நதி நீர் இணைப்பு அவசியமா, ஆபத்தா? பகுதி - 8  

ஆஸ்திரேலியாவின், 70% களைச் செடிகள் அந்நிய மண்ணிலிருந்து வந்தவை தான். அதனை அழிக்க முடியாமல் அந்த நாடு மிகவும் சிரமப்பட்டு வருகிறது. இது ஆஸ்திரேலியா, நியூசிலாந்துகளுக்கு மட்டுமல்ல, எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். எந்தவொரு நாட்டின் தாவரமும், பிற நாட்டிற்குச் செல்லும் போது அது களைச் செடியாகிவிடுகிறது.
 | 

நதி நீர் இணைப்பு அவசியமா, ஆபத்தா? பகுதி - 8  

சர்வதேச கிரிக்கெட் வீரர்களான சௌரவ் கங்குலி, ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக் போன்றவர்கள், நியூசிலாந்து இமிகிரேஷனால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவங்கள் நினைவிருக்கிறதா? அவ்வளவு பெரிய பிரபலங்களை, அதுவும் விருந்தினராக அந்நாட்டாலேயே அழைக்கப்பட்டவர்களை, ஏன் தடுத்து நிறுத்தணும்? 

அவர்கள் கொண்டு வந்த காலணிகள் (Shoes) அழுக்காக இருந்தது தான் காரணம். அழுக்கு ஷூக்களை நாட்டிற்குள் கொண்டு செல்ல தடை விதித்தது மட்டுமில்லாமல், 200 நியூசிலாந்து டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. அழுக்கு ஷூக்களை கொண்டு போனது அத்தனை பெரிய குற்றமா? 

ஆம்! அது மிகப் பெரிய குற்றம் என்று நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளுக்கு நன்கு தெரியும். அழுக்கு ஷூக்களின் மூலம், அந்நிய நாட்டுப் பூஞ்சைகள் தன் நாட்டிற்குள் புகுந்து விட்டால், அதன் மூலம் அந்த நாட்டின் விவசாயம் மற்றும் கால்நடைகள் நேரிடையாகவும், பொருளாதாரம் மறைமுகமாகவும் பாதிக்கப்படும் என்பதை நன்கு அறிந்துள்ளனர். 

நதி நீர் இணைப்பு அவசியமா, ஆபத்தா? பகுதி - 8  

ஆஸ்திரேலியாவின், 70%  களைச் செடிகள் அந்நிய மண்ணிலிருந்து வந்தவை தான். அதனை அழிக்க முடியாமல் அந்த நாடு மிகவும் சிரமப்பட்டு வருகிறது. இது ஆஸ்திரேலியா, நியூசிலாந்துகளுக்கு மட்டுமல்ல, எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். எந்தவொரு நாட்டின் தாவரமும், பிற நாட்டிற்குச் செல்லும் போது அது களைச் செடியாகிவிடுகிறது. 

நம் நாட்டிற்கு உணவுப் பஞ்சத்தைத் தீர்க்க அனுப்பப்பட்ட கோதுமையின் மூலம், வட அமெரிக்காவிலிருந்து, 1910ற்கு முன் பாரதத்திற்குள் வந்த பார்த்தீனியம் செடியை இன்று வரை நம்மால் அழிக்க முடியவில்லை. இந்த ஒற்றைக் களைச் செடியை அழிக்க மட்டும், ஒவ்வொரு ஆண்டும் கணிசமான தொகை செலவாகிக் கொண்டிருக்கிறது. 

இத்தனைக்கும் பார்த்தீனியச் செடி, வட அமெரிக்க பழங்குடி மக்களின் மருந்துப் பொருள். எத்தனை பெரிய மருந்துப் பொருளாக இருந்தாலும், அடுத்த மண்ணில் அது களைச் செடி தான். பார்த்தீனியச் செடியால், பல கால்நடைகளின் உயிர் போயிருக்கின்றன. பல உயிரினங்கள் ஒவ்வாமையால் தன்னியல்பினை இழந்திருக்கின்றன. 

இவ்வளவு விளக்கம் தேவையில்லை. ஒற்றை வரியில் இந்தச் செடி எவ்வளவு ஆபத்தானது என்று விளக்குகிறேன். இந்த பார்த்தீனியச் செடிக்கு, பாரதத்தில் வைத்திருக்கும் பெயர் காங்கிரஸ் செடி ( Congress Grass). இதுக்கு மேலே இதை விளக்கணுமா?  இப்படியான ஒரு அழிக்கமுடியாத களை எப்படி வந்தது? 

நதி நீர் இணைப்பு அவசியமா, ஆபத்தா? பகுதி - 8  

பாரத மக்களுக்கு கோதுமை வழங்கி, உதவி செய்கிறோம் என்று அமெரிக்கா அனுப்பியதில் வந்தது. அது நாடெங்கிலும் ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட போது பரவிற்று. இந்த பார்த்தீனியக் கதை எதற்கு இந்த நதிநீர் இணைப்பு கட்டுரைக்கு என்று பெருமாலோனோர் புரிந்திருப்பீர்கள். 

இருந்தாலும் விளக்கமாகச் சில வரிகளில் சொல்ல முனைகிறேன்.  பாரதம் என்பது ஒரே நாடெனினும், கலாச்சாரம் மட்டுமல்ல, சீதோஷ்ண நிலையிலும் மண் வள அடிப்படையிலும், மிகுந்த வேறுபாடுகளைக் கொண்ட நாடு. பஞ்சாபிகளின் உணவுப்பழக்கத்திற்கேற்ப அவர்களது விவசாயம் இருக்கும். வங்காளமும், கர்நாடகமும் முற்றிலும் வெவ்வேறான உணவுப்பழக்கம் மற்றும் விவசாய முறைகள் கொண்டவை. 

ஏதோ ஒன்றிரண்டு செடிகளை, மரங்களை வேறு மாநிலங்களில் பயிடுவதால் பெரும் சேதம் ஏதும் நிகழ்ந்து விடாது. அதே நேரம்,  உத்திரகாண்டில் ஒரு தாவரத்திலிருந்து முதிர்ந்து விழுந்த ஒரு விதை, கங்கை நதியால் இடம் பெயர்க்கப்பட்டு, அதன் போக்கில் கொண்டு சென்று ஒதுக்கினால், அது இயல்பாக வளரும். அதே நதியை வேறொரு மண் வகை பக்கம் மடை மாற்றி விட்டால், அந்த விதை இந்த மண்ணில் வாகிற்கு முளைக்காமல் போகலாம். 

நதி நீர் இணைப்பு அவசியமா, ஆபத்தா? பகுதி - 8  

முளைத்தாலும் மலடாகப் போகலாம். இது கூட பெரிய ஆபத்து இல்லை. அந்த விதைகள் வேறொரு புதிய மண் வகையில் அசுர வளர்ச்சியில் பெருகினால்? அந்த மண்ணில் அது களைச் செடியாகிவிடும். கட்டுப்படுத்த முடியாதளவுக்கு வளரத் தொடங்கினால், மற்ற தாவரங்களின் வளர்ச்சிக்குத் தடையாகவும், அப்பகுதி விவசாயம் சீரழியவும் காரணமாகிவிடும்.  

இது நம் எல்லாருக்கும் ஓரளவு தெரிந்த உணவு சுழற்சி முறை தான். உணவுச் சங்கிலியில் ஒரு கண்ணி அறுந்தாலும் அந்தப் பகுதியில் இயற்கை அழிவு நிச்சியமா, இல்லையா? பாதிக்கப்படாத வரை நமக்குப் புரியாது. பாதிக்கப்பட்டதால், ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் அழுக்கு ஷூக்களைக் கூட தன் நாட்டிற்குள் விடாமல் தடுக்கின்றன.  அது எப்படி ஒரு செடி பரவுவதால், மற்ற செடிகள் பாதிக்கும் என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.

தொடரும்...
 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP