ஜெயலலிதா சிலையை எப்போ தான் மாத்துவீங்க?

உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ வெண்கலச் சிலை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப் பட்டதை..?
 | 

ஜெயலலிதா சிலையை எப்போ தான் மாத்துவீங்க?

உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ வெண்கலச் சிலை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டதை..?

நிச்சயமாக மறந்திருக்க மாட்டீர்கள். ஏனென்றால் அது ஜெயலலிதாவா என்ற கேள்வி தான் நமக்கு முதலில் எழுந்தது. நெட்டிசன்களும் இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியை வைத்து கதற கதற கலாய்த்தனர். பொது மக்களாகிய நமக்கே இப்படி என்றால் அ.தி.மு.க-வின் தொண்டர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்.   ஜெயலலிதா மீது இருந்த கோபத்தை அவரது சிலையில் காட்டி விட்டார்கள் என்பதே பலரின் கருத்தாக இருந்தது. 

ஜெயலலிதாவின் அந்த சிலையோடு, வளர்மதி, சசிகலா, வடிவுக்கரசி ஆகியோரை ஒப்பிட்டனர் மக்கள். சிலர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி படத்தையும் ஜெயலலிதாவின் சிலை புகைப்படத்தையும் இணைத்து ஒப்பிட்டிருந்தனர். கிட்டத்தட்ட 10 பொருத்தமும் அப்படியே இருந்ததுபோலத்தான் தோன்றியது. ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று சிலை திறக்கப்பட்டபோது, கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் சிலையைக் காண கூட்டமாக சென்றார்கள். அதன் பிறகு யாரும் அந்த சிலையைக் காண ஆர்வம் காட்டவில்லை என்பதே உண்மை. 

சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு, ஜெயலலிதாவின் சிலையை மாற்றம் கொண்டு வருவது குறித்து, கட்சியின் தலைமை முடிவு செய்யும் என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். 

ஜெயலலிதா சிலையை எப்போ தான் மாத்துவீங்க?

கிட்டத்தட்ட 6 மாதங்களாகி விட்டது. இன்னும் அ.தி.மு.க முடிவெடுத்து முடிக்கவில்லை. ஜெயலலிதா உயிரோடு இருந்த போது இருந்த பாசம், பக்தி எல்லாம் வெறும் வேஷம் என்பதை உறுதி செய்யும் இன்னொரு விஷயம் தான் இந்த சிலை விவகாரமும். உண்மையிலேயே ஜெயலலிதா மேல் பற்று இருந்திருந்தால், சிலை வடிக்கும் போதே தவறுகளை திருத்தி அவரின் உண்மையான வடிவத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும்.

இல்லையேல் விமர்சனங்கள் எழுந்த பிறகாவது சொன்னபடி உடனடியாக சிலையை மாற்றியமைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கான எந்த முன்னெடுப்பும் எடுக்கப் படவில்லை என்பதே உண்மை. ஜெ.வின் அடுத்த பிறந்தநாளுக்காவது ஒரிஜினல் முகத்தைக் காண வழி செய்வார்களா ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுகள்? சி.பி.ஐ விசாரணை என்று பொங்கியவர்கள், பதவி கிடைத்ததும் அடங்கியதைப் பார்த்தோம். ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய உண்மையை வெளிக்கொண்டுவருவதிலேயே இவர்களின் சுயரூபம் வெளிப்பட்டது. சிலை விஷயத்திலா நடவடிக்கை எடுக்கப்போகின்றார்கள் என்று கேட்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP