நதி நீர் இணைப்புத் திட்டம் அவசியமா, ஆபத்தா? பகுதி - 4

விரல் அளவுள்ள வெள்ளரிப் பிஞ்சில் இருக்கும் நீரின் அளவு, 50 மிலி இருக்கலாம். ஆனால், அதில் நிறைந்திருக்கும் தாதுக்கள், நதி கடத்தி வந்தது. அறிவியல் வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் நாம் என்ன செய்கிறோம்? முதலில் அணையைக் கட்டி, மணலைத் தடுத்தோம். இரண்டாவது நதியின் நடுவில் கிடந்த மணலையும் அள்ளிக் கடத்திக் கொண்டு சென்று விட்டோம்.
 | 

நதி நீர் இணைப்புத் திட்டம் அவசியமா, ஆபத்தா? பகுதி - 4

நதிகள் பயணப்படும் பாதையில், எங்கேயாவது ஏதேனும் ஏரிகளைக் கட்டி வைத்தனரா நம் முன்னோர்கள்? மாறாக நதி கடலில் கலக்கப் போகும் முன் தடுத்து, மிகப் பெரிய ஏரிகளைக் கட்டி வைத்திருக்கின்றனர். முரணாக இல்லை? நமக்குக் கற்றுக் கொடுக்கப்படும் நீர் மேலாண்மை என்பது, மலையை விட்டு இறங்கும் போதே அணையைக் கட்டுவதும்,  பெருநகரங்களுக்கு முன் நதிகளைத் தடுத்து அணைகள் கட்டுவதும்,  கடலில் கலக்கும் நீர் அநாவசியம் என்பதும் தானே?

நம் முன்னோர்கள், நதிகளை உயிரோட்டமுள்ள ஆன்மாவாகப் பார்த்தனர். நாம் அவ்வளவு தூரம் யோசிக்க வேண்டாம். சும்மா அறிவியலாக மட்டும் பார்ப்போம்.

நதி எங்கேயிருந்து புறப்படுகிறது? மலைகள் பலவற்றிலிருந்து இறங்கி, பள்ளத்தாக்கினை நோக்கி, பின் காடுகளைக் கடந்து, சமவெளியில் பரவி வடிந்து, கடலில் கலக்கிறது. இத்தனை பெரிய பயணத்தில், மலையிலிருந்து கற்களைப் பெயர்த்து, உடைத்து காலகாலமாக அவற்றைத் தேய்த்து, மணற்துகள்களை சுமந்து வந்து, சமவெளியில் குவிக்கிறது. இந்த மணலால் என்ன பயன்?

சமவெளியில் பல அடி உயரத்திற்கு (சில இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அடிகள்) குவிக்கப்பட்ட நனைந்த மணல்கள் கொடுக்கும் அழுத்தம் என்பது, மிக மிக மிக அதிகம். இப்படி கொடுக்கப்படும் அழுத்தத்தால், ஆற்றின் நீரானது நிலத்திற்குள் அழுந்தித் தள்ளப்படும். தொடர்ச்சியாகத் தள்ளப்படும் நீரானது, நிலத்தின் அடியில் நீரற்ற பகுதிக்கு உந்தப்படும். இந்த செயல்கள் தொடரும் போது, அங்கேயிருந்து பல மைல் தொலைவுக்கு நிலத்தடி நீர் பெருகும்.  

நதி நீர் இணைப்புத் திட்டம் அவசியமா, ஆபத்தா? பகுதி - 4

 

இப்ப சொல்லுங்க, நிலத்தடி நீர் பெருக, ஆற்றில் மணல் அவசியமா இல்லையா? அவசியம் என்றால் நாம் செய்யக் கூடாத விசயம் என்ன? சட்டென உங்கள் மனதில் தோன்றிய விசயம் என்னவெனில், ஆற்று மணலை அள்ளக் கூடாது என்பது தான் இல்லையா? 

ஆம்! அள்ளக் கூடாது. அதை விட முக்கியமான ஒரு விசயம் என்னவெனில், நாம் மணற்துகள்கள் வரும் பாதையை அணைகள்/ஏரிகள் கட்டி அடைக்கக் கூடாது. நாம் நீரினைத் தடுத்து சேமித்து வைக்கிறோம் என்ற பெயரில், மணற்துகள்களையும் அங்கேயே தடுத்து நிறுத்தி விட்டு, வெறும் தண்ணீரை மட்டும் திறந்து விட்டுக் கொண்டிருக்கிறோம். சரியா தவறா? 

நதி நீர் இணைப்புத் திட்டம் அவசியமா, ஆபத்தா? பகுதி - 4

சரி அடுத்ததாக, சமவெளியிலிருந்து கீழிறங்கி கடலில் கலக்கும் முன்பு வரை, சமவெளி மணல்களை உருட்டி உருட்டி தேய்த்து, வண்டல் மண்ணாக மாற்றி, கடலில் கலக்கப் போகும் முன், நல்ல சத்துள்ள வண்டல் மண்ணை அப்படியே லாவகமாகத் தடுத்து நிறுத்தி விட, ஏரிகளைக் கட்டினர். 

அங்கே தடுக்கப்பட்டு விவசாயத்திற்குப் பிரித்து விடப்படும் நீருடன், நல்ல தாதுக்கள் நிறைந்த மண் பயணித்து விவசாயத்தினை வளப்படுத்துகிறது. அத்தனை தாதுக்களா அந்த மண்ணில் இருக்கிறது என்று சந்தேகப்படுபவர்கள், கொஞ்சம் கிராமத்துப் பின்னணி இருக்கக் கூடிய, 40 வயதைக் கடந்தவர்களிடம் இதைக் கேட்டுப் பாருங்கள். 

பெரிய ஏரி / கண்மாய்களில் விளைந்த வெள்ளரிப் பிஞ்சுகள் (இரண்டு விரல்கள் தடிமனும் உயரமுமே இருக்கும்) இரண்டினைச் சாப்பிட்டால் சட்டென தண்ணீர் தாகம் நின்று விடுமா இல்லையா என்று? 

அதாவது, நம் தாகத்திற்குக் காரணம் தண்ணீர் பற்றாக்குறை மட்டுமல்ல, ரத்தத்தில் தாதுக்களின் அளவு குறைவதாலும் தான். அது ஆற்று நீரில் எளிதாகக் கிடைக்கக் கூடியது. இன்றைய பாட்டில் தண்ணீரை வயிறு முட்டக் குடித்தாலும் தீராத தாகம், கொஞ்சம் ஓடைத் தண்ணீரைக் குடித்ததும் தீர்ந்து விடும். காரணம், ஓடைத் தண்ணீரில் இருக்கும் தாதுக்கள் நம் ரத்தத்தின் தேவையைத் தீர்த்து வைக்கிறது. 

நதி நீர் இணைப்புத் திட்டம் அவசியமா, ஆபத்தா? பகுதி - 4

விரல் அளவுள்ள வெள்ளரிப் பிஞ்சில் இருக்கும் நீரின் அளவு, 50 மிலி இருக்கலாம். ஆனால், அதில் நிறைந்திருக்கும் தாதுக்கள், நதி கடத்தி வந்தது.  அறிவியல் வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் நாம் என்ன செய்கிறோம்? முதலில் அணையைக் கட்டி, மணலைத் தடுத்தோம். இரண்டாவது நதியின் நடுவில் கிடந்த மணலையும் அள்ளிக் கடத்திக் கொண்டு சென்று விட்டோம். 

நதி நீர் இணைப்புத் திட்டம் அவசியமா, ஆபத்தா? பகுதி - 4

அப்புறம் டெல்டாவில் மீத்தேன் எடுத்ததால், ஹைட்ரோகார்பன் எடுத்ததால் தான் விவசாயம் போச்சுனு புலம்பும் அறிவுஜீவிகள் நாம். பசுவுக்குத் தீனி வைக்காமல், காம்பில் ஈ கடிப்பதால் தான் பால் கறப்பதில்லைனு ஈயுடன் சண்டை போட்டுட்டிருக்கும் முல்லாக்கள் நாம்.

அப்ப மணல்களைக் கடத்தி வருவதால் மட்டும் தான் நதிகளைத் தடுக்கக் கூடாதா? என்றால், அதுவும் ஒரு காரணம். அதை விட மிக முக்கியமான காரணம் இன்னொன்றையும் பார்க்கலாம்….. அடுத்த தொடரில்....

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP