மருதமலை முருகன் கோவில் சிறப்பம்சங்கள்

இந்துக் கடவுள் முருகனுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மருதமலை முருகன் கோவிலின் சிறப்புகள்.. பஞ்சமுக விநாயகர், வலம்புரி விநாயகர் கோவில், ஐந்துமுக விநாயகர்...
 | 

மருதமலை முருகன் கோவில் சிறப்பம்சங்கள்

தமிழ்நாடு கோயம்புத்தூர் மாவட்டம், சோமையம் பாளையம் ஊராட்சியில்  உள்ள மருதமலையின் மீது அமைந்துள்ள கோவில் தான் மருதமலை கோவில். இம்மலை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைச் சேர்ந்தது.  இது மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவில் இந்துக் கடவுள் முருகனுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டது. மலை உச்சியில் இந்தக் கோயில் அமைந்துள்ளதால் மருதமலை என்று அழைக்கப்படுகிறது.

இக்கோயில் முற்காலத்தில் கொங்கு வேட்டுவ கவுண்டர் மன்னர்களின் சொத்தாக விளங்கியது. மருதமலை முருகன் கோவில் அறுபடைவீடு ஆலயங்களுக்கு அடுத்த படியான முக்கியத்துவத்தை பெறுகிறது. மருதமலை முருகன் கோவிலை பக்தர்கள்  ஏழாவது படைவீடு என்று நம்புகின்றனர். இந்தக் கோயில் புராதனமானது. இக்கோவில்12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக தகவல்கள் உள்ளன. மருதமலை முருகன் கோவில்  பல வேத புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.

மருதமலை முருகன் கோவில் சிறப்பம்சங்கள்

திருமுருகன்பூண்டி ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகள் கூட மருதமலை கோயில் பற்றி குறிப்பிடுகின்றன. இந்தக் கல்வெட்டுக் குறிப்புகளைக் காணும்போது மருதமலை கோயில் குறைந்தபட்சம் 1200 ஆண்டுகள் பழமையானது என்று கூறுகின்றனர். முருகக் கடவுளின் பிற கோயில்களைப் போலவே மருதமலை கோயிலும் மேற்குத் தொடர்ச்சியின் விரிவான இந்த மலை உச்சியில் அமைந்துள்ளது.  இக்கோவிலில் முதன்மைக் கடவுளான முருகன், சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.

மருதமலை முருகன் கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.  மருதமலைக் கோயிலின் ஆதி மூலஸ்தானத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வயானையுடன் மூவரும் சுயம்புலிங்க வடிவில் உள்ளனர். இங்கு வள்ளியின் சுயம்பு உருவம், தெய்வானையை விட சற்று உயரமாகக் காணப்படுகிறது. ஆதிமூலஸ்தான கருவறை விமானமும், முன்புறம் தைப்பூசக் கல்யாண உற்சவ மண்டபமும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன.

மருதமலை முருகன் கோவில் சிறப்பம்சங்கள்

மருதமலையின் அடிவாரத்திலிருந்து நடைப்பயணமாகச் செல்லும் போது, பாதையின் தொடக்கத்தில் தான்தோன்றி விநாயகர் சன்னிதியும், சற்று மேலே சென்றால் இடும்பன் சன்னிதியும் அமைந்துள்ளன. மலையின் மீது சென்றதும் அங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் இறுதிப் படிக்கட்டுகள் ஆதிமூலஸ்தானத்திற்கு  எதிராக உள்ளன. இப்பாதைவழிச் செல்பவர்கள் ஆதி மூலஸ்தானத்திற்க்கும் தண்டாயுதபாணி சன்னிதி மண்டபத்திற்க்கும் இடையே  பஞ்சமுக விநாயகர் கோவில் உள்ளது. பொதுவாக அரசமரத்தடியில் காணப்படும் விநாயகர் இங்கு அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்களுக்கடியில் ஐந்து முகங்களில் அமைந்துள்ளார்.நடைபயணமாக வருவோர் இந்த விநாயகரை தாண்டிதான் செல்லவெண்டும்.

மருதமலை முருகன் கோவில் சிறப்பம்சங்கள்

பஞ்சமுக விநாயகரையும் வழிபட்டபின் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்லலாம். இராஜகோபுர நுழைவாயிலைத் தாண்டினால் கல்லாலான கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. அவர் முன் வைக்கப்பட்டுள்ள பெரிய மயில்முக குத்துவிளக்கு ஒன்று உள்ளது. மலையின் மீது படியேறி கோவிலுக்கு நடந்து செல்லலாம்  அல்லது கோயில் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கட்டணச் சிற்றுந்துகளில் மலைப்பாதையில் செல்லலாம். தனியார் இரு சக்கர வாகனங்களும், மகிழுந்துகளும் கட்டணம் செலுத்தி மலைப்பாதை வழியாக மேலே கோயிலுக்குச் செல்லலாம்.

விழா மற்றும் தைப்பூசம் போன்ற நாட்களில் பக்தர்கள் மருதமலை முருகனுக்கு பால்குடம் தூக்கி  வந்து அபிஷேகம் செய்கின்றனர். இங்கு தல விருட்சமாக இருக்கும் மருத மரத்தில் திருமணம், மற்றும் குழந்தை பாக்கியத்திற்காக புனித கயிறு மற்றும் தொட்டில்களை கட்டுகின்றனர். மருத மரங்கள் நிறைந்திருக்கும் இவ்விடத்தில் கோவில் கொண்ட முருகனுக்கு மருதாச்சல மூர்த்தி என்ற பெயரும் உண்டு என கூறப்படுகிறது.

முருகன் கோயிலுக்கு அருகில் பாம்பாட்டி சித்தரின் குகைக்கோயில் அமைந்துள்ளது.  இங்கிருக்கும் பாம்பாட்டி சித்தரின் சந்நிதியில் தரப்படும் விபூதி பல நோய்களை போக்கும் தன்மை கொண்டது என மக்கள் நம்புகின்றனர்.  வரலாற்று சிறப்புமிக்க பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான பாம்பாட்டி சித்தர், இந்த குகையில் சில காலம் வசித்து  வந்ததாக கூறப்படுகிறது. எப்படிப்பட்ட நாக தோஷங்களை கொண்டவர்களும் இங்கு வந்து வழிபடும் போது அந்த தோஷங்களை எல்லாம் பாம்பாட்டி சித்தர் நீக்கி அருள் புரிவதாக கூறப்படுகிறது.

இப்படி பல சிறப்பிகளை உடைய மருதமலையில் வேறெங்கும் காணமுடியாத வகையில் முருகன் குதிரையின் மீது அமர்ந்திருக்கும் சிலை இக்கோவிலில் காணமுடிகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP