தவறாக வழிகாட்டுவது தலைவருக்கு அழகாகுமா திரு.வைகோ? 

என்னை கைது செய்யுங்கள்; பின்னர் தொண்டர்களை கைது செய்யுங்கள்’’ என்று கூறி இருக்க வேண்டும். அதை விடுத்து, தொண்டர்களை தவறான பாதையில் திருப்பி விட்டால், மதிமுகவில் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் தொண்டரும் காணாமல் போய்விடுவான்.
 | 

தவறாக வழிகாட்டுவது தலைவருக்கு அழகாகுமா திரு.வைகோ? 

திருப்பூர் நகருக்கு ஞாயிற்றுக் கிழமை பிரதமர் மோடி வருகை தந்தார். அவர் மீது பலருக்கு ஆதரவு , எதிர்ப்பு இருப்பது இயல்பானது தான். அதன் காரணமாக, நீங்கள் திருப்பூர் நகரில் கறுப்பு கொடி போராட்டம் நடத்தினீர்கள்.

அதில், மதிமுக தொண்டர் ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு, டிரான்ஸ் பார்மர் மீது ஏறி கோஷம் இட்டார். உண்மையான தலைவராக இருந்தால், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, அந்த தொண்டனை கீழே இறங்க உத்தரவிட்டு இருக்க வேண்டும். 

உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது அசம்பாவிதம் நடத்திருந்தால், அவர் குடும்பம் நடத்து தெருவுக்கு வந்து இருக்கும். களத்தில் இருந்த நீங்களோ அந்த தொண்டரின் உயிரை மதிக்காமல், ‛‛என் தொண்டன் எனக்காக உயிர் துறப்பான்’’ என்று உசுப்பேற்றி விடுகிறீர்கள்.

போலீஸ் ஜென்ரேட்டரை நிறுத்தியதும்; நீங்கள் மாற்று ஏற்பாட்டுடன் தான் வந்து இருப்பதாக கூறுகிறீர்கள். எல்லாவற்றையும் எதிர்பார்த்து தான் நீங்கள் வந்திருப்பதாக கூறிவிட்டு, பேச தொடங்கும் போது  பாண்டியனை அழைத்து, இந்த வாகனத்தில் போலீஸ் யாரும் ஏறக்கூடாது, அப்படி ஏறினால் அது உன் பிணத்தின் மீது தான் ஏறி வர வேண்டும் என்று கட்டளையிடுகிறீர்களே.

தவறாக வழிகாட்டுவது தலைவருக்கு அழகாகுமா திரு.வைகோ? 

இது தான் தலைவருக்கு அழகா, தொண்டர் படையை சேர்ந்த 4 பேர், டிரைவர் அருகே நிற்க வேண்டும் என்று வேன் பக்கம் போலீஸ் நெருங்காமல் வியூகம் வகுக்கிறீர். அப்படி யாராவது வந்தால் தொண்டர் படையினர் பிணத்தின் மீது தான் ஏறி வர வேண்டும் என்று உசுப்பேத்தி விடுகிறீர்.

அதன் பின்னர் இவ்வளவு உயரத்தில் நிற்கிறேன் சுடுங்க என்று ஆவேசம் காட்டுகிறீர்கள், உயிருக்கு பயப்படவில்லை என்றால், பாண்டியனை அழைத்து கட்டளை இட்டது எதற்காக வைகோ அவர்களே.

ஒரு தலைவன், தொண்டர்கள் மீது சிறு துரும்பு கூட விழாமல் பாதுகாக்க வேண்டும். நீங்களே புலிக்கு பயந்தவன் என் மீது படுத்துக் கொள் என்பதைப் போல தொண்டர்களுக்கு வழிகாட்டுவது என்ன நியாயம்?

உங்கள் கண் முன்னரே பாஜவை சேர்ந்த பெண் தாக்கப்படுகிறார். உரிமைக்கு குரல் கொடுக்கும் நீங்கள், அதை தடுத்து இருக்க வேண்டும் அல்லவா. ஆனால், தொண்டர்கள் அவரை  தாக்க தொடங்கும் போதே அமைதி காத்திருக்க சொல்லி இருக்க வேண்டும்.

தவறாக வழிகாட்டுவது தலைவருக்கு அழகாகுமா திரு.வைகோ? 

பாதி சம்பவம் முடிந்த பின்னர் அமைதியாக இருக்க சொல்வது, உங்கள் உரிமைப் போராட்டத்தின் மீது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

வைகோ அவர்களே, உங்களை விட உங்கள் தொண்டகள் கொள்கை பிடிப்பு கொண்டவர்கள். அவர்களை நீங்கள் நல்வழிப்படுத்தி, தமிழகத்தின் ஜீவாதார பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதை விடுத்து, அவர்களை உசுப்பேத்தி உயிரை இழக்க செய்வது என்பது தலைவனுக்கு அழகு அல்ல.

சில காலத்திற்கு முன்பு, உங்கள் மருமகன் சரவண சுரேஷ், நாம் தமிழர் கட்சியினர் மீம்ஸ்களை பார்த்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட போது, அப்பல்லோ வாசலில் கண்ணீர் விட்டு கதறினீர்களே.அதே போல தானே, தொண்டர்களும். அவர்களை உசுப்பேற்றி விடுவது என்ன நியாயம்?

நீங்கள் சரியான தலைவர் என்றால், நீங்கள் முதலில் ‛‛என்னை கைது செய்யுங்கள்; பின்னர் தொண்டர்களை கைது செய்யுங்கள்’’ என்று கூறி இருக்க வேண்டும். அதை விடுத்து, தொண்டர்களை தவறான பாதையில் திருப்பி விட்டால், மதிமுகவில் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் தொண்டரும் காணாமல் போய்விடுவான்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP