நதி நீர் இணைப்பு திட்டம் அவசியமா, ஆபத்தா? பகுதி 3

செங்குன்றம் ஏரி, புழல் ஏரி ,செம்பரம்பாக்கம் ஏரி, செங்கல்பட்டு ஏரி, மதுராந்தகம் ஏரி, பூண்டி ஏரி, சோழவரம் ஏரி, பழவேற்காடு ஏரி, வீராணம் ஏரி, வெலிங்டன் ஏரி, பெருமாள் ஏரி, ராமநாதபுரம் பெரிய கண்மாய் போன்ற ஒரு நூறு ஏரிகளின் பட்டியலைத் தயார் செய்யுங்கள். அவற்றில் 90% ஏரிகள் எங்கே அமைந்திருக்கின்றன என்று கவனித்தால் ஆச்சர்யப்படுவீர்கள்.
 | 

நதி நீர் இணைப்பு திட்டம் அவசியமா, ஆபத்தா? பகுதி 3

டக்குனு பதில் சொல்லுங்க பார்ப்போம்…
நம் இந்திய மன்னர்கள் கட்டிய அணைகள் எத்தனை? அவை யாவை?

ரொம்ப யோசிக்காதீங்க… இன்றைக்கு நாம அணைகள்னு சொல்லிட்டிருக்கும் எதையும், 200 வருடங்களுக்கு முன்னாடி வரை நம் நாட்டில் யாரும் கட்டவில்லை. நம் மன்னர்களுக்கு அவ்வளவு விபரம் பத்தாது. நம் முன்னோர்களுக்கு அறிவியலே தெரியாது. நம் முன்னோர்களுக்கு, நீர் மேலாண்மை பற்றிய அடிப்படை அறிவே கிடையாது. 

எல்லாம் ஆங்கிலேயன் தான் கட்டினான். வெள்ளைக்காரன் தயவில் தான் நமக்கு இவ்வ்வ்ளோ பெரிய வரம் கிடைச்சது. இந்தியர்களுக்கு அணை கட்டும் அறிவும் இல்லை, அவசியமும் தெரியவில்லை என்று சிலர் பிதற்றலாம். இதோ எம் நாட்டு அறிஞர்களின் அறிவுக்கு சில உதாரணங்கள் கீழே…

முதலாவதாக,
கிமு 300ல் கௌடில்யர் என்ற சாணக்கியர்,  நாட்டின் நலன் கருதி நீர்த்தேக்கத்தினை அரசே அமைக்க வேண்டும் என்று சொல்கிறார். எப்படி?
இரண்டு வகையான நீர்த்தேக்கங்கள் அமைக்கணும்.

1. சஹொடக சேது (Sahodakasetu) : இது கிணறு, குளம் வகையான நீர்த்தேக்கம். இது மழை மற்றும் சுனை, நீரூற்று ஆகியவற்றைக் கொண்டு சேமிக்கணும்.

2. அஹர்யோடக சேது (Aharyodakasetu) : இது இரு மலைகளுக்கிடையே தடுப்பினை அமைத்து நீரினை பிரித்து விட பயன்படுத்த வேண்டும்.

இதை அரசு, மக்களிடையே ஒரு கூட்டுறவினை ஏற்படுத்தி, இவற்றைச் செய்ய வைக்கணும். இது தவிர, தனி நபர்களிடமும் செய்து தரச் சொல்லி ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் என்கிறார். (அதாவது 2,300 வருடங்களுக்கு முன் அவுட் சோர்ஸிங் செய்யச் சொல்லியிருக்கிறார்). 

அடுத்ததாக, உலகின் நான்காவது பழமையான அணைக்கட்டு கட்டியவர், நம் மன்னர் தான். நம்ம கல்லணையைத் தான் சொல்கிறேன். ஆனால், ஆங்கிலேயன் கட்டி வைத்த அணைகளுக்கும், இதற்கும் அறிவில் ஏணி வைத்தாலும் எட்டாத அணை. இதைத் தனியே பார்ப்போம்.

அதன் பின், 1600 வருடங்கள் கழித்து இந்தியாவில் மராத்தியர்களால், தமாப்பூர் (மஹாராஷ்ட்ராவில்) எனும் இடத்தில் ஓர் அணைகட்டப்பட்டது. அது இன்றைய அணைகளுக்கு ஒப்ப இருக்கிறது.

அதற்கு முன்போ, பின்போ வந்த எந்த அரசர்களும் இந்த வகை அணைகளைக் கட்டவில்லை. சேர, சோழ, பாண்டிய, பல்லவ, நாயக்க மன்னர்களின் நீர் தேக்க முறைகளையும் பார்த்தால், உலகிற்க்கு நீர்மேலாண்மையைக் கற்றுக் கொடுக்க, நம்மை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை எனலாம்.

இவ்வளவு அறிவுடைய மன்னர்கள் ஏன் அணைகள் கட்டவில்லை? பணம் இல்லையா?  ஆயிரக்கணக்கான கோவில்கள் கட்டியவர்களுக்கு சில அணைகள் கட்ட பொருளோ ஆட்களோ ஒரு பொருட்டாகவே இருந்திருக்காது. அப்புறம் ஏன் அணைகள் கட்டவில்லை?

நதி நீர் இணைப்பு திட்டம் அவசியமா, ஆபத்தா? பகுதி 3

ஏன்னென்றால், கட்டக் கூடாது. கட்டுவது மக்களுக்கும், மண்ணிற்கும் அழிவை உண்டாக்கும் என்று நுணுக்கமாகத் தெரிந்து வைத்திருக்கின்றனர். 

வெள்ளைக்காரன் மட்டும் வந்து இந்த அணைகள் கட்டித் தரவில்லை என்றால்…. 
இதை விட சிறப்பாக மழை பெய்திருக்கும்.
இதை விட சிறப்பாக விவசாயம் பெருகியிருக்கும்.
இதை விட அருமையாக மண் வளம் கூடியிருக்கும்.
இதை விட அதிகமாக நிலத்தடி நீர் நிறைந்திருக்கும்.

ஆம்! உண்மை தான். நம் மன்னர்கள் நீரினைத் தேக்கி வைப்பதற்காக பல குளங்களும், ஊரணிகளும், ஏரிகளையும் அமைத்திருந்தனர். இதில் ஏரிகளைத் தவிர மற்ற எல்லாம் பெரும்பாலும் மழைநீரினைச் சேகரிப்பதற்கே. ஏரிகள் மட்டும் நதிநீரினைச் சேகரிக்க.

அப்படி எத்தனை ஏரிகளை அமைத்தனர்?

தமிழகத்தில் மட்டும் 39,000 (முப்பத்தி ஒன்பதாயிரம்) ஏரிகளுக்கு மேல் உள்ளன. இதில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட ஏரிகள் நூற்றுக்கும் மேலே..

தமிழகத்தின் பெரிய ஏரிகளின் பட்டியல் ஒன்றை எடுத்துப் பாருங்கள்..

செங்குன்றம் ஏரி, புழல் ஏரி ,செம்பரம்பாக்கம் ஏரி, செங்கல்பட்டு ஏரி, மதுராந்தகம் ஏரி, பூண்டி ஏரி, சோழவரம் ஏரி, பழவேற்காடு ஏரி, வீராணம் ஏரி, வெலிங்டன் ஏரி, பெருமாள் ஏரி, ராமநாதபுரம் பெரிய கண்மாய் போன்ற ஒரு நூறு ஏரிகளின் பட்டியலைத் தயார் செய்யுங்கள். அவற்றில் 90% ஏரிகள் எங்கே அமைந்திருக்கின்றன என்று கவனித்தால் ஆச்சர்யப்படுவீர்கள். 

பெரும்பாலான ஏரிகள், கடலில் இருந்து, இரண்டு முதல் ஐம்பது கிமீக்குள்ளேயே இருக்கும். அதுவும் மிகப் பிரம்மாண்டமாக….

வைகை நதி கலக்கும் முன் அமைந்திருக்கும் ராமநாதபுரம் பெரிய கண்மாய் : இதன் நீளம் 12 கி.மீ. 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அறுபது கோடி கன அளவு நீரினைத் தேக்கி வைக்கவல்லது.

நதி நீர் இணைப்பு திட்டம் அவசியமா, ஆபத்தா? பகுதி 3

காவிரி கடலில் கலக்கும் முன் அமைந்திருக்கும் வீராணம் ஏரி :  இதன் கொள்ளளவு 146 கோடி கன அளவு. ( இப்பொழுது வெறும் 90 கோடி கன அளவு என சுருக்கி விட்டோம்) முப்பது சதுர கிமீ பரப்பளவு கொண்டது. ஏரி உடைந்து விடாதபடி, ஏரி நிறைந்ததும் தானே வழிந்து வெளியேறி கடலில் கலக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது.  விவசாயத்திற்கென 36 மதகுகள் அமைக்கப்பட்ட ஏரி.  இது தவிர ஏரியைச் சுற்றி பதினைந்துக்கும் மேற்பட்ட பெரிய கண்மாய்களில் நீர் சேமித்து வைக்கப்பட்டு வந்தது.

மதுராந்தகம் ஏரி : கிட்டத்தட்ட மூவாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது.
செம்பரப்பாக்கம் ஏரி : 25 மதகுகள் கொண்ட முன்னூற்றி அறுபது கோடி கன அடி நீரினைத் தேக்கி வைக்கும் மிகப் பெரிய ஏரி.
புழல் ஏரி : நாலாயிரத்து ஐநூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி.

நதி நீர் இணைப்பு திட்டம் அவசியமா, ஆபத்தா? பகுதி 3

இப்படியே கணக்கில் எடுத்தால், பெரும்பாலான ஏரிகள் சென்னையிலிருந்து ராமநாதபுரம் வரை கடற்கரையை ஒட்டியே அமைந்திருக்கிறது. விவசாயத்திற்கோ, குடிப்பதற்கோ நீரினைத் தேக்குவதென்றால் மதுரை, திருச்சி, தஞ்சை, காஞ்சி என்ற நகரங்களை ஒட்டியோ காடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பக்கமாகவோ அல்லவா ஏரிகள் அமைத்திருக்கணும்? அது ஏன் பெரும்பாலான ஏரிகள் கடலின் மிக அருகில்?

அங்கே இருக்கு நீர் மேலாண்மை சூட்சுமம்… அடுத்த பகுதியில் விளக்கமாக…

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP