விதி செய்த குற்றம் அன்றி வேறு ஏதம்மா?

தேசத்துரோகத்தை தொடர்வேன் என்று சவால்விட்டது உண்மையா, இந்திய இறையாண்மைக்கு எதிராக உறுதியேற்றது உண்மையா என்ற விவாதத்தை தொடங்கி உள்ளது. நாளை இதைத் சொல்லியே வழக்கு தொடர்ந்தால் ராஜ்யசபா எம்பி நிலை. இப்படி வைகோவை பதட்டத்திலேயே வைத்திருப்பதில் விதிக்கு கூட விளையாட்டாக மாறிவிட்டது. பேசாமல் ஆசிரியர் வீரமணியிடம் ஆலோசனை பெற்று, ஈவேரா சமாதியில் வைகோ பரிகாரம் செய்யலாம்.
 | 

விதி செய்த குற்றம் அன்றி வேறு ஏதம்மா?

எதிரிகள், துரோகிகள் இழிவு செய்வது , பழிவாங்குவது இயற்கை தான். வைகோ வாழ்வில், விதி கூட விளையாடி அவரை கேலி செய்கிறது. உணர்ச்சி வரும்படி பேசலாமே தவிர்த்து, உணர்ச்சி வசப்பட்டு பேசிவிடக் கூடாது என்பது மேடைப் பேச்சாளர்களின் அடிப்படை இலக்கணம். அதை உணராதவர் வைகோ. தானும் உணர்ச்சி வசப்பட்டு, கேட்பவர்களையும் அதில் மூழ்கடித்து சிக்கி கொள்வார் வைகோ.

அப்படி அவர், உணர்ச்சி வசப்பட்ட சம்பவம் 2009ம் ஆண்டு நடந்தது. சென்னையில் நடந்த நுால் வெளியீட்டு விழாவில் வைகோ பேசிய போது, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசினார். இதுதொடர்பாக வழக்கு பதியப்பட்டது. உடனே வழக்கை நடத்தி முடித்து இருக்கலாம். ஆனால் விதி விட்டு விடுமா? 2017ம் ஆண்டு வரை இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. பின்னர் 2017ம் ஆண்டில் வைகோ சரண் அடைந்தார். 52 நாட்கள் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்த வழக்கில், அப்போதே நாள் தோறும் விசாரணை நடத்தி தீர்ப்பு அளித்திருக்கலாம். அப்படி இருந்தால் வைகோ தியாகி பட்டம் மட்டுமே பெற்று இருப்பார். அவருக்கு அந்த அதிஷ்டம் எல்லாம் கிடையாது.

இதன் இடையே, திமுகவில் இருந்து வெளியேற காரணமான ஸ்டாலினை போற்றிப் புகழ்ந்து, அவர் வேட்டியில் விழுந்த கறையையெல்லாம் துடைத்து விட்டு, லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கு ஏற்பாடு செய்தார். கடைசி நேரத்தில் துரைமுருகன் செய்த வம்பால், கூட்டணி இருக்குமோ, இல்லையோ என்ற நிலைக்கு தள்ளப்பட்டு, ஈ.வே. ராமசாமி, காமராஜர், எம்ஜிஆர், முத்துராமலிங்க தேவர், அம்பேத்கார் என்று வேண்டாத தலைவரையெல்லாம் வேண்டி ஒரு வழியாக கூட்டணி ரயில் கிளம்பும் நேரத்தில் தொற்றிக் கொண்டார் வைகோ.

தேர்தல் முடிவு மதிமுகவிற்கு சாதகமாக அமைந்தது. ஆனாலும், வைகோவிற்கு ராஜ்யசபா சீட்டு கிடைக்குமா அல்லது ஸ்டாலின் கவிழ்த்து விடுவாரோ என்று அடுத்த பயம் தொற்றிக் கொண்டது. அதையும் மீறி வைகோவிற்கு சீட்டும் கொடுக்கப்பட்டது.

இந்த நேரத்தில் தான் 2009ம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு 10 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு கொடுக்கப்பட்டது. தண்டனை கொடுத்த மாதிரியும் இருக்கணும், கொடுக்காதது போலவும் இருக்க வேண்டும் என்று நினைத்து ஓராண்டு தண்டனை கொடுக்கப்பட்டது. இதிலும் விதி விளையாடியது. 

குறைந்தபட்ச தண்டனை கொடுங்கள் என்று வைகோ கூறாத வார்த்தைகள் இடம் பெற, வைகோ அதற்கு மறுப்பு தெரிவித்து. நான் எவ்வளவு தண்டனை வேண்டுமானலும் கொடுங்கள்…. நான் பேசியது தேசத் துரோகம் என்றால் அதை தொடர்ந்து கொண்டே இருப்பேன் என்று வீராவேசமாக கொள்கை முழக்கம் இட்டார். சோதனைகளில் கூட கொள்கையை கைவிடாதவர் வைகோ என்று எண்ணிய, 24 மணி நேரத்திற்குள்ளாகவே விதி விளையாடி அவரை வடிவேலு போல மாற்றிவிட்டது.

ராஜ்யசபா வேட்புமனுத்தாக்கல் செய்யும் போது, வேட்பாளர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும். அதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படமாட்டேன் என்று உறுதியேற்க வேண்டும். வேறு வழி, அங்கே வைகோ இந்திய இறையான்மைக்கு எதிராக செயல்படமாட்டேன் என்று உறுதியேற்றார். இந்த இரண்டு சம்பவங்களையும் தொடர்பு படுத்தி கிண்டல் செய்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.

தேசத்துரோகத்தை தொடர்வேன் என்று சவால்விட்டது உண்மையா, இந்திய இறையாண்மைக்கு எதிராக உறுதியேற்றது உண்மையா என்ற விவாதத்தை தொடங்கி உள்ளது. நாளை இதைத் சொல்லியே வழக்கு தொடர்ந்தால் ராஜ்யசபா எம்பி நிலை. இப்படி வைகோவை பதட்டத்திலேயே வைத்திருப்பதில் விதிக்கு கூட விளையாட்டாக மாறிவிட்டது. பேசாமல் ஆசிரியர் வீரமணியிடம் ஆலோசனை பெற்று, ஈவேரா சமாதியில் வைகோ பரிகாரம் செய்யலாம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP