காலையில் வெற்றிலை மென்றால்....

தமிழர்கள் பாரம்பரியமாக கடவுளுக்குப் படையல் படைக்கும்போதும் சரி, மங்களகரமான நிகழ்ச்சிகளிலும் சரி... அதில் வெற்றிலை கட்டாயம் இடம் பெற்றிருக்கும். நிச்சயதார்த்தத்தின் போது வெற்றிலை-பாக்கு மாற்றிக் கொள்வது சம்பிரதாயமாக விளங்கி வருகிறது.
 | 

காலையில் வெற்றிலை மென்றால்....

தமிழர்கள் பாரம்பரியமாக கடவுளுக்குப் படையல் படைக்கும்போதும் சரி, மங்களகரமான நிகழ்ச்சிகளிலும் சரி... அதில் வெற்றிலை கட்டாயம் இடம் பெற்றிருக்கும். திருமண நிச்சயதார்த்தத்தின் போது வெற்றிலை-பாக்கு மாற்றிக் கொள்வது ஒரு சம்பிரதாயமாக தொன்றுதொட்டு விளங்கி வருகிறது. 

காலையில் வெற்றிலை மென்றால்....

தமிழ்நாட்டில்  தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, சுவாமிமலை, ஆவூர், திருவையாறு ஆகிய பகுதிகளில் வெற்றிலை அதிகமாக பயிரிடப்படுவதால் கும்பகோணத்தின் புவிசார் அடையாளமாக விளங்குகிறது. எனவே இந்த வெற்றிலைகள் 'கும்பகோணம் வெற்றிலை' என்ற அடைமொழியுடன் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

காலையில் வெற்றிலை மென்றால்....

கும்பகோணம் வெற்றிலை மற்ற பகுதிகளில் விளையும் வெற்றிலையை போல் இல்லாமல் பிரத்யேக சுவையுடன் விளங்குகிறது. இதனால் கும்பகோணம் வெற்றிலைக்கு சந்தைகளில் எப்போதும் தனி மவுசு உண்டு. இதற்கு காரணம் அந்தப் பகுதியின் நீர் வளமே. கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான தட்ப வெப்ப நிலை,மண்வளம், தண்ணீர் வசதிகள் இருப்பதால் இங்கு பயிராகும் வெற்றிலைகள் இளம்பச்சை மற்றும் கரும்பச்சை நிறத்தில் காணப்படுகிறது.

காலையில் வெற்றிலை மென்றால்....

கரும்பச்சை நிறத்தில் உள்ள வெற்றிலைகள் ஆண் வெற்றிலைகள் என்றும் இளம்பச்சை நிறத்தில் உள்ள வெற்றிலைகள் பெண் வெற்றிலைகள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.  
வெற்றிலைப் பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டி பதியம் இட்டுதான் பயிர் செய்கிறார்கள். வெற்றிலை பயிராகும் நிலப்பகுதி வெற்றிலை கொடிக்கால் என அழைக்கப்படுகிறது. வெற்றிலை என்பது மிளகு வகையை சேர்ந்ததாகும். வெற்றிலை என்று நாம் சொன்னாலும் அதன் பெயர் காரணம் என்னவென்று தெரியுமா ? எல்லாக் கொடிகளும் பூ விடும், காய் காய்க்கும், ஆனால் வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது, வெறும் இலை மட்டும்தான் விடும் இதனால் வெற்று இலை என்பது சுருங்கி வெற்றிலை ஆகிவிட்டது. 

காலையில் வெற்றிலை மென்றால்....

இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது தமிழகத்தில் மரபாக உள்ளது. வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு என்பதால் சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. மதுரையில் விவசாயம் செழிக்க வெற்றிலை பிரிதிருவிழா நடத்தபடுகிறது. முன்பு எல்லாம் நம் முன்னோர்கள் நெல் அறுவடை முடிந்த வயலைப் பக்குவப்படுத்தி, புரட்டாசி மாதத்தில் பட்டம் தயாரித்து அகத்தி விதைகளைப் பயிரிடுவர்.

காலையில் வெற்றிலை மென்றால்....

பின்னர் கார்த்திகை மாதத்தில் அகத்தி செடிகள் சுமார் இரண்டு அல்லது மூன்று அடிகள் உயரத்தில் வளர்ந்திருக்கும் நிலையில் கொடிகளை நடுவர். சுமார் மூன்று கணுக்கள் உள்ள கொடிகளாக வெற்றிலைக் கொடிகளை வெட்டி வைத்துக்கொண்டு ஒரு கணு மண்ணில் புதையும் வகையில் நடுவர். 40 நாள்களுக்குப் பின்னர் வெற்றிலைக்கொடியை அருகிலுள்ள அகத்திச்செடியுடன் கோரையால் பிணைத்துக் கட்டுவர். வெற்றிலைக்கொடிக்கு அதிக வெயில் கூடாது. நிழல் பாங்கான பகுதி தான் அவசியம். மேலும் ஏன் அகத்தி செடிகளோடு வெற்றிலை கட்டுகின்றார்கள் என்றால் இலையுதிர் காலத்திலும் இலை உதிராதது அகத்தி. அதனால் தான் வெற்றிலை சாகுபடிக்கு நம் முன்னோர்கள் அகத்தியைத் தேர்வு செய்திருக்கின்றார்கள். 

காலையில் வெற்றிலை மென்றால்....

காலையில் பாக்கு அதிகமாகவும், வெற்றிலை, சுண்ணாம்பு குறைவாக சேர்த்து மென்றால் மலக்குற்றம் நீங்கி இரண்டு முதல் நான்கு முறை பேதியாகும். எனவே மந்தம் மலச்சிக்கல் உள்ளவர்கள் காலையில் பாக்கை அதிகமாகவும், வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் சேர்த்து கொள்ள வேண்டும். மதியம் சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் வெற்றிலை பாக்கு குறைவாகவும் மென்றால் நல்ல பசி உண்டாகும். 

இப்படி நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்த  வெற்றிலை சாகுபடியை விவசாயமாக அரசு இதுவரை அங்கீகரிக்கவே இல்லை. வாழை, நெல்லுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை வெற்றிலைக்குக் கொடுப்பது இல்லை தமிழக அரசு என விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, இதில் வெற்றிலை சாகுபடி எதைச் சார்ந்தது என்பதும் இது வரை தெரியவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் இன்றும் நம் ஊரில் வெற்றிலையை ஒரு முக்கிய பொருளாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP