நீதியின் பசிக்கு உயிர் தான் உணவா?

தமிழக அரசு இந்த வழக்கை தொடக்கத்திலேயே, சிபிசிஐடி வசம் ஒப்படைத்து குற்றவாளிகளுக்கு கடுமையனான தண்டனையை பெற்றுத்தருவதன் மூலம் மட்டுமே, குற்றவாளிகள் மனதில் அச்சத்தையும், அரசுக்கு உதவி செய்தால் நமக்கு அரசு பாதுகாப்பு தரும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்த முடியம். அதனை உடனே செய்ய வேண்டும் என்பதுதான் நல்லவர்களின் எதிர்ப்பார்ப்பு.
 | 

நீதியின் பசிக்கு உயிர் தான் உணவா?

வெளிநாடுகளை விட இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்தில் காவல்துறையினர் எண்ணிக்கை குறைவு. இங்குள்ள மக்கள் நல்லவர்களாகவும், சமுதாயமே அவர்களை கண்காணிப்பதாலும் காவல்துறையினரின் தேவை குறைவாக உள்ளது.

இன்னும் பல கிராமங்களில், காவல்துறையினர் காலடி வைத்ததே இல்லை. கட்டபஞ்சாயத்து என்று கேவலமாக கூறினால் கூட, ஒரு சில குடும்பங்கள் சொல்லும் தீர்ப்பிற்கு கிராமமே கட்டுப்பட்டு நடப்பது இன்னும் கூட நடக்கிறது. 

காவல்துறையினர் எண்ணிக்கை குறைவாக இருந்தால் கூட, மக்கள் ஒத்துழைப்பு தான் அவர்களை செயல்படவைக்கிறது. உள்நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கும், வெளிநாட்டில் இருந்து வரும் பயங்கரவாத சக்திகளுக்கும் எதிரான காவல்துறை நடவடிக்கை எடுக்க முயல மக்கள் ஒத்துழைப்பு தான் காரணம்.

பயங்கரவாதிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கிடைத்தால், அவர்களின் எந்த நடவடிக்கையையும் அடக்க ஒடுக்க முடியாது. இதற்கு ஜம்மு - காஷ்மீர் மாநிலம் மிகச் சிறந்த உதாரணம். அங்கு மக்கள் வேறு, பயங்கரவாதிகள் வேறு என்று இல்லை. இருவருமே ஒன்றுதான். தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் ஆயுதங்கள் குவிக்கப்படுவதற்கும், பயங்கரவாதிகளுக்கு கிடைக்கும் ஆதரவே காரணம்.

இதையெல்லாம் மீறி, அநீதிக்கு எதிராக தனிப்பட்ட நபர்கள் களம் இறங்கினால், அவர்களை பாதுகாத்து முன் உதாரண மக்களாக அடையாளம் காட்ட வேண்டியது, அரசின் கடமை. அப்போது தான், அவர்களைப் போல பலர் செயல்பட முன்வருவார்கள்.

ஆனால், நேற்று முன்தினம் கரூர் மாவட்டத்தில் நடந்த இரட்டை கொலை தமிழகத்தின் நிலையை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது.

கரூர் மாவட்டம் முதலைப்பட்டியில், 196 ஏக்கர் குளம் உள்ளது. இதில் 157 ஏக்கரை சிலர் ஆக்கிரமித்தனர். அவர்களின் இந்த செயலைப் பாராட்டி, அரசும் பட்டா கொடுத்தது. மீதம் உள்ள 39 ஏக்கரை விவசாயிகள் ஆக்கிரமித்து விவசாயம் செய்தனர். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் குளமே காலி.

நீர் நிலை ஆக்கிரமிப்பு, அதனை அகற்ற வேண்டிய அவசியம், குறித்து ஸ்டாலின், எடப்பாடி தொடங்கி கால் வழுக்கி பொதுவாழ்க்கையில் விழுந்தவர்கள் வரை கூறுகிறார்கள்.

இதை நம்பி அதே ஊரைச் சேர்ந்த கோயில் பூசாரி ராமன்,  அவர் மகன் வண்டு (எ) நல்லதம்பி ஆகியோர் நீர் நிலை ஆக்கிரமிப்பு குறித்து ஐகோர்ட் மதுரைக்கிளையில்  வழக்கு தொடர்ந்தனர். கோர்ட் உத்தரவின் படி தோகைமலை பிடிஓ  ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை அளந்துள்ளார். அதற்கு வழக்கு தொடர்ந்த நல்ல தம்பி, அவர் தந்தை உதவி செய்தனர்.

இதை பார்த்த ஆக்கிரமிப்பாளர்கள் நல்லதம்பியையும், அவர் தந்தையையும் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி இருக்கிறார்கள்.

பொதுசொத்துக்களை மீட்க வேண்டும் என்ற முயற்சியில் 2 உயிர்கள் பறி போய் உள்ளன. இந்த சம்பவத்திற்கு பின்னணியில் நிச்சயம் அரசியல் இருக்கிறது.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டிய அரசு, இந்த கொலைக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்வி தான் பொதுமக்கள், நியாயமார்களின் எண்ணமாக இருக்கிறது.

சமுக செயற்பாட்டாளர் முகிலனுக்கு ஆதரவாக களம் இறங்கி போராடும், மக்கள் இவர்கள் கொலைக்கு எந்த அளவிற்கு போராடப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

சட்டத்திற்கு துணை நிற்கும் மக்களை, கூலிப்படை கொலை செய்து அச்சுருத்தல் ஏற்படுத்தும் என்றால், மற்றவர்கள் யாரும் இது .போன்ற செயலை செய்ய முன்வர மாட்டார்கள். அது மக்களுக்கு மிகவும் துன்பத்தை தரும். 

தமிழக அரசு இந்த வழக்கை தொடக்கத்திலேயே, சிபிசிஐடி வசம் ஒப்படைத்து குற்றவாளிகளுக்கு கடுமையனான தண்டனையை பெற்றுத்தருவதன் மூலம் மட்டுமே, குற்றவாளிகள் மனதில் அச்சத்தையும், அரசுக்கு உதவி செய்தால் நமக்கு அரசு பாதுகாப்பு தரும் என்ற நம்பிக்கையையும்  ஏற்படுத்த முடியம். அதனை உடனே செய்ய வேண்டும் என்பதுதான் நல்லவர்களின் எதிர்ப்பார்ப்பு.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP