டிசம்பர் மாதம் வந்தால் சென்னைக்கு ஏழரை தொடக்கமா ??

மனிதர்களுக்கு சனி பகவானால் ஏழரை வருவது போல, சென்னை மாவட்டத்திற்கு டிசம்பர் மாதம் வந்தாலே ஏழரை தொடங்கி விடுகிறது. இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2004ஆம் ஆண்டின் சுனாமி தொடங்கி, 2015ஆம் ஆண்டின் வெள்ளம் வரை அனைத்துமே டிசம்பர் மாதம் தான் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும், டிசம்பர் மாதம் தொடங்குவதற்கு முன்பே தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் வழங்கப்பட்டு விட்டது.
 | 

டிசம்பர் மாதம் வந்தால் சென்னைக்கு ஏழரை தொடக்கமா ??

மனிதர்களுக்கு சனி பகவானால் ஏழரை வருவது போல, சென்னை மாவட்டத்திற்கு டிசம்பர் மாதம் வந்தாலே ஏழரை தொடங்கி விடுகிறது. இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2004ஆம் ஆண்டின் சுனாமி தொடங்கி, 2015ஆம் ஆண்டின் வெள்ளம் வரை அனைத்துமே டிசம்பர் மாதம் தான் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும், டிசம்பர் மாதம் தொடங்குவதற்கு முன்பே தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் வழங்கப்பட்டு விட்டது.

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி எனப்படும் மாபெரும் கடல் சீற்றத்தினால், தமிழகம் அது வரை கண்டிராத அளவு உயிரிழப்பை காண வேண்டியிருந்தது. சென்னை உட்பட தமிழகத்தின் கரலோர மாவாட்டங்களில் ஏற்பட்ட இந்த சுனாமியால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் குடும்பங்களையும் இருப்பிடங்களையும் இழந்து நின்றனர்.

டிசம்பர் மாதம் வந்தால் சென்னைக்கு ஏழரை தொடக்கமா ??

அதை தொடர்ந்து, நான்கு வருடங்களுக்கு முன்பு, டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் தான் செம்பரம்பாக்கம் ஏரியினால் சென்னை மாவட்டமே நீரில் மூழ்கிய சம்பவமும் நிகழ்ந்தது. இந்த இரண்டு சம்பவங்களுமே எளிதில் மறக்கக்கூடிய விஷயங்கள் இல்லை. 2015ஆம் ஆண்டின் சென்னை வெள்ளத்திற்கு இந்தியாவின் மற்ற மாநிலங்கள் முதல் பிற நாடுகளே கைகொடுத்தன. இச்சம்பவத்தின் தாக்கம் இன்று வரை இருந்து கொண்டு தான் இருக்கிறது.

சுனாமி என்பது இயற்கையின் சீற்றம். அதை தடுப்பது யாராலும் முடியாது. மனிதர்களின் சிந்தனைகளுக்கும், கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்டது தான் இயற்கை சீற்றங்கள்.

 

டிசம்பர் மாதம் வந்தால் சென்னைக்கு ஏழரை தொடக்கமா ??

ஆனால் சென்னை வெள்ளம் அப்படியில்லை. மழைக்காலம் என்பதால் மழை பெய்தது. ஆனால் அதன் காரணமாகவா சென்னையே நீரில் மூழ்கியது ? இல்லை, மீடியாக்களும், பிற சமூக வலைதளங்களும் குறிப்பிடுவது போல பொது பணித்துறை நிர்வாகிகளின் அலட்சியமா இதற்கான காரணம் ??

சென்னை வெள்ளத்திற்கு முக்கிய காரணம் அடையார் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளே. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மணிமங்களம் கிராமத்தில் இருக்கும் ஓர் தொட்டியில் பிறக்கும் அடையார் ஏரி செம்பரம்பாக்கத்தின் நீரினால் தான் ஏரியாகவே உருவெடுக்கிறது. பின்பு சென்னை வழியாக பயனிக்கும் இந்த ஏரி, வங்க கடலில் சென்று கலக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரி, சென்னை மக்கள் உபயோகிக்கும் நீரினை வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று. இந்த ஏரியில், அதன் அளவை தாண்டிய நீர் நிரம்பும்போது, அளவை மிஞ்சிய நீர் அடையார் ஏரியுடன் கலக்கப்படும். அதிகபட்சமாக 24 அடி நீரை தேக்கி வைக்கும் இந்த ஏரியின் மொத்த நிரப்பளவு 3645 மில்லியன் க்யூபிக் அடி.

டிசம்பர் மாதம் வந்தால் சென்னைக்கு ஏழரை தொடக்கமா ??

மழை காலங்களில் இந்த ஏரியில் நீரின் அளவு அதிகரிக்கும் போது அவை அடையார் ஏரிக்கு திறந்துவிடப்படும். ஆனால், அடையார் ஏரியின் அளவை தாண்டியும் நீர் திறந்து விடப்பட்டால், அடுத்துள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மக்களை சிரமத்திற்குள்ளாக்கும். இவை தான் சென்னை வெள்ளத்திற்கான முக்கிய காரணம்.

டிசம்பர் மாதம் வந்தால் சென்னைக்கு ஏழரை தொடக்கமா ??

எனினும், இந்த ஏரிகளின் நீரை வெள்ளத்திற்கான ஓர் காரணமாக குறிப்பிட்டாலும், அடிப்படை காரணம் மழைதான் என்பது மறுக்க முடியாத உண்மை. 

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. 

வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை மாவட்டத்திலும், அடுத்த 2 நாட்களுக்கு கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கனமழை முதல் பலத்த கனமழைக்கு வாய்ப்புள்ள நிலையில், 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லட்சத்தீவு பகுதியில் நாளை உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், தமிழகத்திற்கு பாதிப்பில்லை என்று கூறப்பட்டாலும், கடலூர் முதல் திருநெல்வேலி மாவட்டம் வரையுள்ள, 10 மாவட்டங்களுக்கு, இன்றுஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள  வானிலை ஆய்வு மையம், சென்னையிலும் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டிசம்பர் மாதம் என்றாலே இயற்கையின் சீற்றங்களில் சிக்க தவிக்கும் சென்னை மாவட்டத்தில், தற்போதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சென்னை என்பது தமிழகத்தின் தலைநகரம் என்பதை விட தமிழகத்தின் உயிர் நாடி என்பதே பொறுத்தமான சொல். இந்நிலையில் சென்னையில் ஏற்படும் அனைத்தும் தமிழகத்தின் எல்லை வரை பாதிப்பை உண்டாக்கும். 

மழை பெய்வது நல்ல விஷயம் தான். ஆனால் அது இயற்கையின் சீற்றமாக உருவெடுக்கும் போது தான் அழிவுகள் ஏற்படுகிறது. பலமுறை சென்னையை பாதிப்புக்குள்ளாக்கியிருக்கும் இயற்கையின் சீற்றம் தற்போதும் தலை தூக்க துவங்கியுள்ளதா என்பதே இந்நேர கேள்வி. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP