தேவையில்லாத பொதிகளை சுமக்கிறாரா ஸ்டாலின்?

அரசியல் கட்சிகளுக்கு ஆட்சிக்கு வருவதற்கு முன்னாள், ஆட்சியில் இருக்கும் போது என 2 நிலைப்பாடுகள் உண்டு. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் விலைவாசி குறையும் என்ற பிரச்சாரம், வாஜ்பாய் பிரதமராக பதவி வகித்தபோது கொடி கட்டி பறந்தது.
 | 

தேவையில்லாத பொதிகளை சுமக்கிறாரா ஸ்டாலின்?

அரசியல் கட்சிகளுக்கு ஆட்சிக்கு வருவதற்கு முன்னாள், ஆட்சியில் இருக்கும் போது என 2 நிலைப்பாடுகள் உண்டு. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் விலைவாசி குறையும் என்ற பிரச்சாரம், வாஜ்பாய் பிரதமராக பதவி வகித்தபோது கொடி கட்டி பறந்தது. மத்தியில் ஆட்சியை பிடித்த பின்னர் 100 நாட்கள் கழித்து இன்னும் ஏன் விலைவாசி குறையவில்லை என்று கேட்ட போது அப்போது பிரதமர் நாற்காலியில் இருந்த மன்மோகன் சிங் நாங்கள் என்ன மந்திரக்கோலா வைத்திருக்கிறோம் என்றார்.

காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் வாக்குறுதியை காற்றில் பறக்கவிடும். கம்யூனிஸ்ட், பாமக, மதிமுக போன்ற கட்சிகள் கூட்டணிக்கே வாக்குறுதிகளை காற்றில்பறக்க விட்டுவிடும்.

இவை எல்லாவற்றையும் துாக்கி சாப்பிட்டுவிடும் திமுக. மற்ற கட்சிகள் வாக்குறுதிகள் காற்றில் பறக்கும் போது கண்டு கொள்ளாமல் மவுனமாக, கண்டு கொள்ளாதது போல இருந்து விடுவார்கள். திமுக மட்டும் தான் தன் வாக்குறுதி, கொள்கை காற்றில் பறக்கும் போது அதற்கு கூட ஒரு விளக்கம் கூறி சப்பை கட்டுகட்டுவார்கள். அதை அந்தக் கட்சியின் தொண்டவர்கள், தலைவர பார்த்தியா எப்படி சமாளித்தார், தலைவர் தலைவர்தான் என் தங்கள் முதுகில் தாங்களே தட்டிக்கொடுத்துக்கொண்டு, காலுக்கடியில் வேட்டி கழண்டு செல்வதுகூட தெரியாமல் சிலாகித்துக்கொண்டு இருப்பார்கள்.

இது இன்று நேற்றல்ல, திராவிட நாடு தொடங்கி, ரூபாய்க்கு 3 படி அரிசி திட்டம் வழிவந்து இன்றளவும் தொடரும் வழக்கம். இந்த சூழ்நிலையில் தன் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்கள் கொத்து கொத்தாக செத்தால் கூட, திமுக தலைமை கவலைப்படாது. இதன் உச்சகட்ட உதாரணம் தான் முள்ளிவாய்க்கால் பிரச்னை. உண்மையி்ல இலங்கை தமிழர்கள் மீது திமுகவிற்கு அக்கறை இருந்தால் அன்று மத்திய ஆட்சியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். அல்லது காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர் சோனியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் யாராவது ஒரு அமைச்சரையாவது பலிகடாவாக்கி, பதவி விலகும்படி சொல்லி இருக்க வேண்டும். அப்படி செய்யாமல் ஒரு டுபாக்கூர் உண்ணாவிரத்துடன் முடித்துக் கொண்டது இன்றவுளவும் கருணாநிதி மீது விழுந்த கறுப்பு மையாகத்தான் உள்ளது.

திமுகவின் இந்த இரட்டை நிலைப்பாட்டிற்கு அன்று கட்சி எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய பிரம்மாண்டங்களை எதிர்த்து போராட வேண்டிய நிலை இருந்தது. தற்போது அவர்கள் இல்லை. தமிழகம் முழுவதும் எடப்பாடிக்கு ஓட்டுப் போடும் வகையில் ஆதரவு பெருகி இருக்கிறதா என்பதும், பன்னீர் பெற்ற புகழ் ஓட்டாக மாறுமா என்பதும் சந்தேகமாகவே உள்ளது.

newstm.in

இதைத்த தவிர்த்து .பெரும்பாலும் திமுகவுடன் கூட்டணி அமைக்கத்தான் மற்ற கட்சிகள் விரும்புகின்றன. லோக்சபா தேர்தலை பொறுத்தளவில் திமுக தற்போது காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணியில் உள்ளது. அவர்கள் முறைத்தால் உள்ளே நுழைய பாஜக வாசல் கதவில் காத்துள்ளது . இந்த சூழ்நிலையில் கூட திமுக இரட்டை வேடம் போட வேண்டுமா என்பது தான் கேள்வி.

காவிரி விவகாரத்தை சரியான திசையில் அணுகி தமிழகத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்பட திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளின் ஆட்சியின்போது முற்றிலும் முயற்சிக்கவில்லை .அவ்வப்போது பல லட்சம் கன அடி தண்ணீர் வீணாக கடலில்சென்று கலப்பதே நாம் எந்த அளவிற்கு இந்த பிரச்னையில் தோல்வி அடைந்து இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. நீ கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும், நாங்கள் வீணடித்துக்கொண்டே இருப்போம் என்ற நிலைப்பாட்டை  பைத்தியக்காரன் கூட ஏற்க மாட்டான். அப்படி இருக்கும் போது கர்நாடகா அனுமதிக்கும் என்று எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம். இதனால் தான் அவர்கள் வீம்பாக மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கிறார்கள்.

அதாவது கர்நாடகாவில் ஆளும் ஜனதாதள் அணை கட்டுகிறது. அந்தக் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சி இடம் வகிக்கிறது. உண்மையில் திமுக அந்த கட்சிகள் இரண்டையும் எதிர்த்து போராட்டம் நடத்தி இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் லோக்சபா தேர்தலுக்கு முந்தைய மாதம் வரையிலாவது கூட்டணியில் சேர்க்காமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஸ்டாலின் கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு சோனியா, ராகுலை அழைக்கிறார். காங்கிரஸ் கட்சிக்காரர்களையும் மீறி, நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் ராகுல் என்று அறிவித்து, அழைப்பு விடுத்து கூட்டணிக்கு அச்சாரம் போடுகிறார். அப்போது மேகதாது விவகாரம் கல்யாண கூச்சலில் பாலுக்கு அழும் குழந்தையின் குரல் போல அமுங்கி போனது. இதை பார்த்த பிறகும் திமுகவிற்கு தமிழ்நாட்டினர் ஓட்டு போடுவார்கள் என்று அவர் நினைப்பது தான் ஆச்சரியமாக உள்ளது.

காங்கிரஸ் கட்சியாவது கணிசமான ஓட்டுக்களை கையில் வைத்துள்ளது. ஆனால் ஜனதாதள் கட்சி அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகள் இருக்கிறார்களா என்பதே  சந்தேகம். ஆனால் அந்த கட்சியுடன் கூட திமுக கூட்டணி பேசுகிறது. அவர்களால் இவர்களுக்கும், இவர்களால் அவர்களுக்கும் எவ்விதமான பயனும் இல்லாவிட்டாலும் கூட்டணி பேச்சு கொடி கட்டி பறக்கிறது. இருவருமே உமியை மட்டும் கொண்டு வந்து, அதை ஊதி ஊதி அரிசி எடுக்க நினைக்கிறவர்கள் இவர்களாக மட்டும் தான் இருப்பார்கள்.

இந்த விகாரம் மட்டும் அல்லாமல் எல்லா விவகாரத்திற்கும் இவர்கள் திட்டுவது பாஜகவை தான். ஏதோ தமிழகத்தில் 200 சீட்டு பிடிக்கும் நிலையில் பாஜக இருப்பது போலவும், அவர்கள் தான் தமிழகத்திற்கு துாரோகம் செய்வதாகவும் ஸ்டாலின் கத்துவது அதுவும் சம்பந்தப்பட்டவர்களை அருகே வைத்துக் கொண்டு கத்துவது நல்ல வேடிக்கை. இதை தமிழர்கள் சிரித்துக் கொண்டே கடந்து செல்லும் வரையில் திமுகவிற்கு எந்த சேதாரமும் வராது. 

முல்லை பெரியாறு பிரச்னையிலும் இது தான் கதி. இரண்டு கம்யூனிட்டுகளையும் கூட்டணியில் வைத்துக் கொண்டே முல்லை பெரியாறு விவகாரத்தை ஸ்டாலின் பேசுவது , கேரளாவில் யார் ஆட்சி செய்கிறார்கள் என்று கூட தமிழர்களுக்குத் தெரியாது என்று ஸ்டாலின் எண்ணுவது தான் முரண்நகை.

திமுகவுடன் நம்ம கட்சி கூட்டணியில இருக்கிறது, இந்த பிரச்னையை கையாண்டால் பக்கத்து மாநிலத்தில் உள்ள அந்த கட்சிக்கு பிரச்னை வருமே என்று சம்பந்தப்பட்ட மாநிலங்கள் எப்போதும் கருதுவது கிடையாது. உங்கள் கூட்டணியில் இருக்கும் போதே தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினால்தான், எங்களுக்கு வேலை சுலபமாக முடியும் என்று கருதி அவர்கள் உடனே அவற்றை நிறைவேற்றி வருகிறார்கள்.

தற்போது மத்திய அரசு மேகதாது விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. திமுக போய் அங்கு சட்டசபைக்கு இணையாக வெளிநடப்பாவது செய்ய வேண்டும். ஆனால் அங்கு போகவே மாட்டார்கள். அதே நேரத்தில் கர்நாடகா மாநிலத்தில் நேற்று கட்சி தொடங்கினவன் கூட போய் சேருவான். இந்த சூழ்நிலையெல்லாம் பார்த்தால் ஸ்கிரீன் கிளிஞ்சு ஒங்க படம் ரொம்ப நாளைக்கு ஓடாம போய்விடும்.

வரும் சட்டசபைத் தேர்தலிலில் உங்களைத் தோற்கடிக்க தமிழகத்தில் ஆளே இல்லை. அதற்காக தேவையில்லாத பொதிகளை சுமந்து அந்த வேலையை நீங்களே செய்திடாதீங்க ஸ்டாலின். அப்பா இருக்கும் வரையில் தான் முதல்வர் நாற்காலி கிடைக்கவே இல்லை, இப்போது நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP