முடிவுக்கு வருகிறதா போலி கவுரவம்? தமிழகத்தில் நல்ல அறிகுறி ஆரம்பம்!

நல்லவர்களை, அறிஞர்களை மதிக்காத சமுகத்தில், மீண்டும் பிறப்பதில்லை என்பார்கள். அது போல, தற்போது தலைவர்கள் மாறிவரும் எளிமையை போற்றி வரவேற்காவிட்டால், மீண்டும் இன்னொரு, 50 ஆண்டுகள் தமிழகம் போலி கவுவரத்தில் சிக்கி தவிக்க வேண்டி வரலாம்.
 | 

முடிவுக்கு வருகிறதா போலி கவுரவம்? தமிழகத்தில் நல்ல அறிகுறி ஆரம்பம்!


தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது ராஜாஜி, பக்தவத்சலம், காமராஜர், இயல்பாகத்தான் இருந்தார்கள். ஜீவா போன்ற எதிர்கட்சியினரும், அப்படியே. 

அந்த காலகட்டத்தில் திராவிட கலாச்சாரம் தலையெடுத்தது. வீதி கூட்டும் அளவிற்கு துண்டு அணிந்து கொள்வது அரசியல் வாதியின் அடையாளமாக மாறியது. மக்களை காக்க வைப்பதே தங்களின் கவுரவம் என்று திராவிட கட்சித்தலைவர்கள் எண்ணத் தொடங்கினார்கள். இதன் காரணமாக, போலியான வாழ்க்கை, தமிழர்களின் பண்பாடாக மாறிவிட்டது. 

எளிமை, நேர்மை என்றெல்லாம் பேசுபவர்கள், அவற்றை தங்களின் வாழ்க்கையில் கடைபிடிக்க முன் வரவில்லை. இதன் காரணமாக புதுகை ரங்கசாமி மற்றும் வட இந்திய தலைவர்களின் எளிமையை பார்த்து ஏங்கும் நிலைக்கு தமிழகம் மாறிவிட்டது.

இந்த சூழ்நிலையில், திராவிட அரசியலின் உச்சமாக வாழ்ந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மறைந்துவிட்டனர். 
இப்போதுள்ள தலைவர்கள், தங்களை நிலை நிறுத்திக் கொள்ள போராட வேண்டி இருக்கிறது. குறிப்பாக ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள நடத்தும் போராட்டங்கள், போலி கவுரவங்களை முடிவுக்கு கொண்டு வரத் தொடங்கி உள்ளன.
 முடிவுக்கு வருகிறதா போலி கவுரவம்? தமிழகத்தில் நல்ல அறிகுறி ஆரம்பம்!

ஆட்சி அதிகாரத்தில் இல்லாத ஸ்டாலின், மக்கள் தன்னை ஏற்றுக் கொள்வதற்காக நமக்கு நாமே, கிராமசபை கூட்டம் என்றெல்லாம் இறங்கி வந்தார். டீக்கடையில் டீ குடிப்பது, வீதிகளில் வலம் வருவது என்று தன்னை எளிமையின் அடையாளமாக அவர் காட்டிக் கொண்டார். 

இன்னொருபுறம், உண்மையில் பின்புலம் எதுவும் இல்லாத எடப்படாடி பழனிசாமி, இயல்பாக இருப்பது எளிமையாக தெரிகிறது. தொடக்க காலத்தில், அவர் காரில் பவனி வந்த போது, ஜெயலலிதாவிற்கு இணையாக இருக்கிறார். ஜெயலலிதாவாகவே தன்னை நினைத்துக் கொண்டார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. 
அவ்வாறு விமர்சனம் செய்தவர்கள், தற்போது அவரின் எளிமையான நடவடிக்கைகள் பற்றி எதுவுமே கூறாதது வியப்பை அளிக்கிறது. 

எடப்பாடியின் எளிமைக்கு பின்னால் தேர்தல் இருக்கிறது என்றாலும் கூட, கடந்த காலத்திலும் தேர்தல் இருந்தது... தலைவர்கள் இருந்தார்கள்.... எளிமை மட்டும் மிஸ்சிங் என்பது வரலாறு. 

முடிவுக்கு வருகிறதா போலி கவுரவம்? தமிழகத்தில் நல்ல அறிகுறி ஆரம்பம்!

ஓட்டுசாவடிக்கு நடந்து சென்று வரிசையில் நின்று ஓட்டு போடுகிறார், சுற்றிலும் பாதுகாப்பு வளையம் இருந்தால் கூட அதையும் தாண்டி இப்படி அவர் செய்வதற்கு மனம் வேண்டும். இதையெல்லாம் பார்த்து ஓட்டு விழும் என்று நினைத்தால் அது பைத்திக்காரத்தனம். 

பிரச்சாரத்தின் போது, தனக்கு ஏழை மக்கள் வரவேற்புக்காக கொடுக்கும் பொருளுக்கு, பணம் கொடுக்கும் பக்குவம் வரவேற்கத்தக்கது. இந்த ரூபாய் நிச்சயம் அந்த பெண் பயன்படுத்தப்போவது இல்லை; அவர் நினைவுப்பரிசாக அதை மாற்றிவிடுவார் என்பது நிச்சயம். 

முடிவுக்கு வருகிறதா போலி கவுரவம்? தமிழகத்தில் நல்ல அறிகுறி ஆரம்பம்!

இப்போ என் குரு பயன்படுத்திய செருப்பு, காசு, துண்டு, இது அவரோட முடி, துணி என்றெல்லாம்  கூறுவதைப்போல இந்த பணமும், மாநிலத்தின் முதல்வர் கையால் வாங்கிய அன்பு பரிசு என்ற வகையில்,  நினைவுப் பரிசாகத்தான் மாறிவிடும். ஆனால் பழனிசாமி இதை செய்திருக்கிறார் என்றால் வரவேற்க வேண்டும்.
 
நல்லவர்களை, அறிஞர்களை மதிக்காத சமுகத்தில், மீண்டும் பிறப்பதில்லை என்பார்கள். அது போல, தற்போது தலைவர்கள் மாறிவரும் எளிமையை போற்றி வரவேற்காவிட்டால், மீண்டும் இன்னொரு, 50 ஆண்டுகள் தமிழகம் போலி கவுவரத்தில் சிக்கி தவிக்க வேண்டி வரலாம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP