வாயை அடக்குங்க வைகோ அண்ணே!

நல்லவேளை, இவர் வார்த்தைகளுக்கு நீதிபதி கடுப்பாகவில்லை. நான் குறிப்பிட்டது ஒரு ஆண்டு அல்ல, தவறுதலாக டைப் செய்யப்பட்டது. நான் 11 ஆண்டுகள் தான் சொன்னேன் என்று மாற்றி பேசியிருந்தால், எதுவும் செய்திருக்க முடியாது. ராஜ்யசபா எம்பி பதவிக்கும் சங்குதான். நல்லவேலை அப்படி எதுவும் நடக்கவில்லை.
 | 

வாயை அடக்குங்க வைகோ அண்ணே!

லோக்சபா தேர்தலுக்கு முன்பு வரை, வைகோ சேரும் கூட்டணி வெற்றி பெறாது என்ற நம்பிக்கை வலுவாக இருந்தது. அவ்வளவு ராசியான வைகோவிற்கு, எதிரி அவர் தான். மோகினி அவதாரம் எடுத்த  நாராயணன் சூழ்ச்சியை அறியாமல் தன் தலையில் தானே கையை வைத்துக் கொண்டு அழிந்த பத்மாசுரனுக்கு இணையானவர் வைகோ. வாயாலே பிறந்து வாயாலே வளர்ந்து வாயாலே வாழ்ந்தவர் வைகோ என்று பாராட்டும் வகையில் வாழ்பவர் அவர்.

அவர் குரல் பாராளுமன்றத்தில் ஒளிக்க வேண்டும் என்று, அவரை விட மதிமுகவினரும், தமிழ் ஆர்வலர்கள் என்று கூறுபவர்களும், தமிழகத்தில் அதிகம். ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் தானே அதை தட்டிவிட்டுக் கொள்ளும் பண்பாளர் வைகோ.

மத்திய அமைச்சர் பதவிக்கான வாய்ப்பு கிடைத்த போது, அதை ஏற்காமல் தன் கட்சியினருக்கு பெற்றுத்தந்தார். பதவிக்காலம் முடிந்த பின்னர், அவர்கள் திமுகவில் இணைந்து வைகோ முகத்தில் கரியை பூசினார்கள். வாஜ்பாய் மற்றும் ஒரு முறை வாய்ப்பு கொடுத்த போது, அதை வேண்டாம் என்று மறுத்தவர் அவர். 

அரசியல் கட்சியின் அடிமட்ட தொண்டன் கூட, கவுன்சிலர் பதவிக்கு கூட ஆசைப்படும் நாட்களில், கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தும், வைகோ பதவி ஆசையில்லாமல் இருப்பதை நினைத்து அழுவதா, அவரைக் கூட நம்பி மதிமுகவில் இருக்கும் மிச்ச சொச்ச தொண்டர்களை நினைத்து அழுவதா என்று புரியவில்லை.

இந்த சூழ்நிலையில், தற்போது திமுக கூட்டணியில் வைகோவிற்கு ராஜ்யசபா உறுப்பினராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் விதியோ தேசத் துரோக வழக்கு வடிவில் விளையாடிவிட்டது.

கடந்த, 2009ம் ஆண்டு சென்னை ராணி சீதை மற்றத்தில், ‛நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட வைகோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் வழக்கம் போல பேசினார். இது தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குதொடர்ந்தனர். 

அப்போது ஆட்சியில் இருந்தது திமுக. அதன் கூட்டணியில் இருந்த, காங்கிரஸ் கட்சியின் துண்டுதல் தான் இந்த வழக்கிற்கு காரணம் என்று கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் வழக்கை நடத்தியது அதிமுக. தற்போது திமுக, காங்கிரஸ் கூட்டணியில் வைகோவும் இடம் பெற்றுள்ளார். அதிமுகவும் வைகோ மீது மரியாதை கொண்டவர்கள் தான்.

2009ம் ஆண்டு தொடங்கிய வழக்கில் ,2017ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி வைகோ சரண் அடைகிறார். சுமார் 10 ஆண்டுகள் திமுக, அதிமுக ஆட்சி இருந்தது. முயற்சி செய்து வழக்கை வாபஸ் வாங்கி இருக்கலாம். ஆனால் அதை அவர்களும் செய்யவில்லை, இவரும் வலியுறுத்தியதாக தெரியவில்லை. 

இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 5ம் தேதி வெளியாகி இருக்கிறது. இந்த வழக்கு நேற்று சென்னை மாவட்ட கூடுதல் செஷசன்ஸ் கோர்ட்டில் நடந்தது. நேற்று வழக்கின் தீர்ப்பு நாள். நீதிபதி சாந்தி முன் வைகோ ஆஜரானார். உங்களை குற்றவாளி என்று தீர்ப்பளிக்கிறேன். நீங்கள் ஏதாவது கூறுகிறீர்களா என்று கேட்டார். 

அதற்கு வைகோ தண்டனையை இன்றே அறிவித்துவிட்டால் நல்லது என்றார்.( ராஜ்யசபா எம்பி தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்ய வேண்டியது, அவர் நினைவில் இருந்ததால் அப்படி கூறியிருக்கலாம்.) அதன் பின்னர் நீதிபதி ஓராண்டு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். நீதிபதி வைகோவிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்று கூட கூறி, அரசியலில் புதிய சர்ச்சை தொடங்கி இருக்கலாம் அவர் அவ்வாறு செய்யவில்லை.

அதன் பின்னர் தீர்ப்பு நகலை வாங்கி பார்த்த போது, அதில் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று இருந்தது. அதில் என்ன இருந்தால் என்ன, நமக்கு  ஒரு ஆண்டு தானே தண்டனை என்று மற்றவர்கள் பேசாமல் நீதிபதியை வணங்கிவிட்டு வெளியே வந்து இருப்பார்கள். 

ஆனால் நம் வைகோவின் வாய் சும்மா இருக்குமா, குறைந்த பட்ச தண்டனை கொடுங்கள் என்று நான் கேட்கவில்லை, நான் சொல்லாத வார்த்தையை தீர்ப்பில் குறிப்பிட்டு இருப்பது ஏற்புடையது இல்லை. எவ்வளவு தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள் ஏற்றுக் கொள்கிறேன், ஆயுள் தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள் ஏற்றுக் கொள்கிறேன் என்று ஜம்பமாக பேசி இருக்கிறார்.

நல்லவேளை, இவர் வார்த்தைகளுக்கு நீதிபதி கடுப்பாகவில்லை. நான் குறிப்பிட்டது ஒரு ஆண்டு அல்ல, தவறுதலாக டைப் செய்யப்பட்டது. நான் 11 ஆண்டுகள் தான் சொன்னேன் என்று மாற்றி பேசியிருந்தால், எதுவும் செய்திருக்க முடியாது. ராஜ்யசபா எம்பி பதவிக்கும் சங்குதான். நல்லவேலை அப்படி எதுவும் நடக்கவில்லை.

திமுகவில் வைகோ இருந்த போது, 3 முறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். தற்போதும் கூட, திமுக ஆதரவில் தான் அந்த பதவிக்குள் செல்கிறார். இனி வரும் காலகட்டத்திலாவது, அவர் அரசியலில் ஜொலிக்க வேண்டும். அதற்கு ஜெயலலிதா பக்குவப்பட்டுவிட்டேன் என்று கூறினாரே, அதைப் போல வைகோவும் பக்குவப்பட வேண்டும். அதற்கு அவர் செய்ய வேண்டிய மிக மிக கடினமான விஷயம், வாயை அடக்குவது தான். அதில் அவர் எந்த அளவிற்கு வெற்றி பெறுவார் என்பதை காலம் தான் காட்டும்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP