”புரட்சிப்புயலை” புரட்டி எடுக்கும் சூறாவளி...

புயல் வீசினால் அடுத்தவர்களுக்கு தான் சேதம் ஏற்படும். ஆனால் உலகிலேயே மற்றவர்களால் புரட்டி புரட்டி அடிக்கப்படும் ஒரே புயல் புரட்சிபுயல் தான்.
 | 

”புரட்சிப்புயலை” புரட்டி எடுக்கும் சூறாவளி...

புயல் வீசினால் அடுத்தவர்களுக்கு தான் சேதம் ஏற்படும். ஆனால் உலகிலேயே மற்றவர்களால் புரட்டி புரட்டி அடிக்கப்படும் ஒரே புயல் புரட்சிபுயல் தான்.

1965ம் ஆண்டு கலிங்கிப்பட்டிக்கு அருகே உள்ள திருவேங்கடத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் கன்னிப் பேச்சை பேசிய வைகோவை நம்பி இன்றளவும் தொண்டர்கள் இருப்பதற்கு அவரின் பேச்சுதான் காரணம்.
”புரட்சிப்புயலை” புரட்டி எடுக்கும் சூறாவளி...
திமுகவில் படிப்படியாக ஏறி மாநிலங்கள் அவை உறுப்பினர் என்ற உச்சத்தை எட்டினார் வைகோ. திமுகவின் ராணுவமாக தொண்டர் படையை உருவாக்கி அதை கட்டமைத்தில் வைகோவிற்கு மட்டுமே பங்குண்டு. 1990களில் கருணாநிதிக்கு அடுத்து வைகோதான் என்ற நிலை உருவானதும் சிக்கல் ஏற்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி தான் திட்டமிட்டு வளர்த்த ஸ்டாலினுக்கு நேரடிப் போட்டியாக  வைகோ உருவானதை உணர்ந்து 1991ம் ஆண்டு திமுகவின் செயற்குழுவை கூட்டி வைகோவை வெளியேற்ற பிள்ளையார் சுழி போட்டார். அந்த கூட்டத்தில் வைகோவின் தன்னிலை விளக்கம் கருணாநிதியின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டது.
”புரட்சிப்புயலை” புரட்டி எடுக்கும் சூறாவளி...
1993, அக். 3ம் தேதி அன்று தமிழக தலைமை செயலாளர் கருணாநிதிக்கு  ஒரு கடிதம் அனுப்புகிறார். அதில் எல்டிடியி உதவியுடன் தனது ஆதாயத்திற்காக கருணாநிதியை கொல்ல வைகோ திட்டமிட்டு இருப்பதாகவும், அந்த மத்திய அரசின் அதிகாரபூர்வமற்ற தகவலை முதல்வர் உத்தரவின் பேரில் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தது. தன் மகன், தம்பி என்று வாஞ்சையோடு உறவாடிய கருணாநிதி ஒரு  அதிகாரப்பூர்வமற்ற தகவலை அடிப்படையாகக் கொண்டு, வைகோவின் மறுப்பையும் மீறி அவரை திமுகவை விட்டு நீக்குகிறார். அவரை ஆதரித்த 9 மாவட்ட செயலாளர்கள், 400க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களை கட்சியை விட்டு நீக்கினார்.

”புரட்சிப்புயலை” புரட்டி எடுக்கும் சூறாவளி...

இதனால் அதிர்ச்சியடைந்த நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவ பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியபுரம் வீரப்பன் என்று ஒவ்வொருவராக தீக்குளித்து இறந்தனர். அவர்களின் இறுதி சடங்கில் வைகோ கண்ணீர் விட்டு கதறினார். திமுக, அதிமுகவிற்கு மாற்றாக அவர்கள் பாசறையில் இருந்தே ஒருவர் புறப்பட்டுள்ளார் என பத்திரிக்கைகள் வைகோவை தாங்கி பிடித்தன. அடுத்து 1996ல் மதிமுக, மார்க்சிஸ்ட், ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டது. ஆனால் ரஜினி வாய்ஸ், மதிமுகவிற்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்துவற்கு பதிலாக சரிவை தொடங்கிவைத்தது.

வைகோவை நம்பி வந்த பல நிர்வாகிகள் அவரை விட்டு திமுகவிற்கே திரும்பினர். ஏற்றிய கற்பூரம் போல தொடர்ந்து கட்சி கரைந்து கொண்டே இருந்தது.

இதன் காரணமாக மதிமுக, பாஜவுடன் கூட்டணி அமைத்தது. பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையிலும், மதிமுக மட்டும் அந்த கூட்டணியில் தொடர்ந்தது.

அந்த காலகட்டத்தில் திமுக பாஜ கூட்டணியில் இருந்தது. இந்த கூட்டணியியே 2001ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலிலும் தொடர்ந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டு திருச்சியில் திமுகவின் மாநாடு அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடந்தன. மாநாட்டின் முகப்பில் வைகோவிற்கு ஆளுயர கட்டவுட் வைக்கப்பட்டது. மாநாட்டிற்கு வைகோ வருவார் எனற நிலையில் மதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு மட்டுமே வெளிவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த திமுக தொண்டர்கள் மாநாட்டின் முகப்பில் இருந்த வைகோவின் கட்டவுட்டை அடித்து நொறுக்கினர். இந்த கூட்டணி திடீர் பிளவால் திமுகவும் தோற்றது. வேறு கூட்டணியில் சேர வாய்ப்பு இல்லாத காரணத்தால் மதிமுக தனித்து போட்டியிட்டு தோல்வியை தந்தது. பொற்கால ஆட்சியை தொடர முடியாமல் அன்று வைகோ கவிழ்த்துவிட்டார். அதன் பாதிப்பை உள்ளத்தில் அடக்கி கொண்ட திமுக தற்போது தன்பங்கிற்கு வைகோவை பாடாய் படுத்த தொடங்கி இருப்பதைத்தான் சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன.

ஸ்டாலினுக்கு எதிராக வந்துவிடுவார் என்று வெளியேற்றப்பட்ட வைகோவை திமுக ஏற்க வில்லை. அதை அறிந்து கொள்ளாத அவரோ ஸ்டாலினை வானளவாக புகழ்கிறார். கூட்டத்திற்கு கூட்டம் ஸ்டாலினை முதல்வர் ஆக்குவதே தன் கடமை என்று பேசி திமுகவினரை புல்லறிக்க வைக்கிறார் . ஆனாலும் ஸ்டாலின் உட்பட திமுக நிர்வாகிகள் இவரை நம்பவில்லை என்பதை திமுக பொருளாளர் துரைமுருகன் பேச்சு வெளிப்படுத்தி விட்டது. இந்த விஷயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்திருமாவளவன் தெளிவாகவே உள்ளார். அவர் சமீபத்திய தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அவர் நாங்கள் திமுகவின் தோழமை கட்சிதான், கூட்டணி கட்சியாக மாறினால் நல்லது; அதை திமுக தான் கூற வேண்டும் தன் நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறினார். ஆனால் வைகோ எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் கங்கா சந்திரமுகியாக மாறியது போல கூட்டணிக்கட்சியாகவே மாறிவிட்டார்.

”புரட்சிப்புயலை” புரட்டி எடுக்கும் சூறாவளி...

இந்த சூழ்நிலையில்  தான் திமுக பொருளாளர் துரைமுருகன் காங்கிரஸ், முஸ்லீம் லீக் மடடும் தான் கூட்டணி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக போன்றவை தோழமை கட்சிகள் தான். கூட்டணி வேறு, நண்பர்கள் வேறு, கடைசி நேரத்தில் கூட்டணி மறலாம் என்று போட்டு உடைத்து விட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத வைகோ தற்போது உண்மையில் ஆடித்தான் போய்விட்டார். துரை முருகன் கூறியதை ஸ்டாலின் சொல்லட்டும், அவர்  தான் கட்சித் தலைவர் என்று பேட்டியளிக்கிறார்.

”புரட்சிப்புயலை” புரட்டி எடுக்கும் சூறாவளி...

அதே நேரத்தில் ஏதுக்கும் இருக்கட்டும் என அதிமுக அமைச்சர்கள், அதிகாரிகளை வைகோ பாராட்டி அக்கட்சியில் கூட்டணிக்கு துண்டு போட்டார். அதையும் தன் பேட்டியில் வெளிப்படையாக கூறிய தமிழிசை வைகோவின் நிலைப்பாட்டிற்கு தொடக்கத்திலேயே கேட்டு போட்டுவிட்டார். திமுக தலைவர் ஸ்டாலினும், துரைமுருகனின் பேச்சுக்கு கண்டணம் தெரிவிக்காமல், வைகோ அறிவித்துள்ள கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் வைகோ அதிமுக, திமுக, தனித்து போட்டி என்ற மூன்று தலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கிறனர்.

இவ்வளவு முன்பே கூட்டணி சர்ச்சை எழுந்தும் கூட வைகோவால் கூட்டணி குறித்து முடிவை எடுக்க முடியவில்லை என்றால்,  அது அவருக்கு பலத்த அடியாக அமையும். அவருக்கென்ன கூறிவிட்டார் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட மதிமுக.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP