ஜெ., மறைவுக்குப் பின் ஆட்சியும், காட்சியும் மாறிய கதை...

ஜெ., மறைவை அடுத்து, அவரால் ஏற்கனவே இரு முறை முதல்வராக நியமிக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். இரவு நேரத்தில், கவர்னர் மாளிகையில் நடந்த பதவியேற்பின் போது, ஓ.பி.எஸ்., உட்பட, அவரது தலைமையிலான அமைச்சர்கள் அனைவரும் அழுது கொண்டே பதவியேற்றனர்.
 | 

ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மாேடி, கவர்னர், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். ஜெ., உயிரோடு இருந்தவரை, போயஸ்கார்டன் பக்கம் எட்டிப்பார்க்காத, அல்லது ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்ட, சசிகலா உறவினர்கள் அவரது உடலை  சுற்றி நின்று கொண்டிருந்தனர். 

ஜெ., மறைவுக்குப் பின் ஆட்சியும், காட்சியும் மாறிய கதை...

இது, அதிமுக விசுவாசிகளை முகம் சுழிக்க வைத்தது. ஜெ., உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, ராணுவ மரியாதையுடன், சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரின் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி, சசிகலாவிடம் ஒப்படைக்கப்பட்டது. 

சில தினங்களில் காட்சி மாறியது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுகவை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றார். பின், ஓ.பி.எஸ்., முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக எம்.எல்.ஏ.,க்களால், அந்த கட்சியின் சார்பில் தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டள்தாகவும், தன்னை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் படியும் சசிகலா தரப்பில் அப்போதைய கவர்னர் வித்யாசாகர் ராவிடம் முறையிடப்பட்டது.

ஜெ., மறைவுக்குப் பின் ஆட்சியும், காட்சியும் மாறிய கதை...

எனினும், சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காக, கவர்னர் காத்திருந்தார். அந்த வழக்கில்,சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதையடுத்து, கூவத்துாரில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தலைமையிலான அரசு பதவியேற்றது. கட்சியின் துணை பொது செயலராக தினகரன் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

ஜெ., மறைவுக்குப் பின் ஆட்சியும், காட்சியும் மாறிய கதை...

இதற்கிடையே, சசிகலா தலைமையை எதிர்த்து, ஓ.பி.எஸ்., ஜெயலலிதா சமாதி முன் அமர்ந்து தர்ம யுத்தம் என்ற பெயரில் நுாதனப் போராட்டம் நடத்தினார். அவரை ஆதரித்து அதிமுகவின் ஒரு பிரிவினர் தனி ஆவர்த்தனம் செய்தனர். 

ஜெ., மறைவுக்குப் பின் ஆட்சியும், காட்சியும் மாறிய கதை...

இதற்கிடையே, தினகரனை கழற்றிவிட்ட எடப்பாடி பழனிசாமி, அவர் ஒரு பக்கம் தனி ஆவர்த்தனம் செய்தார். இதற்கிடையே, ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., தரப்பு இணைந்து செயல்பட சம்மதித்தது. இதையடுத்து, ஓ.பி.எஸ்., துணை முதல்வராக பொறுப்பேற்றார். 

ஜெ., மறைவுக்குப் பின் ஆட்சியும், காட்சியும் மாறிய கதை...

இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சிலர் சந்தேகம் எழுப்பியதால், அது குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. 

தொடரும்...

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP