பேருக்கு ஆசைப்படலாம் பேராசைபடலாமா மேடம்?

இரட்டை இலக்க சீட்டு கேட்ட பாஜகவே யதார்த்ததை புரிந்து கொண்டு 5 இடங்களுக்கு ஒப்புக் கொண்டது. இதில் இருந்தாவது பிரமலதா பாடம் கற்க வேண்டும். பேருக்கு ஆசை பட வேண்டியவர்கள் பேராசைப்பட்டால் பெரு நஷ்டம் தான் ஏற்படும். தேமுதிக பெறப்போவது எதை?
 | 

பேருக்கு ஆசைப்படலாம் பேராசைபடலாமா மேடம்?

ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய ஜாம்பவான்கள் இருந்த போதே அவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பு வளர்ந்தது. தங்களை காப்பாற்ற மேசியா  பிறக்கமாட்டாரா என்று ஏங்கி தவித்த போது கேப்டன் களம் இறங்கினார். 

மக்கள் உணர்வுகளை தட்டி எழுப்பியது அவரின் யதார்த்தமான பேச்சு. கட்சி தொடங்குவதற்கு முன்பாக அவர் செய்யத சுற்றுப்பயணம் பெயருக்கு ஏற்றவிதமா மக்களை காந்தமாக இழுத்து வெற்றியை தேடி தந்தது. 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்டாலும் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். அவர் கட்சி 10 சதவீத வாக்குகளை அள்ளியது. கட்சியில் யாரும் தெரிந்த முகம் இல்லாவிட்டால் கூட ஹீரோவிற்காக அந்த படம் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்டு மீண்டும் 10.3 சதவீத ஓட்டுகளை பெற்றது. இதனால் தமிழகத்திற்கு மாற்றுத்தலைவர் ஒருவர் கிடைத்து விட்டார் என்ற நினைப்பு ஏற்பட்டது. 

அதிமுக, திமுகவை திட்டினாலும், அந்த கட்சிகளுக்கு மாற்று உருவாகிவிடக் கூடாது என்று எண்ணும் ஊடகங்கள், விஜயகாந்த் செய்த சின்ன சின்ன விஷயங்களை கூட பெரிது படுத்தி மீண்டும் மீண்டும் ஒளிபரப்பு செய்து ஒரு தலைவனை காமெடியனாக மாற்றிவிட்டது.  தொடர்ந்து இந்த காட்சிகளை பார்த்த மக்கள் இவர் தலைவரா காமெடியனா என்பதை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தனர். 

அதே நேரத்தில் கட்சி தொடங்கி 5 ஆண்டுகள் கடந்து விட்டதால் நிர்வாகிகளுக்கு பதவி ஆசை ஏற்பட்டது. அவர்கள் கட்சியின் அடிப்படை கொள்கையான தனித்து போட்டி என்பதில் இருந்து நழுவ முடிவு செய்தார்கள். அதற்கு ஏற்ப அதிமுகவுடன் 2011ம் ஆண்டு சட்டபைத் தேர்தலில் கூட்டணி அமைத்து தேமுதிக சந்தித்தது. 

இதில் திமுக எதிர்கட்சி அந்தஸ்தை இழந்து அந்த இடத்தை தேமுதிக பிடித்தது. அதன் பின்னர் சட்டசபையிலேய நாக்கை துருத்தி ஜெயலலிதாவிடம் விஜயகாந்த் கெத்து காட்ட, கூட்டணி பனால். தனித்து போட்டி என்ற நிலைப்பாட்டை தேமுதிக கைவிட்டது. 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் 14 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக வெறும் 5.1 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பெற்றது. அதுவும் கடந்த சட்டசபைத் தேர்தலில் 2.2 சதவீதமாக குறைந்துவிட்டது. 

இந்த பின்னணியில் தான் 2019ம் ஆண்டு லோக்சபா .தேர்தலை தேமுதிக சந்திக்கிறது. தேமுதிகவின் ஆணிவேர், சல்லி வேர் உட்பட இன்ன பிற வேர்களாக திகழும் விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாத நிலையில் உள்ளார். கலைஞர் பாணியில் அவ்வப்போது கடிதமாவது எழுதியிருந்தால் இப்போது விஜயகாந்த் பெயரில் கடிதமாவது வெளியிட்டு இருக்கலாம். இப்போதைய நிலையில் கேப்டன் டிவியில் தோன்றத்தான் முடியும். இந்த தேர்தலை நடத்த போவது சுதீஷ், பிரேமலலதா, விஜயபிரபாகரன் ஆகியோர் தான். அதாவது கேப்டன் குடும்பம். 

இந்த குடும்பம் பிரச்சாரம் செய்தால் மக்கள் ஏற்பார்களாக என்பது மில்லியன் டாலர் கேள்வி. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜ கூட்டணியில் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றி சுற்றி பிரச்சாரம் செய்து கூட ஒரு சீட்டு கூட வெற்றி பெற இயலவில்லை. பாமக கூட இவர்களுடன் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. 

தேமுதிக தன் தகுதிக்கு ஏற்ப ஒரு சில சீட்டுக்களை பெற்றுக் கொண்டு அங்கு முழுமையான கவனத்தை செலுத்தி வெற்றி பெற வேணடும். அதை விடுத்து அகல உழுவதைப் போல பல இடங்களை கேட்டு பெற்றால், கேட்டு கூட்டணியை முறித்துக் கொண்டால் அதிமுகவின் தோல்விக்கு வேண்டுமானால் அது பலன் கொடுக்குமே தவிர்த்து தேமுதிகவிற்கு எந்த உதவியும் செய்யப் போவில்லை. 

இரட்டை இலக்க சீட்டு கேட்ட பாஜகவே யதார்த்ததை புரிந்து கொண்டு 5 இடங்களுக்கு ஒப்புக் கொண்டது. இதில் இருந்தாவது பிரமலதா பாடம் கற்க வேண்டும். பேருக்கு ஆசை பட வேண்டியவர்கள் பேராசைப்பட்டால் பெரு நஷ்டம் தான் ஏற்படும். தேமுதிக பெறப்போவது எதை? 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP