நதி நீர் இணைப்பு அவசியமா, ஆபத்தா? பகுதி-6

நம் முன்னோர்களின் நீர் மேலாண்மைக்கு நாம் எடுத்துக் கொண்டது ஒரே ஒரு நதி மற்றும் ஒரே ஒரு ஏரி மட்டுமே! இப்படியான பெரும் ஏரிகளை கடற்கரை ஓரம் முழுவதும் கட்டி வைத்திருக்கின்றனர். நாம் ஒவ்வொன்றாக அழித்து அதன் மீது கழிவறைகளைக் கட்டி வந்து கொண்டிருக்கிறோம். இருக்கும் செல்வத்தை அழித்து விட்டு அடுத்த மாநில நதிகளிலிருந்து நீரினைக் கொண்டு வருவதை புரட்சி என்று புரட்டும் பேசிக் கொண்டிருக்கிறோம்.
 | 

நதி நீர் இணைப்பு அவசியமா, ஆபத்தா? பகுதி-6

 அன்றைய காலகட்டத்தில் மக்கள் தொகை குறைவாக இருந்ததால், விவசாயமும் அதிகம் தேவைப்படவில்லை. அதனால் நதிகளின் இடையிடையே அணைகள் கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றோ, பண்டைய மன்னர்களுக்கு ஆற்று நீரைத் தடுத்து, எல்லா இடத்திற்கும் பரவலாக அனுப்பும் முறை அதிகம் தெரிந்திருக்காமல் போயிருக்கலாம் என்று சிலர் கேட்டிருந்தனர். 

வேறு சிலரோ, அணைகள் கட்டி தடுக்கக் கூடாத கடலில் கலக்க வேண்டிய நதிநீரை, ஏரிகள் கட்டி தடுத்து வைப்பது மட்டும் நியாயமா? இப்பொழுது மட்டும் கடல்நீரின் உவர்ப்புத் தன்மை கூடாதா? மண் வளம் பாதிக்காதா என்றும் கேட்டிருந்தனர்.

நதி நீர் இணைப்பு அவசியமா, ஆபத்தா? பகுதி-6

நீரினைத் தடுத்து பரவலாகச் செலுத்தும் முறைகளை அறிந்திருக்கவில்லையா? அவர்களின் நீர் மேலாண்மைக்கு ஓரிரு ஏரிகளை மட்டும் உதாரணத்திற்கு எடுத்து கொண்டு விளக்கம் கொடுக்க முயல்கிறேன்.

வீராணம் ஏரி என்ற வீரநாராயணன் ஏரியை எடுத்துக் கொண்டால்,

இன்றியிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட அணை.  48 கிமீ சுற்றளவுள்ள ஏரியைக் கட்ட வேண்டிய அளவிற்கு மக்கட்தொகை இருந்ததா என்று கவனிக்கவும். விவசாயத்திற்குத் தேவையான நீரினைத் தேக்கியும், அதனை அந்தப் பகுதி முழுவதும் பரப்பவும் இவர்கள் கட்டிய மதகுகள் 34 மதகுகள். (அறிவியல் அறிஞர்கள் என்று நினைக்கும் நாம் ஓர் அணைக்கு ஒரு வழியைத் தவிர வேறேதும் வைப்பதில்லை). இந்த 34 மதகுகளில் 28 மதகுகள் ஏரியின் கிழக்குப் பக்கம் அமைந்துள்ளது. அதாவது கடலை நோக்கிச் சரிவாக. இன்னொரு 6 மதகுகள் ஏரியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. தண்ணீர் அதிகமாக உள்ள காலங்களில் இந்தப் பகுதி மதகுகள் பயன்படுத்தப்படும். 

நதி நீர் இணைப்பு அவசியமா, ஆபத்தா? பகுதி-6

இது தவிர ஏரியின் கொள்ளளவைத் தாண்டும் போது, ஏரிக் கரைகளுக்கு எந்த பாதிப்பும் வராமல் இருக்க ஏரியின் தென்பகுதியில் ஓர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளியங்கால் என்ற இந்த ஓடை மூலம் வினாடிக்கு, 18ஆயிரம் கன அடி தண்ணீரை வெளியேற்றி விட முடியும். 

ஏரியின் பாதுகாப்பிற்காக இந்த ஓடை அமைந்திருந்தாலும், தண்ணீரை அப்படியே சும்மா விட மனசில்லாமல், அந்த ஓடை ஒரு 14 பெரிய கண்மாய்களை நிரப்புமாறு வடிவமைத்திருக்கிறார்கள். இதையும் தவிர வெள்ளியங்கால் ஓடையின் தென்புறம், 490 அடி நீளத்திற்கு ஒரு மொட்டைக் கலுங்கு அமைத்திருக்கின்றனர். அதாவது, அதீத வெள்ளத்தினால் ஓடை வழியாகச் செல்லும் நீர் கண்மாய்களைச் சீர்குலைத்து விடக் கூடாது என்று இந்த கலுங்கு எனும் நீர் வடிகால் அமைக்கப்பட்டிருக்கிறது.  நினைவிருக்கட்டும் இதெல்லாம் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் சிந்தித்து வடிவமைக்கப்பட்டது.

எங்கிருந்தோ பாய்ந்து வரும் ஆற்றின் போக்கினை வேறு எங்கேயும் தடுத்து நிறுத்தாமல் கடலுக்கு ஐம்பது கிமீக்கு முன்பு தடுத்து, அதனை 34 திசைகளில் பிரித்து விவசாயப் பாசனத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். எத்தனை ஏக்கர் விவசாயத்திற்குத் தெரியுமா கிட்டத்தட்ட, 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இந்த ஒற்றை ஏரியால் செழித்திருக்கிறது.

நதி நீர் இணைப்பு அவசியமா, ஆபத்தா? பகுதி-6

 பொ.யு ஆயிரம் ஆண்டில் ஒட்டு மொத்த உலகின் மக்கள் தொகை 31 கோடி. அதில் பாரதத்தில் 3 கோடிகளாகவும் சோழ நாட்டின் கிழக்குப் பகுதி மக்கள் தொகை அதிகபட்சமாக பத்து லட்சமாகவும் இருந்திருக்கலாம். பத்து லட்சம் மக்களுக்கு 50 ஆயிரம் ஏக்கர் பாசண வசதி. எப்படி திட்டமிட்டிருக்கிறார்கள் பாருங்கள். அறிவியல் வளர்ச்சியடைந்த சந்ததியான நாம், விவசாயத்திற்கு வைத்திருக்கும் நீரினை 250 கிமீ தூரம் கடத்திச் சென்று சென்னையில் குடிநீருக்கு பயன்படுத்துகிறோம். வெட்கப்படணுமா இல்லையா?

சரி அடுத்த கேள்விக்கு வருவோம். இப்பொழுது மட்டும் கடலில் கலக்காமல் விடுவதால் கடல்நீரின் உவர்ப்புத் தன்மை கூடாதா?

கூடாது! இரண்டு வகையில் சிந்தித்து வடிவமைத்திருக்கிறார்கள். 1, ஏரியின் ஆழம். 2, பாசணத்திற்கு பரப்புவது போல் பரப்பி நிலத்தடி நீரினை அந்தப் பிராந்தியம் முழுவதும் அதிகரிக்கச் செய்திருக்கிறார்கள். 

வீராணம் ஏரியின் ஆழம் 47 அடி. அதில் கிட்டத்தட்ட 30 அடி கடல் மட்டத்திற்கும் கீழே இருக்கிறது. எனவே, அந்தப் பகுதியில் கடல் நீர் உவர்ப்புத் தன்மை கூடும் போதெல்லாம் நிலத்திலிருக்கும் நீரினை உறிஞ்சத் தொடங்கும். அப்படி உறிய உறிய அதன் மட்டத்திற்கே தண்ணீரை அனுப்ப வசதியாக கடல் மட்டத்திற்கும் கீழே 30 அடிகள். 

நதி நீர் இணைப்பு அவசியமா, ஆபத்தா? பகுதி-6

அடுத்ததாக, வருடத்தின் சில மாதங்கள் மட்டுமே நீர்வரத்தும், அது கடலில் கலப்பதாலும், மற்ற மாதங்களில் கடல் நீர் தன் உவர்ப்புத் தன்மையை சமன்படுத்த நிலத்தடி நீரைத் தான் தேடும். நீர் வராத சுமார் 8 மாதங்களில் நிலம் வறண்டு போவது மட்டுமன்றி, அந்தப் பகுதி மண் வளமும் பாதிக்கப்படும். அதற்கு பதிலாக இப்படி ஏரியில் தேக்கி வைத்து சுமார் 6 மாதங்களுக்கும் மேலே நீரினை வாய்க்கால்கள் வழி அனுப்பிப் பரப்பும் போது, கடலின் உவர்ப்பு சமப்படுத்தப்படும்.

 அதே நேரம், நிலம் எப்பொழுதும் ஈரப்பதத்துடன் வளமையாக பல சிற்றுயிர் மற்றும் நுண்ணியிர்கள் வாழ வசதியாக இருக்கும். பல உயிரினங்கள் வாழ்வதால் மண் இறுகிவிடாமல் நெகிழ்வாகவே இருக்கும். விவசாயமும் செழிக்கும். மண்ணின் வளத்தினை இப்படி பாதுகாக்காமல், ஏரிகளையும் கண்மாய்களையும் அழித்து விட்டு, ஏதோ சில நூறு ஏக்கர் நிலத்தில் நிறுவப்படும் எண்ணை மற்றும் வாயு நிறுவனங்களால் தான் என் மொத்த விவசாயமும் போகப் போகிறது என்று மூடத்தனமாகப் பிதற்றிக் கொண்டிருப்பது விந்தையிலும் விந்தை.

நதி நீர் இணைப்பு அவசியமா, ஆபத்தா? பகுதி-6

நம் முன்னோர்களின் நீர் மேலாண்மைக்கு நாம் எடுத்துக் கொண்டது ஒரே ஒரு நதி மற்றும் ஒரே ஒரு ஏரி மட்டுமே! இப்படியான பெரும் ஏரிகளை கடற்கரை ஓரம் முழுவதும் கட்டி வைத்திருக்கின்றனர். நாம் ஒவ்வொன்றாக அழித்து அதன் மீது கழிவறைகளைக் கட்டி வந்து கொண்டிருக்கிறோம். இருக்கும் செல்வத்தை அழித்து விட்டு அடுத்த மாநில நதிகளிலிருந்து நீரினைக் கொண்டு வருவதை புரட்சி என்று புரட்டும் பேசிக் கொண்டிருக்கிறோம். 

வரும் பகுதிகளில் இரண்டு நதிகளை இணைப்பதால் வரும் பேரிடர்களைப் பார்ப்போம்.

newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP