இது தமிழக கட்சிகள் யோசிக்க வேண்டிய நேரம்!

மத்தியில், கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி என்று திமுக அடிக்கடி சொல்வது போலவே, செயல்பட வேண்டிய தருணம் இது. மாநிலத்தின் நலன் கருதி, தமிழக அரசியல் கட்சிகள்,மத்தியில் ஸ்திரமான ஆட்சி அமைய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
 | 

இது தமிழக கட்சிகள் யோசிக்க வேண்டிய நேரம்!

லோக்சபா தேர்தல் இன்னும் சில மாதங்களில் வந்து விடும். இதில், பா.ஜ.க., - காங்கிரஸ் இடையில் தான் போட்டி. இதில் காங்கிரஸ், தனித்து வெற்றி பெறும் நிலை இப்போது இல்லை. பா.ஜ.க., அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், கூட்டணி ஆரவுடன் தான் ஆட்சி அமைக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது. இதனால் அவர்கள் கூட்டணியை நாட வேண்டிய நிலையில் உள்ளனர்.

இந்த நிலையை, மாநிலக்கட்சிகள் நன்கு பயன்படுத்திக் கொண்டு மாநிலத்தை வளப்படுத்துகிறதோ இல்லையோ, தங்களை வளப்படுத்திக் கொண்டார்கள். இதனால் தான் காங்கிரஸ், பாஜக கட்சிகளின், 5 ஆண்டு கால ஆட்சியில் பலன் அனுபவித்துவிட்டு, கடைசி நேரத்தில் வெளியேறி வந்து, மீண்டும் தனியே தேர்தலை சந்திக்கின்றன.

அதே நேரத்தில், தனியே நின்று போட்டியிடும் அவர்களுக்கு ஓட்டுப் போட்டு வெற்றி பெறவைத்தால், மத்திய அரசை அமைக்க முடியுமா என்றால் அதுவும் முடியாது. மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய கட்சியை, தன் அரசியல் வலிமையால் மடக்கி, மாநிலத்திற்கு நன்மை செய்வார்களா என்றால் அதுவும் நடக்காது.

தமிழகத்தில், 37 தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்.பி.,கள், நம் மாநிலத்திற்கு என்ன செய்தார்கள். ஆளும் கட்சியான, பாஜகவின் ஒரு எம்பியான பொன்ராதாகிருஷ்ணன் செய்த சாதனைகளை ஒப்பிட்டு பார்த்தால்  வேறுபாடு தெரியும்.

மத்தியில் தேசிய கட்சி தலைமையில், பெரும்பான்மை பலத்துடன்  அரசு  அமைந்தால் தான் நாட்டிற்கு நல்லது. இந்த இரு தேசிய கட்சிகளுக்கும் போதிய வலிமை கிடைக்காமல், 3 வது அணி என்று ஒரு கும்பல் ஆட்சியில் அமர்ந்தால் அதற்கு நித்திய கண்டம் பூர்ண ஆயுசுதான்.

தற்போதுள்ள மத்திய அரசுக்கு முன்பு வரை, சர்வதேச அளவில் இந்தியாவை பற்றி யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். தற்போது அ.மெரிக்கா, ரஷ்யா போன்று இந்தியா என்ன சொல்கிறது என்று உலகநாடுகள் உற்றுப்பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

பிரதமர் மோடியின் மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும், சர்வதேச அளவில் அவரின் நடவடிக்கைகள் இந்தியா மீது பெரும் மதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வரும் மத்திய அரசு, இதனை தக்க வைத்துக் கொள்ள  வேண்டிய கட்டாயம் உள்ளது. மூன்றாவது அணி என்ற கும்பல் ஆட்சி பொறுப்பேற்றால் சத்தியமாக இது முடியாது.

மோடியின் உழைப்பு முழுவதும் வீணாவது  மட்டும் அல்லாமல், அவரின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நாடுகள், இந்தியா மீது வஞ்சம் தீர்க்க முயலும். அது நாட்டிற்கு நல்லது அல்ல.

மத்தியில், கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி என்று திமுக அடிக்கடி சொல்வது போலவே, செயல்பட வேண்டிய தருணம் இது. மாநிலத்தின் நலன் கருதி, தமிழக அரசியல் கட்சிகள்,மத்தியில் ஸ்திரமான ஆட்சி அமைய முயற்சி மேற்கொள்ள வேண்டும். 
அதன் பின்னர் மத்தியில் ஆட்சி செய்யும் கட்சிக்கு மெஜாரட்டி கிடைத்தால் கூட, கூட்டணிக் கட்சிகளை இணைத்துக் கொண்டு ஆட்சி செய்ய வலியுறுத்தி அதிலும் இடம் பெற வேண்டும்.

தற்போது, பாஜக பெரும்பான்மை பெற்றாலும் கூட, கூட்டணி ஆட்சிதான் என்று அறிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் இது, கூட்டணி ஆட்சி என்று கூறினால் கூட, உண்மையில் இது தான் கூட்டாட்சி. 

இந்த திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் நல்லது செய்யும். அதற்கு ஏற்ப தமிழக அரசியல் கட்சிகள் சிந்திக்க வேண்டும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP