Logo

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம்: நாம் கற்றுக்கொள்ள் வேண்டியது என்ன?

சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்ஐடி தொற்று உள்ள ரத்தம் எற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? எப்படி தவிர்க்கலாம்? நடைமுறைச் சிக்கல்கள் என்ன? என்பதை படிக்க க்ளிக் செய்யவும்...
 | 

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம்: நாம் கற்றுக்கொள்ள் வேண்டியது என்ன?

சோசியல் மீடியா வந்த பிறகு, ரத்த தானம் என்பது அதிகமாகி விட்டது. ஒரு பக்கம் நல்ல விழிப்புணர்வு, இரண்டாவது விரைவில் பரவுதல், மூன்றாவது ரத்த தானம் செய்தேன் என்று ஒரு பதிவு போட்டுக் கொள்ளும் போது, என்னால் முடிந்ததை இந்தச் சமூகத்திற்குச் செய்கிறேன் என்று காட்டிக் கொள்ளும் ஒரு மன நிறைவு. உண்மையிலேயே இவை யாவும் நல்லவையே. இப்படியொருவர் பிறருக்கு உதவ ரத்த தானம் கொடுத்திருக்கிறார். அது வினையாக முடிந்திருக்கிறது. என்ன நடந்தது? எப்படி தவிர்க்கலாம்? நடைமுறைச் சிக்கல்கள் என்ன?

என்ன நடந்தது? 

ரத்தம் கொடுத்த ரமேஷ் ஏற்கனவே 2016ல் ஒரு முறை கொடுத்திருக்கிறார். அப்பொழுதே ஹெச்.ஐ.வி இருப்பதை உறுதி செய்த மருத்துவமனை, உடனடியாக ரமேஷ்-ஐ ஃபோன் பண்ணி அழைத்திருக்கிறது. உங்களுக்கு ஹெச் ஐ வி இருப்பதாகச் சொல்லிக் கூப்பிட்டால் பலர் வர மாட்டார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்வர்.

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம்: நாம் கற்றுக்கொள்ள் வேண்டியது என்ன?

வேறு சிலரோ நானே சாகிறேன் என்ற விரக்தியில் இன்னும் சிலருக்குப் பரப்பி விட்டுச் சாகிறேன் என்று விபரீத முடிவு எடுக்கலாம் என்பதால், ரத்த தானம் பற்றி பேச, மருத்துவ விழிப்புணர்வுக் கூட்டம் என்று ஏதேனும் சொல்லி அழைப்பார்கள்  ரமேஷ் தான் பெங்களூரில் இருப்பதாகவும் ஊருக்கு வந்ததும் வந்து பார்க்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு ஓரிரு முறை கூப்பிட்டுப் பார்த்து விட்டு மருத்துவமனையில் விட்டு விட்டார்கள்.  

ரமேஷ்க்கு தான் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட விசயம் தெரியாமல் கடந்த மாதம் தன் உறவினர் ஒருவருக்கு ரத்தம் தேவைப்பட்டதால் மருத்துவமனையில் வந்து கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார். 

ஒவ்வொரு தாலுகாவிற்கும் இருக்கும் அரசுமருத்துவமனையில், ரத்தப் பரிசோதனை மையம் முழு அளவில் நன்றாகத் தான் செயல்பட்டு வருகிறது. நன்றாக என்பது முழு வசதியையும் குறிப்பிடுவது. அதில் வேலை செய்யும் பணியாளர்களைச் சொல்லவில்லை.  அரசு மருத்துவமனையைப் பொருத்தவரை எல்லாருக்கும் தேவையான ரத்தம் நிச்சியம் சேமிப்புக் கிடங்கில் வைத்திருப்பார்கள்.

ஆனாலும், என்ன ரத்தம் தேவையோ, அதை நோயாளிகளின் மூலமாகத் தானமாகப் பெற முயற்சிப்பார்கள். அதே வகை ரத்தம் இல்லாவிட்டாலும், வேறு குரூப் ரத்தமாவது யாரையாவது கொடுக்கச் சொல்லிக் கேட்டுப் பெற முயற்சிப்பார்கள். இது போல் வாங்கும் ரத்தம் வேறொருவருக்கு பயன்படும் என்பதால், அப்படி வாங்கிச் சேமித்த ரத்தத்தை தான் முழுமையாகச் சோதிக்காமல் சேமித்து வைத்திருக்கின்றனர். அந்த டீம் யாரென்று பிடித்து, சட்டப்படி நடவடிக்கை எடுத்து ஒட்டு மொத்தமாகத் தூக்கினால் மட்டுமே அடுத்ததாக இது போன்ற அலட்சியம் இல்லாமல் இருப்பார்கள். 

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம்: நாம் கற்றுக்கொள்ள் வேண்டியது என்ன?

இப்படியான கடுமையான நடவடிக்கைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் என்ன செய்ய வேண்டும்?

ஹெச்.ஐ.வி யோ, வேறு ஏதேனும் பாதிப்போ இருந்தால் நிச்சியம் அரசு மருத்துவமனையிலிருந்து அழைப்பு வரும். அவர்கள் அழைத்தால் அலட்சியமாகப் பேசாமல், ஏதோ பெரிய தவறு நடந்து விட்டதோ என்ற பயமோ பதட்டமோ கொள்ளாமல், முடிந்தளவு நேரம் ஒதுக்கி உடனே நேரில் சென்று என்ன ஏது என்று விசாரித்து வரவும். ஏனெனில் சில சமயம், நம் ரத்த உறவுகள் பற்றிய செய்தியை நேரடியாக அவர்களிடம் சொல்லாமல் நம்மிடம் சொல்லி வழி நடத்த முனையலாம். அல்லது மிக முக்கியமானதொரு விழிப்புணர்வினைக் கொடுக்க நீங்கள் பயன்படலாம். சமூக அக்கறை கொண்ட நாம், இப்பொழுது நடந்த இந்த அசம்பாவிதத்தைப் பாடமாகக் கொண்டு பிறரை வழிநடத்தலாம். 

நடந்த சம்பவத்தைப் பாடமாகக் கொண்டு அதை நம் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்வதும், சம்பவத்தை அரசியல் மாச்சர்யங்களுக்காகப் பயன்படுத்திக் கூச்சல் போட்டு விட்டு அடுத்த பத்து நாளில் வேறு பிரச்சினையைக் கையில் எடுப்பதும், அந்தந்த சமூகத்தின் ஆர்வலர்களைப் பொருத்து அமையும். நம்ம சமூகம் எப்படி…?

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP