எதையும் தாங்கும் சமுதாயமா பெரும்பான்மையினர்?

சமுதாயம் தொடர்பான சர்ச்சைகளில் நீதிமன்றங்கள் நம் நாட்டில் எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பான்மையாக வசிக்கும் இந்துகளை அடிப்படையாக வைத்து தீர்ப்பு வழங்குவதை நம் சமுதாயக்காவலர்கள், குறிப்பாக ஆதீனங்கள் போன்ற பெரியவர்கள் கவனித்து எதிர்வினையாற்ற வேண்டும். அப்போதுதான் இந்து மதம் நீர்த்துப் போகாமலும், அரசின் சலுகைகள் அதற்கு மிகத் தகுதியானவர்களுக்கு மட்டும் கிடைக்கும். இதை சமூதாய முன்னவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
 | 

எதையும் தாங்கும் சமுதாயமா பெரும்பான்மையினர்?

நீதிமன்றங்கள் தன் தீர்ப்பில் இந்து மதம் தொடர்பான எந்த விஷயத்தை குறிப்பிட்டாலும் அது விமர்சனத்தை எதிர்கொள்ளாது. இதற்கு ஐயப்பன் தொடர்பான தீர்ப்பு மட்டும் விதி விலக்கு. சமீபத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த 3 ஜோடிகளின் திருமணத்தை, இந்து மத அடிப்படையிலானது என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்து சாஸ்திரங்களில் தேவ மணம், காந்தர்வமணம், ராட்சஷ மணம் ஆகிய பிரிவுகளை கூறுகிறது. பெரியவர்கள் கூடி தேவமந்திரங்கள் முழங்க நடக்கும் திருமணம் தேவமணம், யார் துணையும் இல்லாமல் மணமகன், மகள் சந்தித்து ரகசியமாக திருமணம் செய்து கொள்வது தற்போதுள்ள காதல் மணம் போன்றது தான் இது. 

பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்து கொள்வது ராட்சஷமணம். இதில் முதல் இரண்டு வகையும் தற்போதும் நடைமுறையில் இருக்கிறது. 3வது மணம் மைனர் பெண்ணாக இருந்தால் சட்டவிரோதம், அவர் மேஜராக இருந்தால், திருமணத்திற்கு அவரும் உடன் பட்டால் அதுவும் சட்டரீதியானது தான்.

இதில் நம் பகுத்தறிவுவாதிகள் தேவ மணத்தில் தான் மாற்றம் கொண்டுவந்தனர். ஐயருக்கு பதிலாக அரசியல்வாதிகள் வந்தனர், மந்திரங்கள் இடத்தில் அரசியல் பேச்சு வந்து அமர்ந்து கொண்டது.

இந்த வகை திருமணங்கள் சீர்திருத்த திருமணங்களாக உருப்பெற்றன. திராவிடர் கழகத்தினர், கம்யூனிஸ்ட்கள் தான் சீர்திருத்த திருமணங்களின் ஆர்வம் காட்டினர். தொடக்கத்தில் இந்த வகை திருமணங்கள் சட்டத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. அண்ணாதுரை ஆட்சிக்கு வந்த பின்னர் தான் இந்த வகை திருமணங்கள் அங்கீகாரம் பெற்றன.

எதையும் தாங்கும் சமுதாயமா பெரும்பான்மையினர்?

அதன் பின்னர் சீர்திருத்த திருமணங்களுக்கு வரவேற்பு அதிகரித்தது. தற்போது வைதீக திருமணங்களை விட சீர்திருத்த திருமணங்கள் செலவு அதிகம் பிடிப்பவையாக மாறிவிட்டன. கிறிஸ்தவ சபைகளில் தான் இப்போது உண்மையான சீர்திருத்த திருமணங்கள் நடக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆராதனை முடிவில் மணமகன், மகள் பாதிரியாரின் முன்னிலையில் பைபிள் மாற்றிக் கொண்டால் திருமணம் முடிந்தது. க்ஷ

அந்த ஆராதனைக்கு வருபவர்களுக்கு உணவு வழங்கினால் போதும். இந்த திருமணம் பதிவு செய்யப்படும். இது தான் தற்போது நடக்கும் சீர்திருத்த திருமணம்.

சீர்திருத்த திருமணம் குறித்த சர்ச்சை இத்தனை ஆண்டுகள் கழித்து தொடங்குவதற்கு அரசு தரும் உதவித் தொகை தான் தான் காரணம். தமிழக அரசு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு மண உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்துகிறது. அதே போல மத்திய அரசு கலப்பு மணம் செய்து கொள்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்துள்ளது. 

தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினத்தவராக கட்டாயம் மணமகன் அல்லது மணமகள் இருக்க வேண்டும். அதே போல தம்பதிகளில் ஒருவர் கட்டாயம் உயர் ஜாதியாகவும் மற்றவர்கள் இதர ஜாதியாகவும் இருந்தால் இந்த உதவித் தொகை வழங்கப்படும். உதவித் தொகை ரூ. 20 ஆயிரம். இதைத் தவிர்த்து பிற்பட்ட வகுப்பினருக்குள் ஜாதியை மறுத்து திருமணம் செய்து கொண்டால் அது கலப்பு மணம் ஆகாது. 

ஐயர், ஐயங்கார், கள்ளர், கோனார், பள்ளர் பறையர் என்று கூட திருமணம் நடந்தால் கூட, அது ஜாதி மறுப்பு மண் தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் அது கலப்பு மணம் ஆகாது. இது போன்ற சிக்கல் காரணமாகத்தான் சிவக்குமார் உட்பட 3 தம்பதிகள் திருமணத்தை அரசு ஏற்க மறுக்கவே, அவர்கள் ஐகோர்ட் மதுரைக்கிளையில் இவர்களின் சீர் திருத்த திருமணம் கூட இந்து திருமணம் தான் என்று தீர்ப்பு பெற்று இருக்கிறார்கள். 

இதை நீதிமன்றம் கிறிஸ்தவ சபைகளில் நடக்கும் படியனான திருமணம் என்று குறிப்பிட்டு இருந்தால், இத்தனை நேரம் ஆதரவு கருத்தோ, எதிர்ப்பு கருத்தோ பரவி ஊரே அமலி துமளி ஆகி இருக்கும். ஆனால் இந்து திருமண சட்டம் என்று குறிப்பிட்டதால் எவ்விதமான விவாதமும் எழவில்லை. 

சமுதாயம் தொடர்பான சர்ச்சைகளில்  நீதிமன்றங்கள் நம் நாட்டில் எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பான்மையாக வசிக்கும் இந்துகளை அடிப்படையாக வைத்து தீர்ப்பு வழங்குவதை நம் சமுதாயக்காவலர்கள், குறிப்பாக ஆதீனங்கள் போன்ற பெரியவர்கள் கவனித்து எதிர்வினையாற்ற வேண்டும். அப்போதுதான் இந்து மதம் நீர்த்துப் போகாமலும், அரசின் சலுகைகள் அதற்கு மிகத் தகுதியானவர்களுக்கு மட்டும் கிடைக்கும். இதை சமூதாய முன்னவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP