ஆழ உழ வேண்டிய நேரம் இது !

புத்திசாலி விவசாயி நிலத்தை அகல உழாமல் ஆழ உழுவதைப் போல கண்டுபிடித்த வழக்குகளை முடித்துவைக்கும் பணியில் பொன்மாணிக்கவேல் தீவிரமாக செயல்படவேண்டும். அதுதான் இந்த புண்ணிய காரியத்திற்கு தேவையான பலன் கிடைக்கும்.
 | 

ஆழ உழ வேண்டிய நேரம் இது !

லஞ்சம் வாங்கும் போக்குவரத்து போலீசாரை கண்டிக்கும் போது, அவர்கள் பதில் கூறுவது வேடிக்கை மற்றும் அதிர்ச்சியாக இருக்கும். சார் நாங்க வாங்குற 10, 20 ரூபாய் தான் உங்களுக்கு கண்ணுக்கு தெரியும். கிரைம் போலீசார் அடிக்கிடறது எல்லாம் வெளியே வரவே வராது, போய் உங்க புலனாய்வு திறமையை அங்க காட்டுங்கள் என்று அவர்கள் ஆவேசம் காட்டும் போது, குற்றப்பிரிவு போலீசார் பற்றிய சிந்தனையே எழும்.

எதிரி யார் என்றே தெரியாமல் களம் இறங்கி வேலை செய்ய வேண்டிய கட்டாயம் குற்றப்பிரிவு போலீசாருக்கு. அதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் தொடர்பு இருந்தால் வழக்கை கிடப்பிலும் போட முடியாது. எப்படியாவது குற்றவாளிகளை கண்டுபிடித்து அவனிடம் கெஞ்சி கூத்தாடி பொருட்களை கைப்பற்றிவிட்டால் தான் நிம்மதி. ஆனால் என்ன பொருள் கைப்பற்றினார்கள் என்பது அந்த போலீசாருக்கும், சம்பந்தப்பட்ட திருடனுக்கு மட்டும் தான் தெரியும், பறிகொடுத்தவனுக்கு கிடைத்த வரை லாபம் என்ற கதைதான். நகமும் சதையுமான பறி கொடுத்த மனிதனுக்கே இந்த நிலை என்றால் இறைவன் கதி கேட்க வேண்டுமா? அவர் என்ன அன்றாடம் ஸ்டேஷனுக்கு வந்து கண்ணீர் விட்டு கதறவா போகிறார்?

கஜனி முகமது இந்தியாவின் மீது படையெத்த போது இந்த நாட்டில் அரண்மனையில் ஒன்றும் இருக்காது, கோயிலை முற்றுகையிட்டு போர் நடத்துங்கள் தேவையான செல்வம் கிடைக்கும் என்று மடை மாற்றிவிட்டதாக செவிவழிச் செய்தி ஒன்று உண்டு.

இந்துக்களும் சரி, இந்த நாட்டை ஆண்ட மன்னர்களும் சரி தங்களை விட இறைவன் மீது மிக அதிகமாக பக்தி வைத்திருந்தனர். அதனால் தான் பல தங்க சிலைகள், கோயிலின் அஸ்திவாரங்களில் ஒரிஜினல் நவக்கிர கல்கள் என்று கோயில் செல்வ செழிப்பாக இருந்தன.

இது பற்றிய விபரங்களை அவர்கள் எழுதிவைத்த கல்வெட்டுகள் நமக்கு படிக்க கூட தெரியாது. இன்னொரு புறம் வெளிநாட்டில் சிலைகளுக்கு சிறப்பான வரவேற்பு  உள்ளது.
ஆழ உழ வேண்டிய நேரம் இது !
இதனால் பல ஆண்டுகளாவே சிலைகளை கடத்தவது தமிழகத்தில் நடந்துள்ளது. பழனி நவபாஷான சிலையை வைத்துதான் அங்குள்ள டாக்டர் ஒருவர் புகழ் பெற்றார் என்று சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பேசுவாரகள்.

இந்த பின்புலத்தை வைத்துப் பார்த்தால் தமிழகத்தில் எந்த சிலையையும் பாரம்பரியமானது இல்லை என்ற முடிவுக்கு வருவது தான் எளிதான விஷயம்.

ஆனால் யாருக்கும் சிலை திருட்டுப் போனது பற்றி கவலை இல்லை. நாம் ஊற்றும் அரை லிட்டர் பாலுக்கு நம் வேண்டுதலை நிறைவேற்றி தந்தால் போதும், அது 10 நுாற்றாண்டு சாமியா இருந்தால் என்ன, பத்துநாளைக்கு முன்பு பிறந்த சாமியாக இருந்தால் என்ன? இந்த சூழ்நிலை பொருக்காமல் தான் இறைவன் தனக்கு தானே சிலை கண்டுபிடிப்புக்காக ஒரு டீம் ஏற்பாடு செய்து கொண்டார்.

மயிலாதுறை யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி நீதிபதி மகாதேவன், பிடி ஆதிகேசவலு, பொன்மாணிக்க வேல் என்ற சின்ன டீம் தான் அது.

நண்பர் ஒருவர் சொன்ன தகவல் இது. வக்கீல் யானை ராஜேந்திரனை அவரது நட்பு வட்டங்கள் அனுமார் என்று தான் அழைப்பார்களாம். அனுமன் வாலில் தீவைத்ததும் இலங்கையே அழிந்தது அல்லவா, அது போல யானை ராஜேந்திரனை பற்றவைத்து விட்டால் அவர் ஊரையே இழுந்து விட்டுவிட்டு தான் ஓய்வார் என்பதால் இந்த பெயரில் அழைப்பார்களாம். இது உண்மையோ பொய்யோ, சிலைகடத்தல் வழக்கில் இவ்வாறு தான் நடந்தது.
ஆழ உழ வேண்டிய நேரம் இது !
அவருக்கு இணையாக காவல்துறையில் அதிகாரி பொன்மாணிக்க வேல், சார் விலை கொடுத்துதான் வாங்கி உள்ளார் என்று சொன்னால் போதும், வெளியே தெரியாமல் பல கோடி ரூபாய்கள் கைமாறும். ஆனால் அதை விடுத்து ஊர் ஊராக சென்று கடத்தப்பட்ட சிலைகளை தேடி கண்டுபிடித்து கொண்டு வருகிறது பொன். மாணிக்க வேல் மற்றும் அவர் குழு. அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கூட தஞ்சம் அடைந்த சிலைகள் இவர்களின் முயற்சியால்   இந்தியா திரும்பி உள்ளன. அவ்வளவு ஏன் மோடியே ஆஸ்திரேலியாவில் இருந்து நடராஜர் சிலையை மீட்டுக் வந்து ஒப்படைத்துள்ளார் என்றால், இந்த டீம் முயற்சி எவ்வளவு பெரிது என்று தெரியவரும்.

கட்டுப்பாடுக்கு பேர் போன காவல்துறையில் இது போல நீதிமன்றத்திற்கு மட்டும் கட்டுப்பட்டு செயல்படும் டீம் உருவானது அபூர்வத்திலும் அபூர்வம். அதனால் தன் பொன் மாணிக்க வேலுக்கு பலவிதமான தொல்லைகளை கொடுத்த மாநில அரசு எதுவும் பலன் கிடைக்காததால் அவர் ஓய்வு பெறும் நாளை வழிமேல் விழிவைத்து காத்திருந்தது.
ஆழ உழ வேண்டிய நேரம் இது !
நவம்பர் 29ம் தேதி சென்னையில் பொன் மாணிக்க வேலுக்கு பணிஓய்வு பாராட்டு விழாவை பார்த்தவர்களுக்கு ஐயோ இனி அவ்வளவு தானா? ஒரு சிலையும் வராதா என்ற ஏக்கம் இருந்தது.

ஆனால் (நேற்று) 30ம் தேதி நீதிமன்றம் பொன்மாணிக்க வேலுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து அவரை சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்துள்ளது. நல்லவர்கள் எண்ணத்தில் பால் வார்த்துள்ளது. அதே நேரத்தில் தமிழக சிலைக்கட்டத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அதாவது இந்த பதவி ஐஜி அந்தஸ்தில் இருந்து உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஐஜி பொன்மாணிக்கவேல் ஏதாவது மாயாஜாலத்தில் பதவியை தொடர்ந்தால் கூட அவருக்கு நடைமுறை சிக்கல் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவரை விட உயர் பதவியில் உள்ளவர்களை நியமித்துள்ளார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிலைகடத்தல் தடுப்பு வழக்குகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அதிலும் அனைத்து வழக்குகளும் 36 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை.  கரையை தேடிகிட்டே இருப்பீங்க என்பது போல சிலைகளை தேடிக்கிட்டே இருந்தால் பொன்மாணிக்க வேலுவுக்கு ஆயுள் மூழுவதும் பதவியை நீட்டித்தால் கூட பத்து வழக்குகள் பாக்கி இருக்கும். இருப்பதோ 365 நாட்கள் தான். அதனால் புதிது புதிதாக சிலைகளை தேடி அலையாமல் இது வரை கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளுக்குரிய வழக்குகளை நடத்தி முடிப்பது தான் புத்திசாலித்தனம். அதற்கு ஏற்ப கும்பகோணத்தில் நடைபெறும் சிறப்பு கோர்ட் நாள் தோறும் இயங்க செய்து, விரைவான முடிவுகளை எடுக்க செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான் தற்போது வரை பட்ட கஷ்டங்களுக்கு பலன கிடைக்கும் .மேலும் இந்த வழக்குகள் தொடர்பான செலவுக்கு தமிழக அரசு தேவையான தொகையை முன்னரே ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும். வேண்டுமானால் அறநிலையத்துறையை இத்துடன் இணைந்து தேவையான நிதியை உருவாக்கி கொள்ளலாம். அப்போதுதான் நிம்மதியாக இவர்கள் வேலை செய்ய முடியும். ஐஜியாக இருந்த போதாவது. பொன் மாணிக்க வேல் உத்தரவு போட முடியும். இப்போது அவர் ஓய்வு பெற்றுவிட்டார். அதனால் நிர்வாக ரீதியாக அவர் தலையிட முடியாது. அந்த சூழ்நிலையில் பணத்தை முடக்கிவிடுவதன் மூலம் அவர் செயல்பாடுகளை எளிதில் நிறுத்திவிட முடியும். அதற்கும் வாய்ப்பு கொடுக்காத நிலையை .கோர்ட் உருவாக்க வேண்டும்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் புத்திசாலி விவசாயி நிலத்தை அகல உழாமல் ஆழ உழுவதைப் போல கண்டுபிடித்த வழக்குகளை முடித்துவைக்கும் பணியில் பொன்மாணிக்கவேல் தீவிரமாக செயல்படவேண்டும். அதற்கு தேவையானவற்றை கோர்ட் செய்ய வேண்டும். அதுதான் இந்த புண்ணிய காரியத்திற்கு தேவையான பலன் கிடைக்கும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP