ஹிந்து அமைப்புகள் உதவ வேண்டும்!

''இந்தியா மற்றும் உலகளாவிய ஹிந்து அமைப்புகள் எங்களுக்கு உதவினால் மட்டுமே இலங்கையில அரங்கேறி வரும், மத மாற்ற நிகழ்வுகளை தடுத்து நிறுத்திட முடியும்,'' என, இலங்கை தமிழ் எம்.பி., யோகேஷ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 | 

ஹிந்து அமைப்புகள் உதவ வேண்டும்!

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் மேலும்பேசியதாவது : 

இலங்கையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பகுதிகளில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும், தொழிற்சாலைகள் நிறுவி, வேலை வாய்ப்பை உருவாக்கவும் சீனா பெரு முயற்சி மேற்கொண்டுள்ளது.

அவர்கள் அதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக எங்களை பயன்படுத்தலாம் என நினைக்கின்றனர். இந்தியாவுக்கும், அங்கு வசிக்கும் தமிழர்களுக்கும் எதிராக செயல்பட நாங்கள் விரும்பவில்லை. எனவே சீனாவின் உதவிகளை நாங்கள் நிராகரித்துவிட்டோம். நாங்கள் இப்படி ஒரு நிலைப்பாட்டில் இருக்கும்போது கூட இந்தியாவின் சார்பில் எங்களுக்கு போதிய அளவில் உதவிகள் செய்யப்படுவதில்லை.

இந்தியா அரசின் சார்பில் செய்யப்படும் உதவிகள் அனைத்தும் சிங்களர்கள் தலைமையிலான அரசு வசம் ஒப்படைக்கப்படுவதால் அவை எங்களை முழுவதும் வந்தடைவதில்லை. அரபு நாடுகளில் இருந்தோ அல்லது வேறு சில கிறிஸ்தவ நாடுகளில் இருந்தோ வரும் உதவிகள் நேரடியாக அந்த மதத்தை சார்ந்திருக்கும் எம்பிக்களிடம் செல்வதால், கிறிஸ்தவர்களும்,முஸ்லிம்களும் அதன் பயனை  முழு பயன்களையும் அடைகின்றனர்.

ஆனால், 2009இல் நடந்த இனப்படுகொலையில் உயிரிழந்தோர் 90 சதவீதம் பேர் ஹிந்துக்களே. போருக்கு பின்னரும் அதிகம் பாதிக்கப்பட்டவர்களும் ஹிந்துக்களே. அப்படி இருந்தும்,இந்தியா மட்டுமின்றி, உலகளாவிய ஹிந்து அமைப்புகளிடம் இருந்து எங்களுக்கு போதிய உதவிகள் கிடைக்கவில்லை.

தமிழகத்தைச் சேர்ந்த ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் போன்ற ஒரு சிலர் எங்களுக்கு ஆதரவாக செய்லபடுவது மட்டுமே இலங்கையில் வசிக்கும் தமிழர்களாகிய எங்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

சிங்களர்களின் ஆதிக்கம் நிறைந்த ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட ஹிந்து மதத்தைச் சேர்ந்த தமிழர்கள், வேற்றுமாதங்களுக்கு  மதம் மாறுவதும்  அதிகரித்துள்ளது. குறிப்பாக கிறிஸ்தவ, இஸ்லாம் மத தலைவர்கள், பாதிக்கப்பட்ட தமிழ் ஹிந்துகளுக்கு தொடர்ந்து நிதி,வேலைவாய்ப்பு  ஆகியவற்றை வழங்கி வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் உலகளாவிய ஹிந்து அமைப்புகள் எங்களுக்கு உதவினால் மட்டுமே இலங்கையில அரங்கேறி வரும், மத மாற்ற நிகழ்வுகளை தடுத்து நிறுத்திட முடியும்

இவ்வாறு அவர் பேசினார்.

பேட்டி தொடரும்.........

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP