தமிழகம் ஆன்மீக பூமியா?

அத்தி வரதரைப் பார்க்க கூட்டம் அள்ளுது, பிரதோஷம் அன்று சிவனுக்கே முச்சு முட்டும் அளவுக்கு கூட்டம் கோவிலை அடைச்சுக் கிடக்கு. சின்னச் சின்ன நல்ல நாட்களில் கூட, அதீத விரதங்களும் அனுஷ்டாணங்களும் செய்து மக்கள் தங்கள் பக்தியில் மிதமிஞ்சி போய்விட்டார்களோ என்றெண்ணும் அளவிற்கு மிரட்சியாக இருக்கிறது.
 | 

தமிழகம் ஆன்மீக பூமியா?

அத்தி வரதரைப் பார்க்க கூட்டம் அள்ளுது, பிரதோஷம் அன்று சிவனுக்கே முச்சு முட்டும் அளவுக்கு கூட்டம் கோவிலை அடைச்சுக் கிடக்கு. சின்னச் சின்ன நல்ல நாட்களில் கூட, அதீத விரதங்களும் அனுஷ்டாணங்களும் செய்து மக்கள் தங்கள் பக்தியில் மிதமிஞ்சி போய்விட்டார்களோ என்றெண்ணும் அளவிற்கு மிரட்சியாக இருக்கிறது. 

ஆனால், தேர்தலில் ஓட்டுப் போடும் போது மட்டும், தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் கட்சிக்கு கவனமாக ஓட்டுப் போடுகிறார்கள். ஒருவர், ஈ.வெ.ரா., பிறந்த மண் என்று மார்தட்டுகிறார். இன்னொருவர் இது ஆன்மீக பூமி என்று மார்தட்டுகிறார். எது நிஜம்?

கொஞ்சம் சுத்தி வளைச்சு இந்த விசயத்தைப் பார்ப்போம்…

நாம் சாப்பிடும் சாப்பாடு யாருக்காக? நமக்காகவா?
நம் உடலில் உள்ள பல்லாயிரம் கோடி ஜீவராசிகளுக்காக உணவை அனுப்புகிறோம். அதாவது, அந்த ஜீவராசிகளுக்கெல்லாம் படியளக்கிறோம்!

தமிழகம் ஆன்மீக பூமியா?

புரிதலுக்கான ஒப்பீடாக, நம் உடல் ஒரு பிரபஞ்சம் என்று எடுத்துக் கொண்டோமென்றால், கல்லீரல், இதயம், கிட்னி, எலும்பு, மூளை போன்ற ஒவ்வொரு உறுப்புகளும், ஒரு பால் வீதிக்குச் சமம். ஒவ்வொரு ”செல்”லும் ஒரு சூரிய குடும்பம், அதனுள் இருக்கும் ந்யூக்ளியஸ் அதன் சூரியன். 

சைட்டோப்ளாஸம், மைட்டோகாண்ட்ரியா, ரிபோசோம் போன்றவை எல்லாம் ஒவ்வொரு கோள்கள் என்று எடுத்துக் கொள்வோம். அப்படியான ஒவ்வொரு கோள்களுக்குள்ளும், பலகோடி ஜீவராசிகள் வாழ்கின்றன. அவற்றின் ஆயுட்காலம், நம்ம கணக்கில் சில நொடிகளோ, மணிகளாகவோ இருக்கும். 

ஏனெனில் ஒரு செல்லின் ஆயுட்காலம், 120 நாட்கள், அப்படி அறுநூறு லட்சம் கோடி செல்களின் கடவுளாகிய நம் வாழ் நாள், 43ஆயிரம் நாட்கள் (பூரண ஆயுசு கணக்கு) இத்தனை லட்சம் கோடி ஜீவராசிகளையும் காப்பாற்றுவதற்காகத் தான், நாம் ஒவ்வொரு வேளையும் உண்கிறோமா?

தமிழகம் ஆன்மீக பூமியா?

கொஞ்சம் ரிவர்ஸில் பார்ப்போம். எப்படி ஒரு செல் தன் உணவை உட்கொள்வதால், அதன் கடவுளாகிய மனிதன் நம் உடல்பலம் காக்கப்படுகிறதோ, அப்படியே, மனிதன் சாப்பிடும் உணவுகள் மனிதனின் கடவுளைப் பலப்படுத்துவதற்காகப் பயன்படுகிறது. நமக்குள் அறுநூறு லட்சம் கோடி செல்கள் இருப்பது போல, யாரோவொருவருடைய அறுநூறு லட்சம் கோடி செல்களுல் ஒன்று தானே நம் சூரிய குடும்பம்?
அதாவது,
ஒரு மனிதனின் ஆயுட்காலம் – 120 வருடங்கள். (நாம முழுமையா வாழ்வதில்லை என்பது நம் குற்றம்)
அப்படியானால், நாம் செல்லாக இருக்கும் அந்த மனிதனின் ( நம்மளுடைய பிரம்மா) ஆயுட்காலம் எவ்வளவாக இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் தெளிவாகச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
இத்தனை பெரிய அண்ட சராசரத்தில், நாம் பிராத்தனை பண்ணினால் மட்டும் நடந்திடுமா என்ற சந்தேகம் வருகிறது இல்லையா? தண்ணீர் தாகம் எப்படி எடுக்கிறது என்று யோசிக்கவும். நமக்குள் இருக்கும் பல செல்களின் நீர்த் தேவைக்காக இரைஞ்சிக் கேட்பதால், அவர்களின் கடவுளாகிய நாம் தண்ணீர் குடிக்கிறோம். 

அடிபட்ட இடத்தில் வலியால் துடிக்கும் நம் படைப்புகளுக்கு மருந்து போட்டு குணப்படுத்துகிறோம். அப்படியே தான் நம் கூட்டுப் பிராத்தனைகள், யாகங்கள் மூலம் பிராத்திக்கும் போது, விரைவில் நிவாரணம் அளிக்கிறார் நம் கடவுள். கூட்டுப் பிராத்தனை சரி தனிப்பட்டத் தேவைக்கு…? அதற்காகத்தான் ஓங்காரம்/ காயத்திரி மந்திரம் போன்ற சங்கேத (சங்கீத) ஒலிகளைக் கண்டுணர்ந்து புகட்டியிருக்கிறார்கள்.

தமிழகம் ஆன்மீக பூமியா?

நிஜமான தேவைக்கு, நிஜமான மனவொருங்கிணைப்போடு வேண்டினால் நிச்சியம் நடத்தி வைக்கப்படும்.

மனிதர்களின் காலக் கோட்டில்… நான்கு யுகங்கள் இருக்கின்றன. (தமிழில் எளிமையாக எழுத முயல்கிறேன். புரியாவிட்டால், க்ரிஸ்டோபர் நோலன் போன்றோர்களின் ஆங்கிலப் படங்கள் பார்த்து இன்னும் எளிமையாகப் புரிந்து கொள்வீராக!)

கிருத யுகம் -17,28,000 வருடங்கள் 
திரேதா யுகம் - 12,96,000 வருடங்கள் 
துவாரயுகம் - 8,64,000 வருடங்கள் 
கலியுகம் - 4,32,000 வருடங்கள்
இதையெல்லாம் மொத்தமா கூட்டினால், 43,20,000 (நாற்பத்தி மூணு லட்சத்தி இருபதாயிரம்) வருடங்கள் வருகிறது.

இந்த 43,20,000 வருடங்களைத் தான் ஒரு சதுர்யுகம் என்கிறார்கள். இப்படியான ஆயிரம் சதுர்வருடங்கள் கழிந்தால், நம் பிரம்மாவுக்கு ஒரு பகல் பொழுது. அடுத்த ஆயிரம் சதுர்வருடங்கள் அவருக்கு ராப்பொழுது. இப்ப நம்முடைய கடவுளுக்கும் நமக்குமான அளவு வித்தியாசத்தைக் கொஞ்சம் புரிந்திருக்கலாம்.

தமிழகம் ஆன்மீக பூமியா?
இப்படி 86லட்சத்து 40 ஆயிரம் வருடங்களை ஒரு நாளாகக் கொண்ட பிரம்மா, நூறு ஆண்டுகள் வாழ்வாராம். அதன் பிறகு அடுத்த பிரம்மா இப்படி ஒரு கோடி பிரம்மாக்கள் வாழ்ந்து முடித்தால், அது விஷ்ணு/சிவனின் ஒரு பகல் பொழுது அப்படியான சிவன்/விஷ்ணுக்கள் நூறு கோடி….. ஸ்ஸ்ஸபா…. இப்பொழுதைக்கு நிறுத்திக்குவோம். 

இப்படியான ஒரு பரம்பொருளின் அளவை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? அப்ப நமக்குப் புரியும் வண்ணம், பிடித்த மாதிரி ஒரு உருவத்தை உருவாக்கி, பரம்பொருளின் தத்துவத்தை, அந்த உருவங்களுக்கு நாமமாக வைத்து வழிபட்டு, முக்தியடையச் சொல்லிக் கொடுத்த அடையாளங்களையும், வழிபாட்டு முறைகளையும் வைத்துக் கொண்டு, நாம் வெறும் லௌகீக வேண்டுதலுக்காகவும்,  தான் செய்த தவறுகள் தன்னை உறுத்தாமல் இருக்க பரிகாரங்கள், பூஜைகள் என்று செய்து கொண்டு, கடவுளிடமே கமிஷன் பேசிக் கொண்டிருக்கிறோம். 

தமிழகம் ஆன்மீக பூமியா?

ஆன்மீக வீடு பேறு அடைய , பக்தி, ஞான,யோக மார்க்கங்கள் உண்டு. இதில், பக்தி மார்க்கத்தைப் பிடித்துக் கொண்டு அதையும் சீரழித்துக் கொண்டிருக்கும் மக்களை வைத்துக் கொண்டு, எப்படி ஆன்மீக பூமி என்று சொல்வது?

பிரபஞ்சத்தைப் பற்றியும், பிறப்பு, இறப்பு பற்றியும் இத்தனைத் தெளிவாக, ஆழமாகச் சொல்லி வைத்து விட்டுச் சென்ற சமூகம், வேறு எங்கேயும் இல்லை. நல்ல சந்ததிக்கு அழகு, தன் மூதாதையர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து ஆராய்ந்து மேம்பாடு அடைவது தான். 

நாம நம் சித்தாந்தங்களின் தாத்பர்யம் கூடத் தெரியாமல் தேய்ந்து கொண்டிருக்கிறோம். வெறும் கூட்டம் மட்டும் தான் ஒரு விசயத்தைத் தீர்மானிக்கிறது என்றால், நம் ஊரில் கொசுக்களைத் தான் தேசியப் பறவையாக வைத்திருக்கணும்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP