அத்திவரதர் விழித்தாலும் கூட அரசின் உறக்கம் கலையாதோ?

அத்திவரதர் தரினம் தொடங்கி இன்னும், 24 நாட்கள் கடக்கவில்லை.இன்னொரு பாதி நாட்கள் உள்ளன. அதனால் இப்போதே கூட அரசு கண்விழித்து தேவையான நடவடிகை மேற்கொள்ள.வேண்டும். அது பக்தர்கள், வரதரை தரிசிக்க அரசு கொடுத்த வரமாக அமையும்.
 | 

அத்திவரதர் விழித்தாலும் கூட அரசின் உறக்கம் கலையாதோ?

வெளிநாட்டுகாரர் ஒருவர் கும்பமேளாவை பார்த்தார். அருகில் இருந்தவரிடம் இவ்வளவு பேர் வருவதற்கு விளம்பரம் செய்ய எவ்வளவு கோடி ரூபாய் செலவு என்றார். அதற்கு அவரோ, கோடியா அப்படியெல்லாம் இல்லை; எங்கள் ஊரில் பஞ்சாங்கம் என்ற ஒரு நுாலை வெளியிடுவோம். அதில் ஒரே ஒரு வரியில் இன்று கும்பமேளா தொடக்கம் என்று அச்சிட்டு இருப்போம். அதை பார்த்துவிட்டுதான் இவ்வளவு பேர் வந்து  இருக்கிறர்கள் என்றார். 

ஆன்மீகம் இத்தனை சிறப்பு கொண்டது. கும்பகோணத்தில் மகாமகம், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும். இதுவும் கூட பஞ்சாகத்தின் மூலம், சித்திரை மாதமே மக்களுக்கு தெரிந்துவிடும். உள்ளூர் வாசிகளுக்கு அதற்கு முன்பாகவே தெரியும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட மகாமகத்திற்கு பின்னர், தமிழக அரசு பாதுகாப்பு உட்பட அனைத்து விஷயங்களையும் சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.

மகாமகம் நடக்க இருக்கும் ஓரு ஆண்டிற்கு முன்பாக, இதற்காக நிதி ஒதுக்கி, அடிப்படை வசதிகள் தொடங்கும். கடைசியாக நடந்த மகாமகத்தின் போது,  கும்பகோணத்தில் இருந்த அனைத்து கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் வேறு நடந்தது. ஓரு ஆண்டாக, முன்னேற்பாடுகள் நடந்ததால் எவ்விதமான சிரமங்களும் இல்லாமல் பக்தர்கள் நீராடி சென்றனர்.

அதே போல, அத்திவரதர் தரிசனம் பற்றி உள்ளூர் பக்தர்களுக்கு நன்கு தெரிந்து இருக்கும். இத்தனைக்கும், காஞ்சி மடம் அதே ஊரில் தான் இருக்கிறது. அறநிலையத்துறை இது பற்றிய தகவல் கிடைத்ததும், ஓராண்டு முன்பாகவே ஆலோசனை கூட்டம் நடத்தி முன்னேற்பாடுகளை செய்ய தொடங்கி இருக்க வேண்டும். 

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு, வெகு சொற்பமானவர்கள் தான் வந்தார்கள் என்பதால், எங்களால் கணிக்க முடியவில்லை என்று கூறாமல், மகாமகத்திற்கு ஒரு நளைக்கு எவ்வளவு பேர் வந்தார்கள் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். 

அத்தி வரதர் புகழ் பரப்பியதில் வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகியவற்றின் உதவி மிக மிக அதிகம். அதன் காரணமாக பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்று முன்கூட்டியே அரசு உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், மாவட்ட நிர்வாகம் 3 மாதங்களுக்கு முன்பு தான் முன்னேற்பாடுகளை தொடங்கி உள்ளது. 14 ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் ஏதாவது முடிவு எடுத்து இருந்தால், அதனை நிறைவேற்றவே குறைந்தது ஒரு மாதம் பிடிக்கும். அப்படி என்றால், ஆலோசனைக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தானே அர்த்தம்.

இதனால் தான், பக்தர்கள் இவ்வளவு பெரிய நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். இவ்வளவு பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்று மாவட்ட நிர்வாகம் கூறுகிறது. உண்மையாக கூட இருக்கலாம். ஆனால் அசம்பாவிதம் நடந்த பிறகு, 4 உயிர்கள் போன பின்னர், மாவட்ட நிர்வாகம் உடனடியாக போர்கால நடவடிக்கை மேற்கொண்டு இருக்க வேண்டும். தேவை எனில், துணை ராணுவத்தை கூட வரவழைத்து இருக்கலாம். 

மேலும் நெரிசலை தவிரக்க தேவையான முன்னேற்பாடுகளை நடத்தி இருக்கலாம். தன்னார்வ தொண்டு நிறுவனங்களை வரவழைத்து, போக்குவரத்துகளை ஒழுங்கு படுத்தலாம். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை திருமண மண்டபங்களில் தங்க வைத்து செய்து கொடுத்து இருக்க வேண்டும்.

தமிழகத்தில் சத்ய சாய் சேவா சங்கம், ஆர்.எஸ்.எஸ்., ஓம் சக்தி சித்தர் பீடம் என பல அமைப்புகள் ஆன்மீகத்தை தாண்டியும் சேவை செய்து வருகின்றன. அதே போல், ராேட்டரி சங்கம், லயன்ஸ் கிளப், ஜேசிஸ் உள்ளிட்ட அமைப்பினரின் பங்களிப்பையும் மாவட்ட நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அத்திவரதர் தரினம் தொடங்கி இன்னும், 24 நாட்கள் கடக்கவில்லை.இன்னொரு பாதி நாட்கள் உள்ளன. அதனால் இப்போதே  கூட அரசு கண்விழித்து தேவையான நடவடிகை மேற்கொள்ள.வேண்டும். அது பக்தர்கள், வரதரை தரிசிக்க அரசு கொடுத்த வரமாக அமையும்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP