என்று தணியும் இந்த மைக் மோகம் ??

வட மாநிலங்களில் காங்கிரஸ், மாநில கட்சிகளை மீறி பாஜக வளர்ச்சியடைந்து ஆட்சியை பிடித்துள்ளது. அந்த வழியை உணர்ந்து தமிழகத்திலும் அதை அமல்படுத்தினால் போதும், பாஜக வளர்ச்சி பெறும். அதுதான் நீடித்த நிலையான வளர்ச்சியாகவும் இருக்கும்
 | 

என்று தணியும் இந்த மைக் மோகம் ??

கடந்த காலங்களில் தினமலர், தினமணி, தின தந்தி, எக்ஸ்பிரஸ், இந்து, தினகரன், தூர்தர்ஷன், ஆகாஷவாணி ஆகிவைத் தான் செய்தி ஊடகங்கள். இதனால் தேவையற்ற பரபரப்பு செய்திகளுக்கு என்றுமே இடம் இருந்ததில்லை. அதிலும் தினமணியில் 2 நாட்களுக்கு பின்னர் தான் செய்தி வெளியாகும். இது குறித்து அதன் வாசகரிடம் கேட்டால், உறுதி செய்யப்பட்ட தகவல்கள் தான் எங்க பேப்பரில் வெளியாகும் என்று காலரைத் துாக்கி விட்டுக் கொண்டு கெத்தாக கூறுவார்கள்.

ஆனால், இப்போதோ விஷ்வல், ஆன்லைன் என்று அளவில்லாமல் பெருகிவிட்டன ஊடகங்கள். இதற்கிடையில், யார் செய்திகளை முந்தித்தருகிறார்கள் என்ற போட்டிவேறு. இதனால் "எங்கெங்கு காணிணும் மைக்குகள்ளடா" என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது.

அமமுக கட்சி பொதுச்செயலாளர் தினகரன் விமானநிலையத்தில் பேட்டி கொடுத்துவிட்டு, நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்றார். ஆனால், அங்கும் சில பைக்குள் சார் பேட்டி என்றனர். இப்போதான் ஏர்போட்டில் கொடுத்தேன், அதற்குள் என்ன அரசியல் மாற்றம் வந்து விடும் என்று அவர் பதில் கூற, அவர்கள் வேறு, நாங்கள் வேறு, ‘‘கவர்’’ பிளீஸ் என்று பேட்டி எடுத்துள்ளனர். தினகரனை விட கேப்டன் ஆவேசமானவர். ஆனால் இந்த மைக்குகளுக்கு தீனி போட வென்றே சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி டெல்லியில் இருந்து தமிழகம் வந்தாலும், இங்கிருந்த அங்கு சென்றாலும் ஏர்போர்ட்டில் பேட்டி கொடுப்பதையே வழக்கமாக கொண்டு இருந்தார். அதில் ஏதாவது ஒரு திட்டம் இருக்கும், அதுவும் 15 நாளில் நிறைவேற்றப்படும் என்ற உறுதியும் கட்டாயமும் இருக்கும். இதனால் அவரை ஏர்போர்ட் நாராயணசாமி, 15 நாள் நாராயணசாமி என்று அனைவரும் கிண்டலாக அழைப்பார்கள். அவர் முதல்வர் என்ற முள்கீரடத்தை தாங்கி பாண்டிச்சேரியிலேயே முடங்கிவிட்டார்.

இதனால் ஆதரவற்றுப் போன ஊடகங்களுக்கு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை கை கொடுத்தார். ஏர்போர்டில் பேட்டி அளிப்பது தான் தன் வழக்கம் என்பது போல பேட்டிகளை வஞ்சனையில்லாமல் வாரித் தெளித்தார். இதனால் ஊடகங்கள் மட்டும் அல்லாமல் மீம் கிரிடியேட்டர்கள் தொழிலும் நன்றாக நடந்தது. இதை தொடர்ந்து, கட்சியில் சரியான கட்டமைப்பு இல்லாவிட்டாலும் எல்லா சேனல்களிலும் தாமரை மலர்ந்தே தீரும் என்று ஒலித்தன. ஆனால் ஊடகங்களின் கெட்ட நேரம் போல, அவரும் கவர்னர் பதிவி பெற்று ஒரு அறைக்குள் அடங்கி விட்டார்.

இவரை தொடர்ந்து, இவர் விட்ட இடத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பிடித்துக் கொண்டார். நின்றால் பேட்டி, அமர்ந்தால் விவாதம் என்று இவர் ஒரு படி மேலே சென்று விட்டார். அதிலும் குறிப்பிட்ட இடைவெளிகளில், திமுக ஆதரவு கருத்துக்களை வெளியிடுவது, ரஜினிக்கு அழைப்பு விடுப்பது என்று பேட்டியின் இலக்கணமாகவே மாற்றிவிட்டார். இவர் ரஜினிக்கு அழைப்பு விடுப்பதால் ஏதோ தமிழகத்தில் பாஜக ரஜினியை நம்பித்தான் இருப்பது போன்ற ஒரு தோற்றம் உருவாகிவிட்டது.

தமிழகத்தில் 1980–90களில் ஆர்.எஸ்.எஸ், பாஜக, இந்துமுன்னணி, வி.எச்.பி, அபாவிபா, இன்ன பிற இயக்கங்கள் அனைத்திலும் ஒருவரே உறுப்பினராவும், ஒவ்வொன்றுக்கும் ஒரு நிர்வாகியே என்று இருந்தனர். இப்போது பாஜகவை தெரியாத சிறு குழந்தை கூட இல்லை என்று வளர்ந்து இருக்கிறது. இதற்கு காரணம் ரஜனி அல்ல, மோடி, அமித்ஷா என்பதை பொன் ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வட மாநிலங்களில் காங்கிரஸ், மாநில கட்சிகளை மீறி பாஜக வளர்ச்சியடைந்து ஆட்சியை பிடித்துள்ளது. அந்த வழியை உணர்ந்து தமிழகத்திலும் அதை அமல்படுத்தினால் போதும், பாஜக வளர்ச்சி பெறும். அதுதான் நீடித்த நிலையான வளர்ச்சியாகவும் இருக்கும். அதைவிடுத்து, நான் பாஜக காரன் அல்ல, அரசியலுக்கு வந்தால் நேரடியாக முதல்வர் பதவிதான், இந்த எதிர்கட்சி தலைவர்கள் பதவியெல்லாம் கிடையாது என்று தெளிவுபட உரைத்த பின்னரும் ரஜினி பின்னால் சுற்றுவது கட்சிக்கு பலத்தை தராது என்பதை குறிப்பிட் சில பேர் உணர வேண்டும். இந்த முயற்சியில் ஈடுபட்டு மைக் மோகத்தை பாஜக கைவிட ணே்டியது காலத்தின் கட்டாயம். அவ்வாறு இல்லாவிட்டால் தமிழகம் உங்களை கைவிட்டு விடும்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP