமல், தினகரன் தலைமையிலான அமமுக வேட்பாளர்களும் களம் இறங்குகின்றனர். 

ஜெ., மரண விசாரணை: அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்துமா?

எனவே, இடைத்தேர்தலில், குறிப்பிட்ட ஒரு கட்சியே, அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என உறுதியாக கூற முடியாது. அதனால், ஆளுங்கட்சிக்கு ஆட்சியை தக்க வைப்பதற்கான பெரும்பான்மை இல்லாமல் போகும் எனவும் கூற முடியாது.

வரும் மக்களவை தேர்தல், மத்தியில் பா.ஜ., அல்லது காங்கிரஸ் இரண்டில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் தேர்தலே தவிர, தமிழக அரசை அசைத்துப் பார்க்கும் தேர்தலாக இருக்காது. 

இந்த அரசின் முழு ஆட்சி காலம் முடிந்து, தமிழகத்தில் சட்டசபை  பொதுத் தேர்தல் வந்தால் தான், அ.தி.மு.க., மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனரா என்பது தெரிய வரும். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முழு விசாரணையும் இன்னும் முடியாத போது, அது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகாத வரையில், இந்த தேர்தலில் அதிமுகவின் வெற்றியை அது பாதிக்குமா என்பது கேள்விக்குறியே. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP