பாதர் ஸ்கூலில் இப்படியா?

கிறிஸ்தவ மதம் பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் கொண்டவர்கள் கூட அவர்களின் மருத்துவ, கல்வி சேவையை ஏற்பார்கள். ஒரு காலகட்டத்தில் டெல்லியில் ஐஏஎஸ்கள் பெரும்பாலானவர்கள் தமிழர்களாக இருந்ததற்கு காரணம் கிறிஸ்தவ பள்ளிகள் என்றால் அது மிகையாகாது.
 | 

பாதர் ஸ்கூலில் இப்படியா?

கிறிஸ்தவ மதம் பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் கொண்டவர்கள் கூட அவர்களின் மருத்துவ, கல்வி சேவையை ஏற்பார்கள். ஒரு காலகட்டத்தில் டெல்லியில்  ஐஏஎஸ்கள் பெரும்பாலானவர்கள் தமிழர்களாக இருந்ததற்கு காரணம்  கிறிஸ்தவ பள்ளிகள் என்றால் அது மிகையாகாது.

தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில்  விபரம் அறிந்த குடும்பத்தினர் வீட்டில்  சேட்டை  செய்யும் ஆண் பிள்ளைகளை மிரட்டும்  வார்த்தை உன்னை  தபோவனம் ஸ்கூலில் சேர்த்துவிடுவேன் என்பது தான். மற்றவர்களின் ஒரே தீர்வு தங்கள் ஊரில் உள்ள பாதர் ஸ்கூல், சேட்டை  மாணவர்கள் மட்டும் அல்லாமல், கல்வியில் சோட்டை போகாத மாணவர்கள் தேர்வு செய்யும் பள்ளியும் கிறிஸ்தவ பள்ளிகள் தான். இதற்கு அங்கு கடைபிடிக்கப்படும் கட்டுப்பாடு, அந்த பாதிரியர்கள், அருட்சகோதரிகள் வெளிப்படுத்திய அன்பு தியாகம் போன்றவைகள் தான்.

கடந்த 1980களின் இறுதி பகுதி வரை ஆங்காங்கே ஆங்கிலேய பாதிரியர்கள் பள்ளிகளை நடத்தினர்.  நாங்கெல்லாம் கான்வென்டில் தான் படித்தோம் என்பது சமுதாயத்தின் அந்தஸ்த்தை வெளிப்படுத்தும் வார்த்தையாக இருந்தது.

எல்லா விஷயங்களைப் போலவே பாதிரியார்கள், அருட்சகோதரிகளின் வாழ்க்கை கூட  மாறிவிட்டது.  கடந்த காலத்தில் பூசைக்கு மட்டும் தலைகாட்டிய பாதிரியார்கள், அறைக்குள் இருந்து கொண்டு பாவமன்னிப்புக்கு சுவரில் உள்ள துளைவழியாக கை நீட்டிய பாதிரியர்கள் இப்போது அங்கியை பூசைக்கு மட்டும் அணியும் காலமாக மாறிவிட்டது.  

அருட் சகோதரிகள் கதையும் அது தான். கேரள மாநிலத்தில் தங்கள் புனிதத்தை பாதுகாக்க போராட வேண்டிய  கட்டாயம். மதர் என்று முன்னாள் அருட்சகோதரி  கிறிஸ்தவத்தில் நடக்கும் அனாச்சாரங்களை புத்தகமாகவே எழுதி இருக்கிறார். போப் ஆண்டவர் கூட மன்னிப்பு கோரும் அளவிற்கு கிறிஸ்தவம் நீச்சம் அடைந்து விட்டது.  இதில் கத்தோலிக்க கிறிஸ்தவம் நிறுவனமயமானது என்பதால் விமர்சனம் அதிகமாக இருக்கிறது. மற்றவர்கள் அவ்வாறு இல்லாததால் வெளிப்படையாக தெரியவில்லை.

இவை அனைத்துமே அவர்கள் மதத்திற்குட்பட்ட விஷயம். ஆனாலும்  அவர்கள் பணியாற்றும்  இடங்களி்ல் குறிப்பாக  கல்வி நிறுவனங்களில்  இது போன்ற குற்றச்சாட்டுகள் இதுவரை எழாமல் இருந்தது. ஆனால் அங்கும் இதே கதிதான் என்று  சென்னை ஐகோர்ட் போட்டு உடைத்துவிட்டது.

சென்னை தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் விலங்கியல் துறை மாணவ, மாணவிகள் கடந்த ஜனவரி மாதம் பெங்களூர், மைசூர், கூர்க் போன்ற ஊர்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.  அங்கிருந்து திரும்பிய மாணவிகள் 34 பேர்  சாமுவேல் டேன்னிசன் என்ற பேராசிரியர் தங்களை பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுத்துமூலம் கல்லுாரி நிர்வாகத்திற்கு புகார் கொடுத்தனர். அதன் பேரில் அவர்  பணி நீக்கம் செய்ய  கல்லுாரி நிர்வாகம் நோட்டிஸ் அனுப்பியது. அதை ரத்து செய்யக் கோரி சாமுவேல் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.  இது தொடர்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவு தான் பல விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

கிறிஸ்தவ மிஷனரிஸ் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் படிக்கும் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து  பெற்றோர்கள் மத்தியில் நிலவுகிறது. நல்ல கல்வியை வழங்கினாலும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள்  போதிக்கிறதா என்றால் அது மில்லியன் டாலர் கேள்வி. என்று குறிப்பி்ட்டுள்ளார்.

இது வரையில் இந்து இயக்கங்கள் மட்டுமே கூறி வந்த கருத்தை தற்போது ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அதுவும் சம்பந்தப்பட வழக்கில் இது போன்று குறிப்பிட்டது, கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் ஒழுக்கம் என்பது எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

இந்த சூழ்நிலை கிறிஸ்தவ மதத்தை பிடித்துள்ள புற்றுநோய். இது முற்றி வெடிக்கும் போது கிறிஸ்தவ மதம் இந்தியாவில் இருக்காது. மருத்துவம், கல்வி ஆகியவற்றால் கால் ஊன்றிய அந்த மதம் அந்த துறைகள் மூலமாகவே கொஞ்சம் கொஞ்சமா அழிவும் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் நடந்த ஹோமோ செக்ஸ், பாலியல் பலாத்காரம் போன்றவற்றிக்கு போப் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டார். அதே நேரத்தில் மற்ற பிரிவு கிறிஸ்தவர்களின் நடவடிக்கையை தட்டிக் கேட்பது யார்.

இந்தியா ஏசுவுக்கே என்று திட்டமிட்டு செயலாற்றும் முன்பு சுய கட்டுப்பாடு ஒழுக்கம் கொண்ட இந்தியா உருவாக, அல்லது இருப்பதாவது அழியாமல் இருக்க நாம் உதவ வேண்டும் என்று ஒவ்வொரு பாதிரியாரும் சபதம் ஏற்க வேண்டிய காலம் இது .

அவ்வாறு செய்யாமல் தங்களின் துறவு, அல்லது தங்களின் இச்சைக்கு மற்றவர்களை வீழ்த்தும் ஆயுதம் என செயல்பட்டால் உங்களை இயேசு கூட மன்னிக்க மாட்டார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP