மாமியார் உடைத்தால் மண் சட்டி..

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்திற்கான தொழிற்முதலீட்டை கவர்ந்து வருவது தான் அதன் நோக்கம். அது எந்த அளவிற்கு நிறைவேறும் என்பது காலம் தான் பதில் சொல்லும்.
 | 

மாமியார் உடைத்தால் மண் சட்டி..

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்திற்கான தொழிற்முதலீட்டை கவர்ந்து வருவது தான் அதன் நோக்கம். அது எந்த அளவிற்கு நிறைவேறும் என்பது காலம் தான் பதில் சொல்லும். அதைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டும் என்றாலோ, அதற்கான யோசனைகள் சொல்லவேண்டும் என்றாலோ ஆழந்த சிந்தனை, கள அனுபவம் போன்ற பலவிஷயங்கள் தெரிந்து இருக்க வேண்டும். அதை விட எளிது எடப்பாடி கோட்டு சூட்டு போட்டு சென்றதை விமர்சனம் செய்வது. அதனால் அதுவே தற்போது விமர்சனப் பொருளாக மாறிவிட்டது.

இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணம் தொடக்கப்பட்ட போது முதல்வர் பழனிசாமி, நான் விவசாயி மகன் எனக்கு கோட்டு சூட்டு வேண்டாம், வேஷ்டியே போதும் என்று கூறினார். அதன்படியே சென்னை விமானநிலையத்தில் அவருக்கு நடந்த வழியனுப்பு விழாவில் அவரின் ஆடைகளும் இருந்தன. அதே நேரத்தில் லண்டன் சென்று இறங்கிய பின்னர் அங்கு நடந்த விழாவில் அவர் கலந்து கொண்ட போது வேஷ்டி சட்டைக்கு பதிலாக பழனிசாமியின் உடை கோட் சூட்டாக மாற்றிவிட்டது. அதன் பின்னர் சமூக வலை தளங்களில் பேசும் பொருளாக இது மாறிவிட்டது. மீம்ஸ் கிரியேட்டர்கள் பழனிசாமியின் ஆடைமாற்றத்தை கிண்டல் செய்து தங்கள் பெயரை வெளி உலகிற்கு அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள்.

டிரஸ் கோட் என ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஒவ்வொரு இடத்திற்கும் இந்தவிதத்தில் ஆடை அணிந்து வர வேண்டும் என்று கட்டுபாடு விதித்துள்ளார்கள். இங்கிலாந்து ராணி எலிசபெத், அமெரிக்க அதிபர்கள் போன்றவர்களை சந்திக்க செல்லும் முன்பு எப்படி ஆடை அணிந்திருக்க வேண்டும். அது எந்த வண்ணத்தி்ல் இருக்க வேண்டும் என்று மிகப் பெரிய பட்டியலே வரும்.

2வது வட்டமேசை மாநாட்டிற்கு அரைகுறை ஆடையில் காந்தி சென்றது இன்றளவும் சாதனையாக பேசப்படுவதில் இருந்தே மற்ற தலைவர்கள் பாம்பு தின்னும் ஊருக்கு சென்றால் நடுத்துண்டம் எனக்கு என்று தான் வாழ்ந்துள்ளனர் என்பது நன்கு விளங்கும்.

இந்த வழக்கத்தின் உச்சம் அமெரிக்காவின் நிர்வாண வாசிகள் சங்கத்திற்கு பேச சென்ற ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக சென்றது தான்.

டில்லியில் வேட்டி சட்டையின் விளம்பரத்தூதர் போல விளங்கும் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் கூட வெளிநாடுகளிலும், இங்கும் ஒரு சில நேரங்களில் கோட்டு சூட்டு அணிந்து வலம் வந்துள்ளார்.

கதர் துணிகளை தன் தோளில் சுமந்து விற்றவர்களில் ஒருவரான கருணாநிதியும் ஒருவர். அவர் மகன் ஸ்டாலின் ஐநா சபைக்கு சென்ற போது அணிந்திருந்ததும் கோட்டு சூட்டுதான். அவர் மட்டும் அல்லாமல் அவருடன் சென்ற டிஆர் பாலுவும் அதே கோலத்தில் தான் இருந்தார்.

இவ்வளவு ஏன் சென்னையில் பிரபலமான ஓட்டல் ஒன்றில் நடந்த நிருபர் சந்திப்புக்கு மூத்த நிருபர் ஒருவர் வேட்டி அணிந்து சென்றார். அவரை ஓட்டல் நிர்வாகத்தினர் உள்ளே செல்ல அனுமதி மறுத்துவிட்டனர்.அவர் நான் உங்கள் ஓட்டலில் தங்கவோ. விருந்து உண்ணவோ வர வில்லை. பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அழைப்பு வந்துள்ளேன், அதற்காக செல்கிறேன் என்ற அவரின் பதிலைக் கூட ஓட்டல் நிர்வாகம் ஏற்பதாக இல்லை.

பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு தகவல் கிடைக்க அவர்கள் வந்து பேச, நீங்கள் வேண்டும் என்றால் ஓட்டலை காலி செய்து செல்லுங்கள் நாங்கள் எங்கள் கொள்கையை விட்டுக் .கொடுக்க மாட்டோம் என்று  நிர்வாகத்தினர் உறுதிகாட்டினர். கடைசியில் அவர் ஓட்டல் வரண்டாவில் பேட்டி எடுத்துக் கொண்டு திரும்பினார்.பின்னர் இது சர்ச்சையாக வெடிக்க, அப்போது திமுக ஆட்சி என்பதால் அந்த ஓட்டலை கண்டிக்க முடிந்தது.

இப்படி பல இடங்களில் ஆடைகள் அணியும் முறை கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. அதை கடைபிடிக்காமல் கொள்கை பற்றி பேசலாம். அதனால் நஷ்டம் நமக்கு தான். முதல்வர் எடப்பாடியின் வெளிநாட்டு பயணத்தை விமர்சனம் செய்வதன் பேரில், அவரை கேலி செய்வதாக நினைத்து  மனமுதிர்ச்சியற்று மீம்ஸ் போட்டு வரும் தமிழர்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP