இது உங்கள் சொத்து...!

...இந்த விமர்சனங்களை கேட்டு விட்டு கடந்து செல்லாமல் திருடன் கையில் சாவியை ஒப்படைக்காமல் இருக்க வேண்டியது மக்கள் கடமை. இதற்கு பறிபோவது உங்கள் சொத்து என்பது தான் காரணம்.
 | 

இது உங்கள் சொத்து...!

திமுக முதன்முதலில் ஆட்சிக்கு வந்த நேரம், அமைச்சர் ஒருவர் அதிகாரியிடம் எதையோ செய்ய சொல்ல, சார் நீங்க அமைச்சர், நாங்க அரசு ஊழியர்கள், நீங்கள் அமைச்சர்  நீங்க சொல்லுவதை எப்படி கேட்பது என்றார். அதற்கு அமைச்சரோ, நீங்கள் அரசு ஊழியர்தான் ஆனால் வரப்போகின்ற அல்லது கடந்து சென்ற அரசின் ஊழியர் அல்ல, இப்போதுள்ள அரசுக்கு ஊழியர் நீங்கள், ஆனால் நான்தான் அரசு நான் சொல்வதை கேளுங்கள் என்றார். இப்போது நிலைமை தலைகீழ் அமைச்சர் சொல்லவே வேண்டாம், அவர் எள் என்றால் நம்மபவர்கள் புண்ணாக்காவே நிற்பார்கள்.

ஆனால் எல்லா அவலத்திற்கும் திமுக அல்லது காங்கிரஸ் கட்சியே அரிச்சுவடி எழுதியது என்பது இப்போது வெளிப்பட்டுள்ளது. அந்த கட்சியில் பெரும்பாலும் நேர்மையாளர்களும், நாட்டிற்காக சுய வாழ்க்கையை இழந்தவர்கள் அதிகம் இருப்பதால் அவர்கள் செய்த தவறுகள் எதுவும் தெரியாமல் போய்விட்டது.

மேற்கு வங்க இடதுசாரி ஆட்சிக்கு மம்தா முடிவு கட்டியது போல காங்கிரஸ் கட்சியின் நீண்ட கால ஆட்சிக்கு மோடி முடிவு கட்டியதால் காங்கிரஸ் கட்சியின் பல நடவடிக்கைகள் விமர்சனத்திற்கு வந்துள்ளன. அவற்றில் ஒன்று இந்தியா யார் அப்பன் வீட்டு சொத்து என்று புறப்பட்டுள்ள விமர்சனம்.

ராகுல் பிரதமர் மோடியை காவலாளியே திருடன் என்று சொல்ல, பதிலுக்கு மோடி உன் அப்பாதான் நம்பர் ஒன் ஊழல்வாதி என்று கூற குழாய் அடிசண்டை தொடங்கியது. சலுான் குப்பையை கிளறினால் தங்கமா கிடைக்கும் என்ற பழமொழிப் படி அரசியல் வாதிகள் அடித்துகொள்ளத் தொடங்கி விட்டதால், நம் வரிப்பணம் எப்படி எல்லாம் வீணடிக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவந்துள்ளது.

1950களில் இந்தியாவை போர் மேகம் சூழ்ந்த நேரம், இதனால் நம் முப்படைகளும் போருக்கு தயாராக இருக்க வேண்டிய நிலையில், அப்போதைய பிரதமர் நேரு, மகள் இந்தியா, பேரன்கள் சஞ்சய். ராஜீவுடன் போர்கப்பலில் இந்தோனேசியா வரை சுற்றுப்பயணம் செய்தார் என்று பாஜஎம்பி ஸ்ரீபரேஷ் டூவிட்டி உள்ளார். இதற்கு வலு சேர்க்கும் வகையில் சர்ச்சை நாயகன் சுப்பிரமணியசாமி, நேரு தன் தோழிக்காக விமானப்படை விமானத்தை கோரியதாவும், அதை சுப்பிரமணியசாமியின் மாமனார் கபாடியா மறுக்கவே அவரை மாற்றிவிட்டு ஜூனியர் ஒருவரை நியமித்தவர் நேரு.

இதே போல ராஜீவ் போர்க்கப்பலை சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்தியதற்கு நானே நேரடி சாட்சி என்று ஐஎன்எஸ் போர்கப்பலில் பணியாற்றிய பிரபுல்லாகுமார் என்பவர் தன் பங்கிற்கு டூவிட்டி உள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து பால்பாயாசம் ராஜூவ் உபயோகத்திற்காக பறந்தது.

இப்படி பிரதமர் நம் வரிப் பணத்தை செலவு செய்து விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்தனர். மோடிக்கு குடும்பம் இல்லை  அவ்வாறு இருந்தால் அவரும் இப்படித்தான் நடப்பார் என்று காங் பிரமுகர்கள் அவரையும் விமர்சனம் செய்துள்ளார்கள். இதே போல ஒரு சிலர் வாய்ப்பு இருந்தால் தங்கள் ஊருக்கு ரயில் விட்டு இருக்கிறார்கள். மக்கள் சவுரியம் என்று காரணம் கூறப்பட்டாலும் உண்மையி்ல அது இவர்கள் நேரடியாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பது தான் காரணம்

மோடி புண்ணியத்தால் நேரு குடும்பத்தின் விதி மீறல் வெளியே. வந்தது தமிழக அரசியல்வாதிகள் அரசு பணத்தை தங்கள் வசதிக்கு பயன்படுத்த வேண்டும் என்பதைத் தான் விதியாகவே வைத்துள்ளார்கள். இப்படிப்பட்டவர்கள் உண்மை முகம் தெரிவதற்காகவாவது. இது போன்ற தனிப்பட்ட விமர்சனங்கள் தேர்தல் காலத்தில் எழுவது நல்லது. இந்த விமர்சனங்களை கேட்டு விட்டு கடந்து செல்லாமல் திருடன் கையில் சாவியை ஒப்படைக்காமல் இருக்க வேண்டியது மக்கள் கடமை. இதற்கு பறிபோவது உங்கள் சொத்து என்பது தான் காரணம்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP